தலைப்பு - சத்குரு ஸ்ரீஅனிருத்தரின் பாவனையுலகத்திலிருந்து - பார்வதி மாதாவின் நவ துர்கை வடிவங்களின் அறிமுகம் - பகுதி 8

தலைப்பு - சத்குரு ஸ்ரீஅனிருத்தரின் பாவனையுலகத்திலிருந்து - பார்வதி மாதாவின் நவ துர்கை வடிவங்களின் அறிமுகம் - பகுதி 8

சத்குரு ஸ்ரீஅனிருத்த பாபு அவர்கள் துளசிபத்திரம் - 1394-ல் எழுதியுள்ளவை,

பிரம்மவாதினி லோபமுத்திரை ஏழாவது நவ துர்கையான காலராத்திரியின் பாதங்களில் தலையை வைத்து, அவளை பணிவுடன் வணங்கிப் பேசத் தொடங்கினாள், “அன்பர்களே! இந்த ஏழாவது நவ துர்கை காலராத்திரி, சாம்பவி வித்தையின் பதின்மூன்று மற்றும் பதினான்காவது படிகளின் (கட்சங்களின்) அதிஷ்டாத்ரி மற்றும் ஐப்பசி மாத சுக்ல பட்ச சப்தமி தினத்தின் பகல் மற்றும் இரவின் நாயகி ஆவாள்.

இந்த பகவதி காலராத்திரி, பக்தர்களின் எதிரிகளை முழுமையாக அழிப்பவள். இவளை பூஜிப்பதால், பூதம், பிரேதம், ராட்சசன், அசுரன், தானவன், தமாசாரி மாந்திரீகன் மற்றும் பாவி எதிரிகள் என அனைவரும், ஒரு வருடம் வரை அந்த பக்தனை நெருங்கக்கூட முடியாது.”

எல்லா சிவகணங்களும் குழப்பமடைந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். “நாங்கள் பிசாசு வடிவில் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு இவளைப் பார்த்தால் பயம் ஏற்படுவதற்குப் பதிலாக, இவள் மீது மிகுந்த அன்புதான் ஏற்படுகிறது.”

லோபமுத்திரை புன்னகைத்து, “இவள் அப்படிப்பட்டவள்தான். நீங்களும் ‘சிவகணங்கள்’தான், வெறும் பிசாசுகள் இல்லை. இப்போது உங்கள் உருவமும் மாறிவிட்டது.”

அனைத்து ரிஷி சமூகமும் எழுந்து நின்று லோபமுத்திரையிடம், “நாங்கள் காடுகள், வனங்கள், அடர்ந்த காடுகள், பல சுடுகாடுகள், பெரிய நரசங்காரம் நடந்த பழங்காலப் போர் நிலங்கள் வழியாகத் தனியாகப் பயணிக்க வேண்டும். இவளுடைய பெருமைகளைக் கேட்டு, எங்களுக்கு இந்த நவ துர்கை காலராத்திரியின் பாதங்களில் தலை வைக்க ஆசை ஏற்படுகிறது. எங்களுக்கு அதற்கான அனுமதி கிடைக்குமா?” என்று வேண்டிக்கொண்டனர்.

பிரம்மவாதினி லோபமுத்திரை கேள்விக்குறிய பார்வையுடன் பகவான் திரிவிக்கிரமனைப் பார்த்தாள். அதேசமயம், தனது தாயின் அனுமதியுடன் பகவான் திரிவிக்கிரமர் மீண்டும் தனது ஒருமுக வடிவில் அங்கிருந்த அனைவரிடமும் வந்து, பிரம்மவாதினி அருந்ததியிடம் லோபமுத்திரையின் கைகளை எடுத்து அனைவருக்கும் காட்டும்படி சொன்னார். மேலும், லோபமுத்திரையின் தலையில் இருந்த ஆடையை விலக்கி அவளது நெற்றிப் பகுதியைக் காட்டும்படி கூறினார்.

அருந்ததி அவ்வாறு செய்ய, அனைத்து மகரிஷிகளும், ரிஷிவர்களும், ரிஷிகுமாரர்களும் மிகவும் ஆச்சரியமடைந்தனர், சற்று பயந்தும் போயினர்.

ஏனெனில், பிரம்மவாதினி லோபமுத்திரையின் தலை மற்றும் கைகளில் எங்கு பகவதி காலராத்திரியின் பாதங்கள் பட்டிருந்தனவோ, அங்கிருந்து பல மின்னல் கீற்றுகள் லோபமுத்திரையின் சஹஸ்ராரச் சக்கரத்தில் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தன. மேலும், அவளது கைகளிலிருந்து அக்னி ஜுவாலைகள் அவளது உடலில் உள்ள அனைத்து 72,000 நாடிகளிலும் புகுந்து ஆனந்த நடனம் புரிந்துகொண்டிருந்தன.

இதைக் கண்டதும் மகரிஷிகள் கூட பயந்தனர். அதைப் பார்த்த பகவான் திரிவிக்கிரமர், “இந்தக் காலராத்திரி அப்படிப்பட்டவள்தான். இந்த ஜுவாலைகள் மற்றும் மின்னல் கீற்றுகள், பிரம்மவாதினி லோபமுத்திரைக்கு எந்த விதத்திலும் வேதனை அல்லது துன்பம் தரவில்லை. மாறாக, இந்த மின்னல் கொடிகளும் ஜுவாலைகளும் பிரம்மவாதினி லோபமுத்திரையின் சஹஸ்ராரத்தில் உள்ள அனைத்து சித்திகளையும் எழுப்புகின்றன. அவளது உடலில் உள்ள அனைத்து 108 சக்தி மையங்களும் புனித யாக குண்டங்களாக மாறிவிட்டன.

இத்தகைய ஒளியைத் தாங்குவது சாதாரண மனிதனால் மட்டுமல்ல; மகரிஷிகளாலும் கூட முடியாது.

எட்டாவது நவதுர்கை மகாகௌரியின் உருவம் எவ்வளவு அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருந்தாலும், அவளது பாதங்களின் நேரடித் தொடுதலால் மனித உடலின் அனைத்து 108 சக்தி மையங்களும் மிகவும் குளிர்ந்து, அமைதியாகின்றன. 72,000 நாடிகளிலிருந்தும் சந்திர ஒளி வெள்ளம் போல் பாயத் தொடங்குகிறது. அந்த அதிக குளிர்ச்சியையும் சாதாரண பக்தனும் மகரிஷிகளும் கூட தாங்க முடியாது.

ஒன்பதாவது நவ துர்கை சித்திதாத்ரி மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன் இருக்கிறாள். ஆனால் அவள் மணித்வீப மாதாவோடு ஒன்றிணைந்து இருக்கிறாள்.

இந்த எல்லா விஷயங்களாலும், இந்த மூவரின் சிலைகளை பூஜிப்பது மிகவும் எளிதாக இருந்தாலும், அவர்களின் நேரடி வடிவங்களை தியானம் செய்வது மகரிஷிகளுக்கும் கூட சாத்தியமில்லை.

ஆனால் இந்த மூவரின் நேரடி பூஜையின் மற்றும் நேரடி தியானத்தின் அனைத்துப் பலன்களும், ஐப்பசி மாத சுக்ல பட்ச நவராத்திரியின் பஞ்சமி அன்று மாதா லலிதாம்பிகையை பூஜை செய்தால் எளிதாகப் பெறலாம். 

ஏனெனில் பஞ்சமியின் நாயகி ஸ்கந்தமாதா ஆவாள். லலிதாம்பிகை அனைத்து பக்தர்களுக்கும் நேரடியான பாட்டியாகவே இருக்கிறாள்.

இந்த ஆதிமாதா ‘லலிதாம்பிகை’ வடிவில் எப்போதும் ‘லலிதாபஞ்சமி’ அன்றுதான் வெளிப்படுகிறாள். அப்போது காலராத்திரி, மகாகௌரி மற்றும் சித்திதாத்ரி அவளது முக்கிய சேனாபதிகளாக இருப்பார்கள்.

லலிதாபஞ்சமியின் பூஜையை விவரிக்க எனக்கும் பல நாட்கள் ஆகும்.”

இவ்வளவு சொல்லி பகவான் திரிவிக்கிரமர் காலராத்திரிக்கும் ஆதிமாதாவிற்கும் வணக்கம் தெரிவித்தார்.

மேலும் அவருடன் சேர்ந்து அனைத்தும் ஒன்பது நவதுர்கா, தஷமஹாவித்யா சப்தமாகமாத்ருகா, 64 கோடி சாமுண்டா ஏனையோறும் அங்கு கூடினர்.

பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக ஆதிமாதா மஹிஸாசுரமர்த்தினியின் உரேம கால்களில் புகுந்தனர்.

அதேசமயத்தில் மணிதீபவாசினி ஆதிமாதாவின் மூன்றாவது கண்களிலிருந்து ஒரே சமயத்தில் உக்கிரமாக, சாந்தமாக உள்ள பிரகாச ஓளி எங்கும் பரவியது.

மேலும் அத்துடன் ஆதிமாதாவின் மூலருபம் வெளிப்பட்டு அங்கே ‘லலிதாம்பிகா' சுயரூபம் தெரிந்தது.

லலிதாம்பிகே பிரகடனம் ஆனவுடன் அனைவர்க்கும் அபயவஜனம் அளித்தது,”யாருக்கு நவராத்திரியில் வேறு தினத்தில் நவராத்திரி பூஜை செய்யமுடியுமோ மேலும் யாருக்கு நவராத்திரி வேறு தினத்தில் நவராத்திரி பூஜை செய்யமுடியவில்லையோ, அவர்கள் அனைவர்க்கும் லலிதாபஞ்சமி தினத்தில் எனது ‘மஹிஸாசுரமர்த்தினி' சுயரூபத்தை என் செல்ல குழந்தைகள் செய்யும் பூஜை நவராத்திரி முழுவதுமாக செய்த பலனை அவரவர் மனோபாவங்களுங்கேற்ப கிடைக்கும்.

அந்த காலராத்திரி, மகாகௌரி மற்றும் சித்திதாத்ரி இவர்கள் மூவர்களின் பாதங்களில் தலைவைத்து நமஸ்கரிக்கும் பலன், மிகவும் சாந்தரூபமான லலிதாம்பிகை தினத்தில் மட்டும் என்னையும் திரிவிக்ரமையும் வில்வபத்திரத்தால் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

காரணம் நீங்கள் தற்போது பார்த்த அனைத்து சகல நவதுர்கா, அனைத்து என்னுடைய சகல சப்தமாத்ருகா, என்னுடைய சகல அவதாரம் மற்றும் 64 கோடி சாமுண்டா என்னுள் வசிக்கிறார்கள்.


பாபு அவர்கள் துளசிபத்திரம் - 1395-ல் மேலும் எழுதியுள்ளவை, 

அனைத்து பிரம்மரிஷிகளும் மற்றும் பிரம்மவாதினிகளும் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் லலிதாம்பிகையின் ‘லலிதாஷ்டக ஸ்தோத்திரத்தை’ சாமவேத முறைப்படி சொல்லத் தொடங்கினர். அதேசமயம் ‘லலிதாம்பிகை’ வடிவம் ‘மணித்வீப நிவாசினி’ வடிவத்தில் மீண்டும் கலந்தது.

அதேபோல், அந்த மணித்வீப நிவாசினி ஆதிமாதாவும் மறைந்து, ‘அஷ்டாதசபுஜ அனுசூயா’ மற்றும் ‘ஸ்ரீவித்யா’ ஆகிய இரண்டு வடிவங்களில் முன்பு போல் தோன்றினாள்.

இப்போது பிரம்மவாதினி லோபமுத்திரை முன்வந்து ‘காலராத்திரிம் பிரம்மஸ்துதாம் வைஷ்ணவீம் ஸ்கந்தமாதரம்’ என்ற மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினாள். அதேசமயம் ஏழாவது நவ துர்கை காலராத்திரி, அவளது வழக்கமான வடிவில்; ஆனால் மென்மையான ஒளியுடன் உருவெடுத்தாள்.

லோபமுத்திரை அவளை வணங்கிப் பேசத் தொடங்கினாள், “அன்பர்களே! சாம்பவி வித்தையின் பதின்மூன்று மற்றும் பதினான்காவது படியில் (கட்சத்தில்), ஒருவருடைய ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக வரும் அனைத்து எதிரிகளையும் அழிப்பது ஒவ்வொரு சாதகனுக்கும் மிகவும் அவசியம். ஏனெனில் அவ்வாறு செய்யாவிட்டால், தூய்மைக்கு எதிரான அசுரர்களும் அசுர குணமுடைய மனிதர்களும் அந்த சாதகனின் பயணத்தை கடினமாக்கிவிடுகிறார்கள்.

ஆகவே, அனைத்து அறுபகைவர்களையும் விட்ட சாதகனும், தவசியும் இப்போது பராக்கிரமமும் வீரமும் கொண்ட ஒரு வீரன் போல் செயல்பட வேண்டும்.

அதற்காக இந்த ஏழாவது நவ துர்கை காலராத்திரி மிகவும் விழிப்பாக இருக்கிறாள்.

ஏனெனில் பார்வதியும் கூட தனது வாழ்க்கை தபத்தில் ‘ஸ்கந்தமாதா’ மற்றும் ‘காத்யாயனி’ ஆகிய இரண்டு நிலைகளைக் கடந்த பிறகு, சில சமயங்களில் பரமசிவனுடன் தோளோடு தோள் நின்றும், பல சமயங்களில் தானே தனியாகவும் ஆயிரக்கணக்கான அசுரர்களுடன் போரிட்டுள்ளார். அந்த ஒவ்வொரு அசுரனையும் அவள் நிச்சயமாகக் கொன்றுள்ளார்.

அப்போது அவள் போர் நிலத்தில் வெளிப்படும் வடிவம்தான் ஏழாவது நவ துர்கை ‘காலராத்திரி’ - அவள் தனது பிள்ளைகளைக் காக்க எப்போதும் போருக்குத் தயாராக இருப்பாள்.

அன்புள்ளவர்களே! நன்றாகப் பாருங்கள். இவளுடைய சந்திர வாளிலும் கூட அதன் பிளேடின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கண் உள்ளது.

இவளுடைய உண்மையான பக்தன் தனது பக்தி சாதனையில் முன்னேறும்போது, அவனது குடும்ப வாழ்விலோ அல்லது ஆன்மிகத்திலோ தாக்குதல் நடத்த வரும் ஒவ்வொருவர் மீதும் பகவதி காலராத்திரியின் கண்கள் கூர்மையாக இருக்கும். சரியான நேரத்தில் இந்தக் காலராத்திரி தனது சந்திர வாளை அந்த துஷ்டன் அல்லது அசுரன் மீது வீசுகிறாள் - அவள் தனது இடத்திலிருந்து சற்றும் அசையாமல்.

ஏனெனில், அவளது சந்திர வாளின் இரு கண்களும் அந்த வாளுக்கு சரியான வழிகாட்டுதலைத் தருகின்றன. அந்த அசுரன் எங்கு மறைந்திருந்தாலும், அவனைச் சுற்றியுள்ள அனைத்துப் பாதுகாப்புச் சுவர்களையும் தடைகளையும் ஊடுருவி, இந்த சந்திர வாள் அந்த பக்தனின் எதிரியை அழித்துவிடுகிறது.

இப்போது அவளது கையில் உள்ள கண்டகாஸ்திரத்தைப் பாருங்கள். இதற்கு ஏழு முட்கள் (முள்ளுகள்) உள்ளன. இவற்றில் ஆறு முட்கள், ஆறு உலகங்களிலும் உள்ள மிக நுட்பமான தூய்மையின் எதிரிகளான அசுரர்கள் மற்றும் அசுரர்களின் தாக்கத்தை நீக்குகின்றன.

உண்மையில், இதுவரை ஆறாவது முள் பயன்படுத்தப்பட்டதே இல்லை. ஏனெனில் ஆறாவது உலகத்தில் அசுரர்கள் ஒருபோதும் நுழைய முடிந்ததில்லை.

ஏழாவது உலகத்தில் அசுர குணங்கள் நுழைவதே சாத்தியமில்லை.

அப்படியானால் இந்த ஏழாவது முள்ளின் பணி என்ன?

இந்த ஏழாவது முள், பதின்மூன்று மற்றும் பதினான்காவது படியில் (கட்சத்தில்) உள்ள சாம்பவி வித்தையின் சாதகனுக்கு, அவனது இதயத்தில் எதை செதுக்க வேண்டுமோ - பாவம், சொல், தியானம், படம், நிகழ்வு, அனுபவம், ஸ்தோத்திரம், மந்திரம், நாமம் - அவை அனைத்தையும் செதுக்குவதற்கு பகவதி காலராத்திரியிடமிருந்து கிடைக்கும் மிக உயர்ந்த எழுத்துச் சாதனமாகும்.

இந்த ஏழாவது முள் ஒரு பக்தனுக்குக் கிடைக்கும்போது, அவனுக்குத் தேவையானதை எழுதி முடித்த பிறகு, பகவான் திரிவிக்கிரமரே அந்த சாதகனுக்கு சாம்பவி வித்தையின் மந்திரத்தை தானே வழங்குகிறார்.

இங்கு அந்த பக்தனான சாதகனை, மாதா காலராத்திரி மகாகௌரி வடிவம் எடுத்து, அவனை சாம்பவி மாணவனாக ஏற்றுக்கொள்கிறாள்.

கௌதமா மற்றும் அகலிகையே, வாருங்கள். உங்களை வரவேற்கிறோம். நீங்கள் இங்கு வரும்வரை அனைத்தையும் கற்றுக்கொண்டுதான் வந்துள்ளீர்கள்.”

அனைத்து பிரம்மரிஷிகளும் மற்றும் பிரம்மவாதினிகளும் அங்கிருந்த மற்ற அனைவருடனும் எழுந்து நின்று கௌதம-அகலிகையை அன்புடன் வரவேற்றனர்.

லோபமுத்திரை மேலும் பேசத் தொடங்கினாள், “காலராத்திரியின் உக்கிரமான மற்றும் மிகவும் சாத்வீக அன்பால் நிறைந்த வடிவத்திலிருந்து எட்டாவது நவ துர்கை மகாகௌரியிடம் செல்வது என்பது மிகவும் உக்கிரமான மற்றும் சுட்டெரிக்கும் ஒளியிலிருந்து மிகவும் மென்மையான, குளிர்ச்சியான ஒளிக்குச் செல்லும் பயணம். 

அதாவது, பிரபஞ்சத்தின் இரண்டு துருவங்களைப் பற்றிய ஞானம்.”

இப்போது ஏழாவது நவ துர்கை காலராத்திரியே மெல்ல மெல்ல எட்டாவது நவ துர்கை ‘மகாகௌரி’யாக மாறத் தொடங்கினாள்.

கௌதமரும் அகலிகையும் பகவதி காலராத்திரியைத் துதித்து, அவளிடம் மிகுந்த அன்புடன் விடைபெற்றனர்.

ஆனால் பகவதி காலராத்திரி தனது கட்டைவிரல் அளவிலான வடிவத்தை பிரம்மரிஷி கௌதமரின் இதயத்தில் நிலைநிறுத்தினாள்.

मराठी >> हिंदी >> English >> ગુજરાતી>> ಕನ್ನಡ>> తెలుగు>> বাংলা>> മലയാളം>>

Comments