சத்குரு ஸ்ரீஅனிருத்தரின் நம்பிக்கை உணர்வுலகத்திலிருந்து - பார்வதி மாதாவின் நவ துர்கை வடிவங்களின் அறிமுகம் – பகுதி 9

 
ஆதாரம் - சத்குரு ஸ்ரீஅனிருத்த பாப்பூ அவர்கள் துளசிப்பத்திரம் – 1396-1397 ல் எழுதியுள்ளவை,
ஆதாரம் - சத்குரு ஸ்ரீஅனிருத்த பாப்பூ அவர்கள் துளசிப்பத்திரம் – 1396-1397 ல் எழுதியுள்ளவை,

சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பூ – துளசி பத்ர – 1396 தலையங்கம் எழுதியது.

அங்கிருந்த அனைவரும் பார்த்திருக்க, ஏழாவது நவ துர்கையான காலராத்திரியின் உருமாற்றம் எட்டாவது நவ துர்கை மகாகௌரியாக நடந்துகொண்டிருந்தது.

மிகமிக மெதுவாக, மிகவும் மெதுவாக.

இதுவரை எந்த உருமாற்றத்திற்கும் (Transformation) ஒரு கணம் கூட ஆனது இல்லை.

கைலாசத்தில் காலமே இல்லாததால், ‘எவ்வளவு மெதுவாக’ என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்குள்ள அனைவரும் தொடர்ந்து ஏதாவது ஒரு நித்யஜபத்தைச் செய்துகொண்டிருந்ததால், தங்கள் ஜபத்தின் பல சுழற்சிகள் நடந்துகொண்டிருந்தும், இந்த உருமாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் முழுமையாக உணர்ந்தனர்.

அங்கிருந்த அனைவரிடமும் இதுபற்றிய ஆர்வம் இப்போது படபடப்பாக மாறத் தொடங்கியது.

படிப்படியாக அந்தப் படபடப்பு மனதை அலைபாயச் செய்யத் தொடங்கியது. - மகரிஷிகள் முதல் சிவகணங்கள் வரை ஒவ்வொருவரின் மனமும் ஆவலில் உச்சக்கட்டத்தை அடைந்து, அங்கிருந்து கீழே விழுந்ததால், முற்றிலும் அமைதியற்றதாகவும், அலைபாயும் நிலையிலும் இருந்தது.

ஆனால் அனைத்து பிரம்மரிஷி கணங்களும் இந்தப் படிப்படியான செயல்முறையினால் மேலும் மேலும் அமைதியாகவும், ஆழ்ந்த

ஈடுபாட்டுடனும், லயிப்புடனும், ஆனந்தமாகவும் மாறினர்.


இதை உணர்ந்ததும் மற்ற அனைவரின் மனதிலிருந்த அமைதியின்மை மற்றும் அலைபாயும் நிலை மேலும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.


தன்னுடைய குழந்தைகளின் இந்த நிலையை ஆதிமாதா பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?

நிச்சயமாக முடியாது.

ஆதிமாதா ஸ்ரீவித்யா அவர்கள் அனைவரையும் கருணையுடன் பார்த்துப் பேசத் தொடங்கினார், “என் குழந்தைகளே! உங்கள் அனைவரின் மனமும் இப்போது முழுமையாக ‘தர்வ்’ நிலைக்குச் சென்றுள்ளது.

பொதுவாக மனிதன் ‘தர்வ்’ நிலைக்குச் செல்வது அவனது அறுபகைவர்களின் உச்சத்திற்குச் செல்வதால்.

ஆனால் நீங்கள் அனைவரும் ‘தர்வ்’ நிலைக்குச் சென்றது, வெறும், வெறும் ‘அஸதோ மா ஸத்கமய' -என்ற ஒரே காரணத்திற்காகத்தான், அதாவது புனிதமான இருப்பு மற்றும் புனிதமான செயலின் ரகசியம் மற்றும் காரணத்தை அறிந்துகொள்வதற்காகத்தான்.


அதுவும் எந்தவித சுயநலத்திற்காகவும் இல்லை, வெறும் வெறும் எட்டாவது நவ துர்கை மகாகௌரியை முழுமையாக அறிந்துகொள்வதற்காக - முற்றிலும் சாத்வீகமான ஆர்வத்தினால்.

ஹே சிவ-ரிஷி தும்பரு! இந்த உருமாற்றம் நிறைவடையும் வரை, நீ இந்த உருமாற்றத்தின் கதையை விரிவாக இவர்களுக்குச் சொல்.”

ஆதிமாதா ஸ்ரீவித்யைக்கு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து சிவ-ரிஷி தும்பரு கதை சொல்லத் தொடங்கினார், “ஹே அன்பர்களே! இந்த பார்வதி ஒருமுறை வசுந்தரையின் மீதும் வசுந்தரையின் ஆகாயத்திலிருந்து அந்த காலத்தில் இருந்த அனைத்து அசுர சக்திகளையும், அசுர வடிவங்களையும், அசுர குணங்களையும் முழுமையாக அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்தபோதுதான், முதல்முறையாக அவளது இந்த ‘காலராத்திரி’ வடிவம் வெளிப்பட்டது.

பார்வதி இந்தத் தீர்மானத்தை ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் எடுத்தாள் - அப்போது பகவான் பரமசிவன் கணப்ராண கணபதியின்

பிறப்பிற்காக கடுமையான தவம் செய்துகொண்டிருந்தார்.

பரமசிவனின் இந்தத் தவம் விரைவில் நிறைவடைவது அவசியம். ஆனால் அசுர குணங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்தன.

ஆகவே, இந்த பிரபஞ்சத்தின் கணப்ராணனைப் பிறக்க வைக்கும் செயல்முறைக்கு வெறும் பத்தாயிரம் வருடங்கள் மட்டுமே மீதமிருந்ததால், இந்த பக்தமாதா ஒரு கடுமையான தீர்மானத்தை எடுத்து போரைத் தொடங்கினாள். அவள் தனது தீர்மானத்தை மனிதர்களின் நூறு வருடங்களுக்குள்ளேயே முடித்து வைத்தாள்.

அதேபோல், பரமசிவனின் தவமும் வெறும் மனிதர்களின் எட்டு வருடங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதன் காரணமாக ஆதிமாதாவுக்குத் தேவையான கணத்தில் சிவகங்காகௌரிபுத்ர விநாயக் பிரம்மணஸ்பதி ‘கணபதி’யாகப் பிறப்பதற்கான முழு ஏற்பாடும் தயாரானது.

பரமசிவன் தவத்தை முடித்து கண்களைத் திறந்ததும் அவருக்குப் பார்வதியின் இந்த பயங்கரமான வடிவம் தெரிந்தது. ‘தன்னுடைய நலனுக்காகவே தனது பிரியமான துணைவி தனது அழகை தூர எறிந்துவிட்டு இந்த பயங்கரமான வடிவத்தை எடுத்திருக்கிறாள்’ என்பதை உணர்ந்து, பரமசிவன் அவளை மிகுந்த அன்புடன், பாசமான பார்வையுடன் பார்த்தார்.

அதனுடன் பர்கலோகத்தில் ஓடும் கங்கை (ஏழாவது கங்கை) பகவான் பரமசிவனின் இரண்டு கண்களிலிருந்தும் வழிந்தது. பரமசிவன் தனது பிரியமான மனைவிக்கு அந்த ஏழாவது கங்கையின் நீரினால் அபிஷேகம் செய்யத் தொடங்கினார்.

பரமசிவன் தானே அந்த ஏழாவது கங்கையின் நீரிலிருந்து துளி துளியாக நீர் எடுத்து  பார்வதியின் உடலில் பூசிக்கொண்டிருந்தார்.

இத்தகைய அற்புதமான அபிஷேகக் குளியல் மற்றும் பூசுதல் மனிதர்களின் 108 வருடங்கள் நடந்தது.

அந்த நேரத்தில் பார்வதியின் இந்த எட்டாவது நவ துர்கை வடிவம் ‘மகாகௌரி' பிரகாசிக்கத் தொடங்கியது.”

சிவ-ரிஷி தும்பருவின் கதை முடிந்தது. அதே கணத்தில் எட்டாவது நவ துர்கை ‘மகாகௌரி’ தனது முழு வைபவத்துடன் காட்சிக்கு வந்தாள்.

இந்த அன்னைக்கு நான்கு கைகள் இருந்தன. இவளது வலது மேல் கை அபய முத்திரையில் இருந்தது, வலது கீழ்க்கை திரிசூலத்தை ஏந்தியிருந்தது, இவளது இடது மேல் கையில் மென்மையான மற்றும் அமைதியான ஒலியை உருவாக்கும் டமரு இருந்தது. மற்றும் இவளது இடது கீழ்க்கை வரத முத்திரையில் இருந்தது.

இந்த மகாகௌரி அற்புதமான வெண்மை நிறம் கொண்டவர்.

இவளது அனைத்து ஆடைகளும் சந்திரனின் நிறத்தில் இருந்தன.

இவளது உடல் முழுவதும் முத்து ஆபரணங்கள் இருந்தன. கழுத்தில் வெண்மையான வாசனை மலர்களின் மாலைகள் இருந்தன.

இவளது பார்வை முழுமையான வாத்சல்யத்தால் நிறைந்த, மென்மையான, அமைதியான மற்றும் திருப்தி அளிப்பதாக இருந்தது.

இவள் காளையின் மீது அமர்ந்திருந்தார்.

அந்த காளையும் முற்றிலும் வெண்மை நிறத்திலும், மிகவும் அமைதியான குணத்துடனும் இருந்தது.

இவளது நெற்றியில் மூன்றாவது கண் இல்லை.

மகாகௌரியின் கண் இமைகளின் ரோமங்களின் அசைவுகளிலிருந்து மிகவும் நறுமணமும் அமைதியையும் தரும் சக்திப் பிரவாகம் எல்லா இடங்களிலும் பரவியது.

அவற்றின் தொடுதலில் அங்கிருந்த ஒவ்வொருவரின் ‘தர்வ்' ஆக இருந்த மனமும் முழுமையாக ‘அதர்வ்'  ஆக மாறிக் கொண்டிருந்தது.


பாப்பூ அவர்கள் துளசிப்பத்திரம் - 1397-ல் மேலும் எழுதியுள்ளவை, 

ஆதிமாதா ஸ்ரீவித்யா பிரம்மவாதினி லோபாமுத்திரைக்கு மகாகௌரியை பூஜை செய்யும்படி கட்டளையிட்டார். அதன்படி லோபாமுத்திரை மற்ற அனைத்து பிரம்மவாதினிகளுடன் சேர்ந்து வாசனை நிறைந்த வெண்மையான மலர்களால் மகாகௌரியை பூஜை செய்தார்.


மகாகௌரி, தனக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து வாசனை நிறைந்த வெண்மையான மலர்களையும் தனது கைகளில் எடுத்து, அங்கிருந்த அனைவர் மீதும் பொழிந்தார்.


ஆச்சரியம் என்னவென்றால், ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு வெண்மையான மலர்தான் கிடைத்தது. மற்றும் ஒவ்வொருவரின் கையிலிருந்த அந்த வெண்மையான மலரும் எட்டு இதழ்களை கொண்டிருந்தது.


அதன் பிறகு எட்டாவது நவ துர்கை மகாகௌரி பல்வேறு வண்ணங்களிலுள்ள வாசனை மலர்களால் ஆதிமாதா ஸ்ரீவித்யாவையும் அனசூயாவையும் பூஜை செய்தார்.


மகாகௌரி தனது கையிலிருந்த மலர்களை ஆதிமாதாவின் பாதங்களில் சமர்ப்பித்தபோது, அங்கிருந்த ஒவ்வொருவரின் கையிலிருந்த ‘அந்த’ வெண்மையான மலரும் இப்போது மேலும் ஒளிரும் மற்றும் மகிழ்ச்சியளிப்பதாகத் தோன்றியது.


அந்த அஷ்டதளப் புஷ்பம் ஒவ்வொருவரின் திரிவித உடல்களிலும் அமைதி, மகிழ்ச்சி, மனஉறுதி, தைரியம் மற்றும் ஆனந்தம் ஆகிய குணங்களைப் பரப்பிக் கொண்டிருந்தது.


ஒவ்வொருவரும் ‘அந்த’ அஷ்டதளப் புஷ்பம் தங்கள் கையில் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. மற்றும் ‘அந்த’ மலர் அவர்களின் முழு மனதையும் மேலும் மேலும் அழகாகவும் வலுவாகவும் செய்கிறது என்பதை உணர்ந்தனர்.


மகாகௌரியின் கட்டளைப்படி பிரம்மவாதினி லோபாமுத்ரா அங்கிருந்தவர்களை நோக்கிப் பேசத் தொடங்கினார், “ஹே இங்குள்ள அன்பர்களே! இந்த எட்டாவது நவ துர்கை மகாகௌரி, சாம்பவிவித்யாவின் பதினைந்து மற்றும் பதினாறாவது படிக்கு (கட்சத்திற்கு) அதிஷ்டாத்ரி ஆவாள்.


மற்றும் நவராத்திரியின் அஷ்டமி திதிக்குரிய நாள் மற்றும் இரவின்

நாயகி ஆவாள்.

பரமசிவன் பர்கலோகத்திலுள்ள ஏழாவது கங்கையின் நீரைத் தேய்த்து மற்றும் அபிஷேகம் செய்து இந்த ‘மகாகௌரி’ வடிவத்தை உருவாக்கினார் என்பதை நாம் கேட்டோம்.


ஆனால் ஏழாவது கங்கை இருந்தால், மற்ற ஆறு கங்கைகளின் நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது.


ஆனால் இப்போதைக்கு இவ்வளவு மட்டும் நினைவில் வைத்திருக்க வேண்டும், பூமியில் தோன்றிய அந்த முதல் கங்கை மற்றும் ஒவ்வொரு உலகத்திலுமுள்ள ஒவ்வொரு கங்கை.


மீதி இந்த கங்கை பற்றிய ஞானம் சாம்பவி வித்யாவின் பதினைந்து மற்றும் பதினாறாவது நிலைகளை கடந்த பின்னர்தான் கிடைக்கும்.


இந்த ஏழாவது அதாவது பர்கலோகிய கங்கை க்ஷீரசாகரத்தின் நீரினால் ஆனது. இதுவே ‘அம்ருதவாஹினி’, ‘அம்ருதவர்ஷிணி’ மற்றும் ‘சந்திரமதுப்ரஸவிணி’ என்ற பெயர்களால் அறியப்படுகிறது.


மகாகௌரியும் பர்கலோக்கிய ஏழாவது கங்கையும் இரட்டைச் சகோதரிகளாக கருதப்படுகிறார்கள் - ஏனெனில் அவர்கள் இருவரின் பணியே இரட்டைப் பணிதான்.


சாம்பவி வித்யாவின் பதினைந்து மற்றும் பதினாறாவது படிகளில், உபாசகன் தனது குருவின் முன் அமர்ந்து, குருவின் வழிகாட்டுதலின் கீழ் ‘ஸ்ரீசாம்பவிமுத்திரை’யைக் கற்க வேண்டும். அதை தினமும் மூன்று வேளையும் பயிற்சி செய்ய வேண்டும். அதைப்பற்றிய அறிவையும் பெற வேண்டும்.


இவை அனைத்தையும் செய்ய வைப்பது எட்டாவது நவதுர்கை மகாகௌரிதான்.


பாருங்கள்! நாம் முதலில் இருந்தே பார்த்து வருகிறோம் மகாகௌரிக்கு நெற்றியில் மூன்றாவது கண் இல்லை. அங்கு குங்குமத் திலகம் இருக்கிறது.


ஆனால் இது உண்மையல்ல.


மகாகௌரிக்கு மூன்றாவது கண் இருக்கத்தான் செய்கிறது.


ஆனால் அதை நம்மில் யாரும் பார்க்க முடியாது.


மகரிஷிகள் மற்றும் பிரம்மவாதினிகளும் கூட பார்க்க முடியாது.


இதற்குக் காரணம் என்ன?



இதுதான் ஸ்ரீசாம்பவி முத்திரையின் ரகசியம். இந்த முத்திரையைச் செய்யும்போது உபாசகன் தனது குருவின் கட்டளைப்படி சுகாசனத்தில் அமர வேண்டும். இரண்டு கண்களையும் முழுமையாக மூடி, பிறகு அந்த மூடிய இமைகளுக்குப் பின்னால் உள்ள கண்களை தனது ஆக்ஞா சக்கரத்தின் இடத்தில் அதாவது மூன்றாவது கண் இருக்கும் இடத்தில் மெதுவாகக் குவிக்க வேண்டும்.


இந்தக் கிரியையை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், அப்போது மந்திரம் சொல்ல வேண்டுமா, எந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும், எப்போது மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும் மற்றும் எப்போது மனதை அந்த ஆக்ஞா சக்கரத்துடன் கட்டி வைத்திருக்க வேண்டும், எப்படி என்று அனைத்தையும் சத்குரு ஒவ்வொரு உபாசகனுக்கும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் புனித நதிக்கரையில் கற்றுக்கொடுக்கிறார்.”


பிரம்மவாதினி லோபாமுத்திரை செய்த இந்த ஸ்ரீசாம்பவி முத்திரையின் விளக்கத்தைக் கேட்டு, மகரிஷிகள் முதல் சிவகணங்கள் வரை அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஒவ்வொருவரின் மனதிலும் ‘நமக்கும் இது கிடைக்க வேண்டும்’ என்ற ஆசை ஏற்பட்டது.


அத்தகைய ஆசை அவர்களின் மனதில் தோன்றியதும் பிரம்மவாதினி லோபாமுத்திரை, “வெறும் அனாவசியமான சாகசங்களைச் செய்யாதீர்கள். என்னுடைய அல்லது யாருடைய விளக்கத்தையும் கேட்டு உடனே முயற்சி செய்யாதீர்கள்.


ஏனெனில் இந்த ஸ்ரீசாம்பவிமுத்திரை ஸ்ரீசாம்பவிவித்யாவின் பதினைந்து மற்றும் பதினாறாவது படியில் மட்டுமே கிடைக்கும் மற்றும் செய்ய முடியும்.


இந்த ஸ்ரீசாம்பவிமுத்திரை சிவ-சக்தியின் ஒருமை, ஏகதத்துவம், தொடர்ச்சியான உடன்நிற்கும் தன்மை மற்றும் ‘வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றே’ என்ற அற்புதம் மற்றும் அதன் பின்னாலுள்ள ரகசியத்தை வெளிப்படுத்துகிறது.


‘ஆதிமாதாவையும் அவளது ‘ஆதிபிதா’ வடிவத்தையும் அறிந்துகொள்வது மற்றும் அவர்களின் ஒரு பகுதியாக இருப்பது’ இதுவே ஒரே நோக்கம் மற்றும் இதுவே ஒரே குறிக்கோள் இந்தக் கண்களில் இருக்க வேண்டும்.


மற்றும் இங்குள்ள அன்பர்களே! இவ்வளவு பெரிய ஞானத்தை வழங்கும் இந்த மகாகௌரி, சாதாரண பக்தர்களுக்கு அவர்களின் நிலைக்கு ஏற்ப அதிக மன அமைதி, பலம், மன உறுதி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை அளித்துக்கொண்டே இருப்பார்.”

Comments