சத்குரு ஸ்ரீஅனிருத்தரின் பக்தி பாவனையுலகத்திலிருந்து - பார்வதி மாதாவின் நவ துர்கை வடிவங்களின் அறிமுகம் – பகுதி 11

 

ஆதாரம்:: சத்குரு ஸ்ரீஅனிருத்த பாப்பூவின் தினசரி ‘ப்ரத்யக்ஷ''வில்’ துளசிபத்ர' தலையங்கத்தின் தலையங்க எண் 1400-1401

சத்குரு ஸ்ரீஅனிருத்த பாப்பூ அவர்கள் துளசிப்பத்திரம் - 1400-ல் எழுதியுள்ளவை, 

பிரம்மவாதிணி லோபாமுத்திரை அனைத்து பிரம்மரிஷிகள் மற்றும் பிரம்மவாதினிகளுடன் ஆதிமாதாவின் ‘ஸ்ரீவித்யா’ வடிவத்திற்குப் பிரணாம் செய்தார். அனைவரும் லோபாமுத்திரையின் தலைமையில் ஆதிமாதா ஸ்ரீவித்யாவின் முன் ‘தியானத்திற்கு’  அமர்ந்தனர்.

இவர்களை மற்ற அனைவரும் ஒரே பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த பிரம்மரிஷிகள் மற்றும் பிரம்மவாதினிகளின் முகங்களில் மெல்ல மெல்ல ஒரு ஆனந்தமான, சாந்தமான மற்றும் பிரசன்னமான உணர்வு தோன்றியது. அந்த உணர்வு வளர்ந்துகொண்டே இருந்தது.

ஆனால் லோபாமுத்திரையின் முகம் மட்டும் முற்றிலும் நிசப்தமாகவும்,அமைதியாகவும் இருந்தது. அவளது முகத்தில் பிரசன்ன உணர்வோ அல்லது கவலையோ இல்லை. இதைப் பார்த்து அனைவரும் மிகவும் ஆவலாக மாறினர்.

பகவான் த்ரிவிக்கிரமர் ‘ஓம் நமச்சண்டிகாயை’ என்ற மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார். பிரம்மவாதினி லோபாமுத்திரையின் தலையில் தன் வரதஹஸ்தத்தை வைத்தார்.

அதே கணம் லோபாமுத்திரையின் முகத்திலும் அதே ஆனந்தமான, சாந்தமான மற்றும் பிரசன்னமான உணர்வு பரவத் தொடங்கியது.

பிரம்மவாதினி லோபாமுத்திரையின் உதடுகள் பிரிந்து, அவளும் ‘ஓம் நமச்சண்டிகாயை’ என்று ஜபம் செய்யத் தொடங்கினாள்.

அதனுடன், மற்ற அனைத்து பிரம்மரிஷிகளும் மற்றும் பிரம்மவாதினிகளும் தங்கள் கண்களைத் திறந்தனர்.

ஆனால் பிரம்மவாதினி லோபாமுத்திரையின் கண்கள் மட்டும் இன்னும் மூடியே இருந்தன. அவள் உரக்க மந்திரம் சொன்னாலும், அவள் இன்னும் ‘தியானத்தில்தான்’ இருக்கிறாள் என்பது அனைவருக்கும் தெளிவாகப் புரிந்தது.

லோபாமுத்திரையின் தலையில் இருந்த பகவான் த்ரிவிக்கிரமரின் வரதஹஸ்தம் அவள் கூந்தலில் இருந்து விலகியதும், பிரம்மவாதிணி லோபாமுத்ரா பத்மாசனத்தில் இருந்து எழுந்து நின்றார். அவர் தன் இரு கைகளையும் கூப்பினார்; ஆனால் அப்போதும் அவர் முழுமையாக ‘தியானத்தில்தான்’ இருந்தார்.

அந்த நேரத்தில் லோபாமுத்திரையின் முகம் ஆனந்தத்தை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தது. ஆனந்தத்தின் பல்வேறு நிறங்கள், மூலங்கள், பிரவாகங்கள், கடல்கள் எல்லாம் அவளது ஒரே முகத்தில் ஆனந்தமாக வாழ்வது போல் தோன்றியது.

பகவான் த்ரிவிக்கிரமரின் வார்த்தைகள் அனைவரின் காதுகளிலும் கேட்டன, “இது பிரம்மானந்த நிலை. இதுவே உண்மையான முழுமையான நிலையும், முழுமையான வேகமும்.

இத்தகைய பிரம்மானந்தம் ஸ்ரீசாம்பவிவித்யாவின் பதினேழாவது மற்றும் பதினெட்டாவது படிகளைக் கடந்த பின்னர்தான் கிடைக்கிறது.

இந்த மற்ற அனைத்து பிரம்மரிஷிகள் மற்றும் பிரம்மவாதினிகளுக்கும் இந்த பிரம்மானந்தம் கிடைத்துள்ளது. ஆனால் மூத்த பிரம்மவாதினி லோபாமுத்திரையிடம் மட்டும் இன்னும் ஒரு தனி விஷயம் இருக்கிறது -

- லோபாமுத்திரை செய்த ஆதிமாதாவின் பக்திப் பிரசாரத்தால், அதாவது கோடிக்கணக்கான குணசங்கீர்த்தனங்களால், அதுவும் ‘நான் குணசங்கீர்த்தனம் செய்கிறேன்’ என்ற உணர்வு சிறிதும் இல்லாமல் இருந்ததால், இந்த லோபாமுத்திரை தனது பிரம்மானந்தத்தையும்

ஆதிமாதாவின் பாதங்களில் ஒரு கணத்தில் அர்ப்பணிக்கத் தொடங்கினாள்.

லோபாமுத்திரை அர்ப்பணித்த அந்த பிரம்மானந்தம், ஆதிமாதா தோன்றிய மூல இடத்திற்கு, அதாவது ஸ்ரீதத்தகுருவின் பாதங்களுக்குச் சென்று சேர்ந்தது.

இந்த வழியில் லோபாமுத்திரையின் பிரம்மானந்தத்துடன் சச்சிதானந்தம் இணைந்தது. இதன் காரணமாக இந்த பிரம்மவாதினி லோபாமுத்திரை, தன் ஒவ்வொரு செயலையும் செய்யும்போதுகூட எப்போதும் பிரம்மானந்தத்தில்தான் மூழ்கி இருக்கிறார்.

ஸ்ரீசாம்பவிவித்யாவின் பதினெட்டு நிலைகளையும் கடந்த பிறகுதான் இந்த சச்சிதானந்தம் கிடைக்கிறது.

இத்தகைய நிலை லோபாமுத்திரையிடம் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் அவள் ‘ஸ்ரீவித்யாசங்கஹிதா’, ஸ்ரீசாம்பவிவித்யா, ஸ்ரீசாம்பவிமுத்திரை, ஸ்ரீசாம்பவித்யானம் மற்றும் சச்சிதானந்த உபாசனையின் மிக உயர்ந்த வழிகாட்டி குருவாக இருக்கிறார்.”

பகவான் த்ரிவிக்கிரமர் ‘அவதூதசிந்தன.’ என்று சொன்னதும், பிரம்மவாதினி லோபாமுத்திரையின் கண்கள் திறந்தன. அப்போது அவர் ‘....ஸ்ரீகுருதேவதத்த’ என்ற வார்த்தைகளையும் உச்சரித்தார்.


பகவான் த்ரிவிக்கிரமர் லோபாமுத்திரைக்குப் பேச அனுமதி கொடுத்ததும் அந்த மூத்த பிரம்மவாதினி பேசத் தொடங்கினார், “ஹே பிரியமான ஆப்தகணங்களே! ஸ்ரீசாம்பவிவித்யாவின் பதினேழாவது மற்றும் பதினெட்டாவது நிலைகளின் (படிகளின்) அதிஷ்டாத்ரி, அவள்தான் ஒன்பதாவது நவ துர்கை ‘சித்திதாத்ரி’.

இந்த சித்திதாத்ரிதான் நவராத்திரியின் நவமி திதி இரவு மற்றும் பகலின் நாயகி.

ஸ்ரீசாம்பவிவித்யாவின் பதினேழாவது நிலைக்கு வரும் சாதகனுக்கு, பகவான் த்ரிவிக்கிரமர் தானே ‘ஸ்ரீசாம்பவித்யானம்’ கற்பிக்கிறார். மேலும், அதை அவரே பயிற்றுவிக்கிறார்.

சிறிது நேரத்திற்கு முன் நாங்கள் அனைவரும் எந்த தியானத்தில் அமர்ந்ததால் பிரம்மானந்தத்தால் நிறைந்திருந்தோமோ, அந்த

தியானம்தான் ‘ஸ்ரீசாம்பவித்யானம்’.

இந்த பதினேழாவது படியில் பகவான் த்ரிவிக்கிரமர் அந்த சாதகனின் கையை நவதுர்கை சித்திதாத்ரியின் கையில் கொடுக்கிறார்.

அந்த மாதா சித்திதாத்ரி அந்த சாதகனைத் தன் குழந்தையைப் போல் மனிதர்களின் 1008 வருடங்கள் தன் அருகிலேயே கவனித்துக்கொள்கிறார். அப்போதுதான் ஸ்ரீசாம்பவித்யானம் முழுமையடைகிறது.

பதினெட்டாவது படியில் இந்த சித்திதாத்ரி பகவான் த்ரிவிக்கிரமரின் சம்மதத்துடன் அந்த சாதகனின் கையை மீண்டும் பகவான் த்ரிவிக்கிரமரின் கையில் கொடுக்கிறார்.

பகவான் த்ரிவிக்கிரமர் சிறிதும் தாமதிக்காமல், அந்த சாதகனை ஒரு குழந்தையைப் போல் தன் இரண்டு கைகளாலும் தூக்கிக்கொள்கிறார்.

அந்த சாதகனை எட்டு வயது குழந்தையாக மாற்றி, ஆதிமாதாவின்’ மணீத்விபநிவாசினி', வடிவத்திற்கு அதாவது ‘சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அஷ்டாதசபுஜ மஹிஷாசுரமர்த்தினி’ வடிவத்திற்கு அதாவது ‘லலிதாம்பிகா’ வடிவத்திற்கு அதாவது மூல ‘ஸ்ரீவித்யா’ வடிவத்திற்கு அழைத்துச் சென்று சேர்க்கிறார்.

மணித்வீபத்தில் அந்த குழந்தை, குழந்தைப் பருவ விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டு எப்போதும் இருக்கும் - அதாவது பிரம்மரிஷி அல்லது பிரம்மவாதிணியாக.

மணித்வீபத்தில் குழந்தையாக இருக்கும்போது, இந்த அனைத்து சாதகர்களும் பின்னர் பூமியிலோ அல்லது மனிதர்கள் வசிக்கும் வேறு எந்த கிரகத்திலோ தங்கள் மூல வடிவத்தில் கூட இருப்பார்கள், வேலை செய்வார்கள். சில நேரங்களில் பிறப்பார்கள். அந்த இடத்தின் நிலைக்கு ஏற்ப மரணத்தையும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இவர்களின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் எந்த அர்த்தமும் இல்லை. இவர்கள் எப்போதும் ‘பிரம்மானந்தி’களாகவே இருப்பார்கள்.”

பிரம்மவாதினி லோபாமுத்திரை இவ்வளவு சொல்லி முடித்ததும் ஆதிமாதா ஸ்ரீவித்யாவின் பாதங்களில் பல வண்ணங்களில் வாசனை மலர்களை அர்ப்பணித்தார். அதனுடன் ஆதிமாதாவின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மணித்வீப-வடிவம் அங்கு பிரகாசித்தது.

ஆதிமாதாவின் இடதுபுறம் நான்கு, வலதுபுறம் நான்கு என ப்ரதிபதா முதல் அஷ்டமி வரையிலான நவதுர்கைகள் நின்றிருந்தனர்.

மற்றும் ஆதிமாதாவின் தலைக்கு மேல் தங்க தாமரை குடை பிடித்து ஒன்பதாவது நவதுர்கை சித்திதாத்ரி நின்றிருந்தார்.

இவரது முகத்திற்கும் ஆதிமாதாவின் முகத்திற்கும் ஒரு துளி கூட வித்தியாசம் இல்லை.

பாப்பூ அவர்கள் துளசிப்பத்திரம் - 1401-ல் மேலும் எழுதியுள்ளவை,

ஒன்பதாவது நவதுர்கை சித்திதாத்ரி, அங்கிருந்த அனைவரின் முன்னால் வந்து கைலாசத்தின் பூமியைக்கூட பாதத்தால் தொடாமல் நின்றார்.

மாதா சித்திதாத்ரியின் நிறம் புதிதாகப் பூத்த ரோஜா இதழ்களைப் போல இருந்தது.

அவளது கண்கள் மிக அகலமாக, ஊடுருவும் தன்மையுடன் இருந்தன. அவளது பார்வை எதையும் ஊடுருவிச் செல்லும் போல் தோன்றியது.

அவள் நான்கு கைகளைக் கொண்டவள். அவளது நெற்றிப் பகுதியில் மூன்றாவது கண்ணிற்குப் பதிலாக குங்குமத் திலகம்தான் தெரிந்தது.

அவளது நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதை மற்றும் பத்மம் ஆகிய ஆயுதங்கள் இருந்தன.

அவளது ஆடை சிவப்பு நிறத்திலும், தங்கக் கரை கொண்டதாகவும் இருந்தது.

மற்றும் முக்கியமாக அவளது ஒவ்வொரு அசைவும் மிக மென்மையாகவும், நுட்பமாகவும், மெதுவாகவும் இருந்தது.

மாதா சித்திதாத்ரியின் முகத்தில் ஒரே ஒரு உணர்வு பிரசன்னமாகத் தோன்றியது, அது ‘சமாதானம்’.

அந்த சமாதானம் மாதாவின் முகத்திலிருந்து கிளம்பி தன் சொந்த சக்தியால் ஒவ்வொரு பக்தனிடமும் தானாகவே சென்றடைந்தது.

பகவான் த்ரிவிக்கிரமர் சைகை செய்ததும், பிரம்மவாதினி லோபாமுத்திரை நவதுர்கை சித்திதாத்ரியின் கழுத்தில் வாசனை மல்லிகை மலர் மாலையை அர்ப்பணித்தார். அவளது பாதங்களில் சம்பங்கி மற்றும் ரோஜா மலர்களை அர்ப்பணித்தார்.

அடுத்த விஷயத்தைப் பார்த்து அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டனர்; ஏனெனில் சித்திதாத்ரியின் பாதங்களில் வைக்கப்பட்ட ஒவ்வொரு மலரும் பிரம்மவாதினி லோபாமுத்திரையின் கழுத்தில் வந்து ஒரு அழகான மலர் மாலையாக மாறியது.

தன்னிடமிருந்த அனைத்து மலர்களையும் அர்ப்பணித்த பிறகு லோபாமுத்திரை ஆதிமாதா மற்றும் சித்திதாத்ரியின் அனுமதியைப் பெற்று அங்கிருந்த அனைவரிடமும் பேசத் தொடங்கினார், “ஹே பாக்கியம் உள்ள ஆப்தகணங்களே! நீங்கள் அனைவரும் உண்மையிலேயே மிகவும் பாக்கியசாலிகள். ஏனெனில் உங்கள் அனைவருக்கும் சரியாக வரிசையாக ஒன்பது நவதுர்கைகளின் தரிசனமும் கிடைத்தது. அவர்களின் மகிமைகளையும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த பிரபஞ்சத்தில் அனிமா, லஹிமா, பிராப்தி, பிராகாம்யம், மஹிமா, ஈசித்வம், வசித்வம், சர்வகாமாவசாஹிதா, சர்வக்ஞத்வம் போன்ற எண்ணற்ற சித்திகள் உள்ளன.

அவற்றில் அனிமா, லஹிமா, மஹிமா போன்றவை எட்டு முக்கிய சித்திகளாகக் கருதப்படுகின்றன.

பூமியில் மட்டுமல்ல, மற்ற கிரகங்களிலும் பலபேர் செய்யும் தவங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சித்தி கிடைப்பதற்காகவே இருக்கும்.

எந்த தபஸ்வி எந்த சண்டிகா குல உறுப்பினரைத் தனது ஆராத்ய தெய்வம்  என்று கருதி தவம் அல்லது சாதனை செய்கிறாரோ, அவருக்கு அந்த தெய்வத்திடம் இருந்து வரம் கிடைக்கிறது. அந்த வரங்கள் சித்திகளாக இருந்தால், இந்த ஒன்பதாவது நவதுர்கை சித்திதாத்ரி அந்த சாதகனுக்குக் கிடைக்கும் சித்தியின் மீதும் தன் பார்வையை வைத்திருப்பார்.

ஏனெனில் நவதுர்கை சித்திதாத்ரியின் பிரபாமண்டலத்திலிருந்துதான் அனைத்து வகையான சித்திகளும் உருவாகின்றன. அங்கிருந்துதான் இந்த அனைத்து சித்திகளின் உண்மையான பணி முழு பிரபஞ்சத்திலும்

நடைபெறுகிறது.

உண்மையில், சித்திகளை எதிர்பார்ப்பது தவறு. ஏனென்றால் சித்தி கிடைத்ததால் கிடைக்கும் , அதிகாரம் பயன்படுத்தும் புத்தி நியாயமானதாகவும் தூய்மையானதாகவும் இல்லாவிட்டால், அந்த சாதகன் அசுரனாக மாற நீண்ட நேரம் எடுக்காது.

மற்றும் முக்கியமாக உண்மையான பக்தனுக்கு எந்த சித்தியையும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் ஒரு உண்மையான பக்தன் இரண்டு நவராத்திரிகளிலும் ஆதிமாதா / நவதுர்கைகளை பக்தியுடன் முழு மனதுடன் தொடர்ந்து பூஜிக்கும்போது, ஆதிமாதாவின் சரிதத்தை அடிக்கடி படிக்கும்போது, அவள் குணசங்கீர்த்தனத்தில் முழுமையாக ஈடுபடும்போது, அவனது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சித்திகளின் வேலைகளையும் இந்த மாதா சித்திதாத்ரி, பிரார்த்தனை செய்யாமலேயே அந்த பக்தனுக்கு தொடர்ந்து அளித்துக்கொண்டே இருப்பார்.

அவ்வளவு மட்டுமல்ல, ஆதிமாதாவின் இந்த சண்டிகா குலத்தில் உள்ள அனைத்து புத்திரர்களும் மற்றும் கன்னியர்களும், இவர்களுக்கு முழுமையாக பக்தி செய்பவர்களுக்கும் இந்த நவதுர்கை சித்திதாத்ரி சரியான நேரத்தில் சரியான சித்திகளின் வேலைகளை நிச்சயமாக அளித்துக்கொண்டே இருப்பார்.

அவளது முகத்தில் எப்போதும் இருக்கும் சமாதானம் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு ஆறுதலை அளிக்கிறது. அதாவது உங்கள் பக்தியுடன் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவள் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறாள். உங்கள் சிறிய சேவையினாலும் அவள் பிரசன்னம் அடைகிறாள். ஆனால் உங்களுக்கு சித்திகள் தேவைப்பட்டால், அப்போது அவளது முகத்தில் உள்ள சமாதானம் உங்களுக்குத் தெரியாது.

ஒவ்வொரு பிரம்மரிஷி மற்றும் பிரம்மவாதினியிடமும் பல்வேறு வகையான சித்திகள் உள்ளன. அவர்களுக்குத் தேவையான சித்திகள் அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம்.”

இவ்வளவு சொல்லி மூத்த பிரம்மவாதினி லோபாமுத்திரை திடீரென நிறுத்தினார். பகவான் த்ரிவிக்கிரமர் பேசத் தொடங்கினார், “ஹே என் குழந்தைகளே! இந்த அனைத்து பிரம்மரிஷிகளுக்கும் மற்றும் பிரம்மவாதினிகளுக்கும் ஸ்ரீசாம்பவிவித்யாவின் பதினெட்டாவது படியில் (கட்சத்தில்) முதலில் 108 சித்திகள் கிடைக்கும். அவர்களின் விருப்பப்படி அனைத்து சித்திகளும் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் உண்மையான சூட்சமம் இங்கேதான் இருக்கிறது. எந்த ஒருவரும் கிடைத்த அனைத்து சித்திகளையும் உடனடியாக ஆதிமாதாவின் பாதங்களில் அர்ப்பணிக்காமல், அவற்றிலிருந்து விடுபட விரும்பாமல் இருந்தால், அவர் ‘பிரம்மரிஷி’யாக மாற முடியாது.

பதினெட்டாவது படியில் கிடைத்த அனைத்து சித்திகளும் ஆதிமாதாவின் பாதங்களில் அர்ப்பணிக்கப்படும்போது, அவர்களின் இந்த நிஷ்காமிய உணர்வைக் கண்டு ஆதிமாதா அந்தந்த பிரம்மரிஷி அல்லது பிரம்மவாதினியின் அனைத்து சித்திகளையும் இந்த சித்திதாத்ரியிடம் ஒப்படைக்கிறார்.

இந்த சித்திதாத்ரி ஒவ்வொருவரின் சித்திகளையும் தன் பிரபாமண்டலத்தில் அவரவர் பெயரில் பாதுகாத்து வைக்கிறார்.

அதன் பிறகுதான் ஆதிமாதா, ஸ்ரீதத்தாத்ரேயர் மற்றும் சித்திதாத்ரி அந்தந்த பிரம்மரிஷி அல்லது பிரம்மவாதினிக்கு, அவர்களிடம் இல்லாத சித்திகளை சித்திதாத்ரியை நினைப்பதன் மூலம் பயன்படுத்தும் வரத்தை அளிக்கிறார்கள்.”

பிரம்மவாதினி லோபாமுத்திரை மனதிற்குள்ளேயே பகவான் த்ரிவிக்கிரமருக்குப் பிரணாம் செய்தார். மேலும், “ஹே ஆப்தகணங்களே! குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களுக்காக இந்த ஒன்பதாவது நவதுர்கை சித்திதாத்ரி அவர்களின் அனைத்து வகையான முன்னேற்றத்திற்காகவும் தயாராக இருக்கிறார்.

மற்றவர்களுக்கு அநியாயமாகத் துன்பம் தராமல், ஒரு பக்தனுக்கு எவ்வளவு இன்பம் தேவையோ, அவ்வளவையும் இந்த நவதுர்கை சித்திதாத்ரி அந்த பக்தனுக்குத் தொடர்ந்து அளித்துக்கொண்டே இருப்பார்.

முக்கியமாக இந்த நவதுர்கை சித்திதாத்ரியும், ஆதிமாதாவின் அனைத்து வித்தைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சித்தேஸ்வரி வடிவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

பார்வதி தன் வாழ்க்கையின் இந்த ஒன்பதாவது நிலைக்குப் பிறகுதான் அன்னபூர்ணா, சதாபூர்ணா, பாவபூர்ணா, பிரேமபூர்ணா மற்றும் சக்திபூர்ணா ஆகிய ஐந்து விதமான செயல்களால் ஆதிமாதாவின் ‘க்ஷமா’ என்ற இயல்பான உணர்வு ஒவ்வொரு

பக்தனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இடைவிடாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

அவள் எப்போதும் அப்படியே இருப்பாள்.”


Comments