சத்குரு ஸ்ரீஅனிருத்தரின் பாவன உலகிலிருந்து - பார்வதி அன்னையின் நவ துர்கா வடிவங்களின் அறிமுகம் - பாகம் 4

சத்குரு ஸ்ரீஅனிருத்தரின் பாவன உலகிலிருந்து - பார்வதி அன்னையின் நவ துர்கா வடிவங்களின் அறிமுகம் - பாகம் 4

சத்குரு ஸ்ரீஅனிருத்த பாப்பூ அவர்களின் தினசரி 'பிரத்யக்ஷ' பத்திரிகையில் உள்ள 'துளசிபத்ர' தொடரின் கட்டுரை எண் 1386- 1387.

சத்குரு ஸ்ரீஅனிருத்த பாப்பூ – 1386 ல் எழுதியது,


பகவான் ஹயக்ரீவர் அந்த புதுமணத் தம்பதியினருடன் மார்க்கண்டேயரின் ஆசிரமத்தை நோக்கி கிளம்ப, ராஜரிஷி சஷிபூஷணர் மிகவும் பணிவாக லோபமுத்ரையை கேட்டார், "இந்த மூத்த பிரம்மவாதினியே! இப்போது ஒரு மாதம், ஏன் இன்னும் அதிக காலம் கூட கௌதமனும் அஹல்யாவும் இங்கு இருக்க மாட்டார்கள். அப்படியென்றால் நீ இனிமேல் கற்றுக் கொடுப்பதை எல்லாம் அவர்கள் தவறவிடுவார்களா என்ற கேள்வி என்னை குழப்புகிறது. நீ நீதிக்கு கட்டுப்பட்டவள் என்பதை அறிந்தே நான் உன்னிடம் இந்தக் கேள்வியை கேட்கிறேன்."

லோபமுத்ரா மிகவும் மென்மையாக பதிலளித்தாள், "ஒரு மகளை அவளது கணவனுடன் அனுப்பி வைக்கும் தந்தையின் உணர்வு உன் கண்களில் தெளிவாகத் தெரிகிறது, உன் இந்த வாத்ஸல்ய உணர்வுக்கு மரியாதை கொடுத்து உனக்கு சொல்கிறேன் -  1)ஒன்று, இவர்கள் இருவரும் மார்க்கண்டேயரிடமிருந்து ஸ்ரீசாம்பவி வித்யையின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது படிகளை விரிவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வார்கள். மேலும் அதன் அடுத்த அனைத்து விஷயங்களும் அவர்களுக்கு அங்கேயே கிடைக்கும், சரியான நேரத்தில் அவர்கள் இங்கு திரும்பி வருவார்கள்.  2)நீ மிகவும் முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டாய், அதுவும் உன் வாத்ஸல்யத்தினாலேயே, அதனால் உனக்கு நினைவூட்டுகிறேன் - கைலாசத்தில் எப்போதும் நிலையான நேரமே இருக்கும். காலத்திற்கு இங்கு இடமில்லை."

ராஜரிஷி சஷிபூஷணர் ஆனந்தத்துடன், உணர்வுபூர்வமான குரலில் லோபமுத்ராவுக்கு நன்றி தெரிவித்தார், மேலும் மிகவும் அமைதியான மனதுடன் மீண்டும் ஒருமுறை ஒருமுகப்பட்ட சாதகராக அமர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.

லோபமுத்ரா இப்போது மீண்டும் பேசத் தொடங்கினாள், "ஒன்பதாவது மற்றும் பத்தாவது படியில் மிக முக்கியமான 'ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்' நீங்களும் கற்க வேண்டும்.

அது வெறும் மனப்பாடம் செய்வதோ அல்லது திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருப்பதோ உண்மையான சாதனை அல்ல. 

ஏனென்றால் ஸ்ரீலலிதா சஹஸ்ர- நாமத்தில் உள்ள ஒவ்வொரு நாமமும் சஹஸ்ரார சக்கரத்தின் ஒரு அல்லது பல இதழ்களை ஒளிரச் செய்யும் மற்றும் ரசம் கொடுக்கும் ஒரு ரசநாளம் ஆகும்.

இங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பிரம்மரிஷி மற்றும் பிரம்மவாதினியும் அந்த நிலையை அடைந்தது, இந்த லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் அவர்களின் சஹஸ்ரார சக்கரம் இவற்றுக்கிடையே தனித்துவமான உறவு ஏற்பட்டபோதுதான். அதாவது, மனிதனின் சஹஸ்ரார சக்கரத்தின் ஒவ்வொரு இதழும் லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு நாமத்தால் நிரம்பி, முழுமையாக நிறைவடையும்போதுதான் பிரம்மரிஷி மற்றும் பிரம்மவாதினியின் பிறப்பு நிகழ்கிறது.

அப்படியானால் மற்றவர்களின் நிலை என்ன? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம், ஏன் வந்தே ஆக வேண்டும். ஏனென்றால் கேள்வி இல்லாமல் முயற்சி இல்லை, முயற்சி இல்லாமல் பதில் இல்லை, பதில் இல்லாமல் முன்னேற்றம் இல்லை.

மேலும் ஸ்ரீசாம்பவி வித்யையின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது படி என்பது ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் அசுர குணத்துடன் நடக்கும் போர் ஆகும். 

எந்தப் போரும் லலிதா சஹஸ்ரநாமம் இல்லாமல் வெற்றி பெற முடியாது.

லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆதரவு மற்றும் துணையுடன் போரிடும் தரப்பு தேவயான பாதையை சேர்ந்தது, அது முழுமையான வெற்றியைப் பெறும்.

இரு தரப்புமே லலிதா சஹஸ்ர'- நாமத்தின் துணையுடன் போரிட்டால், லலிதாம்பிகையே அந்தப் போரில் தலையிட்டு அந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவாள்.

ஏனென்றால் 'லலிதாம்பிகை' என்ற வடிவமே போர் செய்பவளும் அமைதி செய்பவளும் ஆகும்.

 ஆதிமாதா மஹிஷாசுரமர்த்தினி பூஜன்

அதனால்தான் லலிதாம்பிகையின் வில் எந்த உலோகத்தாலும் செய்யப்படவில்லை, மாறாக எப்போதும் புதிதாக இருக்கும் கரும்பால் ஆனது, அவளது அம்புகள் தாமரை தண்டு மற்றும் தாமரை மொட்டுகளால் மட்டுமே ஆனவை.

நவ துர்கா ஸ்கந்தமாதா இந்த லலிதா சஹஸ்ரநாமம் படிப்பதற்கு வழிகாட்டி, பகவான் ஹயக்ரீவர் இந்த சஹஸ்ரநாமத்தை எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார். 

பகவான் ஸ்கந்தனின் பிறப்பிற்கு சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த ஸ்கந்தமாதா பார்வதி லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யும் போது தியானத்தில் முழுமையாக மூழ்கிவிட்டாள், அவளுக்கு வேறு எந்த உணர்வும் இல்லை.

அந்த ஒரு வயது குழந்தை ஸ்கந்தன் அதாவது குமாரன் விளையாடி விளையாடி இமயமலையின் மணிசிகிஹரத்தை (எவரெஸ்ட்) அடைந்து அங்கிருந்து கீழே குதிக்க முயன்றான். 

அப்போது எப்போதும் விழித்திருக்கும் லலிதாம்பிகை உடனடியாக மணிசிகிஹரத்திற்கு வந்து, கீழே விழும் குமார கார்த்திகேயனின் வலது கையை இறுக்கமாகப் பிடித்தாள்.

அதே நேரத்தில் உள்மன வாத்ஸல்யத்தால் விழித்தெழுந்த ஸ்கந்தமாதா பார்வதியும் தனது இடத்திலிருந்து மணிசிகரம் வரை ஓடி ஏறி, கீழே விழும் குமார கார்த்திகேயனின் இடது கையைப் பிடித்தாள்.

அந்த இருவர் மனதிலும் ஒருவருக்கொருவர் மிகுந்த நன்றியுணர்வு இருந்தது, மேலும் எதிர்காலத்தில் தேவசேனாபதியாகப் போகும் குமார கார்த்திகேயன் மீது அபரிமிதமான வாத்ஸல்யம் இருந்தது.

ஸ்கந்தமாதா பார்வதியின் லலிதா சஹஸ்ரநாம பாராயணம், அவள் விழித்தெழுந்த பிறகு, ஓடி மலையேறி, கார்த்திகேயனைப் பிடித்த பிறகும் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.

இதனால் லலிதாம்பிகை மிகவும் மகிழ்ந்தாள். 

இப்போது ஸ்கந்தனின் ஆறு முகங்களுக்கும் ஒரே நேரத்தில் பசி எடுத்தது, அதை உணர்ந்த அந்த இருவருக்கும் ஒரே நேரத்தில் பால் சுரந்தது.

ஸ்கந்த கார்த்திகேயன் அந்த இருவரின் கைகளையும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே இருவரின் மார்பகத்திலிருந்தும் பால் அருந்தினான்.

மேலும் முழுமையாக பால் அருந்திய பிறகு அவனது ஆறு முகங்களிலிருந்தும் ஏப்பங்கள் வந்தன - அந்த ஏப்பங்கள் சாதாரணமானவை அல்ல, அவை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தின் இயற்கையான மற்றும் எளிதான உச்சரிப்பு ஆகும். 

இதனால் அந்த ஒரு நொடிக்கு லலிதாம்பிகை மற்றும் ஸ்கந்தமாதா பார்வதி ஒன்றுபட்டனர். 

மேலும், 'ஸ்ரீயந்திரம்' எப்படி லட்சுமி மற்றும் மகாலட்சுமி இருவரின் ஒருங்கிணைந்த இடமோ, 'ஸ்ரீசுக்தம்' எப்படி லட்சுமி மற்றும் மகாலட்சுமியின் ஒருங்கிணைந்த ஸ்தோத்திரமோ, அதேபோல் 'ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்' பார்வதியினதும் லலிதாம்பிகையினதும் ஒருங்கிணைந்த ஸ்தோத்திரமானது, 'சாம்பவிவித்யா' இருவரின்  ஒருங்கிணைந்த இடமானது.

ஸ்ரீயந்திரத்தின் ஆரத்தி செய்யும் போது சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பூ

பாபு மேலும் துளசிபத்ர - 1387 கட்டுரையிலும் எழுதுகிறார்,

இந்த கதை அனைத்தையும் கேட்டு அங்கேயே அமர்ந்திருந்த பகவான் ஸ்கந்தனின் மனதில் அந்த பழைய வாத்ஸல்ய நினைவுகள் மிகவும் வேகமாக எழுந்தன, அவன் தனது அன்னை பார்வதியின் பாதங்களில் தலை வைத்து லலிதா  சஹஸ்ரநாமத்தை உச்சரிக்கத் தொடங்கினான் - தானாகவே மற்றும் இயல்பாகவே; 

சரியாக அதே நேரத்தில் ராஜரிஷி சஷிபூஷணரின் கண்களுக்கு பார்வதியின் வழக்கமான 'சந்திரகண்டா' வடிவத்திற்கு பதிலாக 'ஸ்கந்தமாதா' வடிவம் தோன்றத் தொடங்கியது. 

அதுமட்டுமல்லாமல், அந்த ஸ்கந்தமாதாவின் உருவம் மிகவும் மெதுவாக விரிவடைந்து பரவத் தொடங்கியது, ஒரு நொடிக்கு அவருக்கு முழு வானமும் ஸ்கந்தமாதா வடிவத்தால் நிரம்பியிருப்பது போலத் தெரிந்தது.

இதனுடன் ராஜரிஷி சஷிபூஷணர் எழுந்து நின்று, இயல்பான உணர்வுடன் அந்த வானளாவிய ஸ்கந்தமாதாவின் பாதங்களைத் தொட அந்த பாதங்களை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

அவர் அந்த பாதங்களுக்கு நெருக்கமாக செல்ல செல்ல, ஸ்கந்தமாதாவின் அந்த இரண்டு பாதங்களும் பூமியில் இருந்து மேலே மேலே செல்லத் தொடங்கின.

இப்போது அந்த சிம்மவாஹினி ஸ்கந்தமாதாவின் வலது பாதம் பூமியை நோக்கி சாதாரண நிலையில் இருந்தது, ஆனால் அவள் தனது இடது காலை மடித்து அதன் மீது குழந்தை ஸ்கந்தனை சுமந்திருந்தாள், அதனால் அவளது இடது பாதம் கிடைமட்டமாக இருந்தபோதிலும் செங்குத்தாக இருந்தது.

ஸ்கந்த மாதா மற்றும் அவளின்
இடது பாதம்

ராஜரிஷி சஷிபூஷணர் அந்த வலது பாதம் அவருக்கு அருகில் இருந்தபோதிலும், அவளது அந்த இடது பாதத்தின் மீது முழுமையாக ஈர்க்கப்பட்டார்.

அந்த இடது பாதத்தின் செங்குத்தான உள்ளங்காலில் அவருக்கு என்ன தெரிந்தது?

ராஜரிஷி சஷிபூஷணர் முழுவதுமாக மதிமயங்கிப் போனார், அவர் ஆனந்தத்தின் ஒவ்வொரு படியையும் மேலேறிக் கொண்டிருந்தார், இப்போது அவர் மெதுவாக தெளிவான குரலில் பேசத் தொடங்கினார், "ஹே ஸ்கந்தமாதே! ஹே நவ துர்கே! உன் இந்த இடது பாதத்தின் உள்ளங்காலில் எனக்கு அனைத்து பிரம்மரிஷி மற்றும் பிரம்மவாதினிகளின் தபஸ்ரியா தெரிகின்றன.

அந்த தபஸ் செய்யும் பிரம்மரிஷிகளின் கண்களுக்கு முன்பும் எனக்கு மீண்டும் இந்த உன் இடது பாதம் இப்படித்தான் தெரிகிறது. 

அந்த ஒவ்வொரு பிரம்மரிஷிக்கும் உன் உள்ளங்காலில் என்ன தெரிகிறது என்பது எனக்குத் தெரியவில்லை - ஆனால் அவர்களின் இரண்டு கண்களும் உன் அந்த உள்ளங்காலைப் பார்த்து விரிவடைவது மட்டும் எனக்குத் தெரிகிறது. 

அஹஹஹா! உன் அந்த இடது மற்றும் வலது கைகளில் உள்ள இரண்டு தாமரை மலர்களும் இப்போது அந்த பிரம்மரிஷிகளின் தலைகளைத் தொடுகின்றன.

அஹஹஹா! உன் அந்த இரண்டு கைகளில் உள்ள தாமரை மலர்கள் உண்மையில் உன் மற்றும் சிவனின் சஹஸ்ரார சக்கரங்கள், அவை தொட்ட உடனேயே...."

இவ்வளவு சொல்லி ராஜரிஷி சஷிபூஷணர் இறந்தவர் போல, சுவாசம் மற்றும் இதய துடிப்பு இல்லாமல் ஆகி வானில் மிதக்கத் தொடங்கினார்.

அவரது மனைவி பூர்ணாஹுதி மிகுந்த அன்புடனும், அளவற்ற ஆனந்தத்துடனும் விண்ணில் பறந்து தனது கணவரின் உடலின் வலது கையைப் பிடித்து அவரை மெதுவாக மீண்டும் கைலாசத்திற்கு இறக்கத் தொடங்கினாள். மேலும் ராஜரிஷி சஷிபூஷணரின் கால்கள் கைலாச பூமியைத் தொட்ட அந்த நொடியில், அவர் மீண்டும் முழுமையாக உயிர் பெற்றார். 

அவரது முதல் மூச்சுடன் அவரது சஹஸ்ரார சக்கரத் தாமரை முழுமையாக மலர்ந்து அவரது தலையிலிருந்து பத்து திசைகளிலும் வெளியேறுவது அனைவருக்கும் தெரியத் தொடங்கியது.

ஒருவர் பிரம்மரிஷி ஆவதை இன்று பிரம்மரிஷி அல்லாத பலரும் பார்த்துக் கொண்டிருந்தனர், 

மூத்த பிரம்மவாதினி லோபமுத்ரா சொல்லிக் கொண்டிருந்தாள், "இப்போது சஷிபூஷணர் 'பிரம்மரிஷி' ஆகிவிட்டார், பிரம்மரிஷியின் பிறப்பு எப்படி நிகழ்கிறது என்பதை நான் முன்பு சொன்ன முழு செயல்முறையையும் நீங்கள் அனைவரும் இப்போது பார்த்தீர்கள்."

'பிரம்மரிஷி சஷிபூஷணருக்கு ஜயஜயகாராம்' என்று கோஷமிட்டு அங்கிருந்த அனைவரும் ஆனந்தமாக நடனமாடத் தொடங்கினர்.

சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரஜாபதி பிரம்மா, கணபதி, வீரபத்ரன், தேவரிஷி நாரதர் மற்றும் சிவ-ரிஷி தும்புரு கூட இதில் இணைந்திருந்தனர்.

மேலும் பிரம்மரிஷி சஷிபூஷணரின் இரண்டு கண்களும் திறந்தவுடன் அவர் ஆதிமாதா ஸ்ரீவித்யையின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.

ஆதிமாதா ஸ்ரீவித்யா

சரியாக அதே நேரத்தில் ஸ்கந்த கார்த்திகேயனின் வாயிலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒரு வினோதமான மற்றும் அற்புதமான நாமம் உச்சரிக்கப்பட்டது,

'ஓம் கல்பனாரஹிதாயை நமஹ'.

மேலும் இந்த நாமத்தை உச்சரித்தவுடன் பிரம்மவாதினி லோபமுத்ராவும், நவ துர்கா ஸ்கந்தமாதாவும் ஸ்கந்தனின் குரலுடன் தங்கள் குரலையும் சேர்த்து அதே நாமத்தை 108 முறை உச்சரித்தனர்.

Comments