சத்குரு ஸ்ரீஅநிருத்தர் அவர்களின் ஆன்மீக உலகிலிருந்து - பார்வதி தேவியின் நவ துர்கை வடிவங்களின் அறிமுகம் - பகுதி 5

சத்குரு ஸ்ரீஅநிருத்தர் அவர்களின் ஆன்மீக உலகிலிருந்து - பார்வதி தேவியின் நவ துர்கை வடிவங்களின் அறிமுகம் - பகுதி 5

சான்று - சத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்பூ வின் தினசரி ‘பிரத்யக்ஷ' பத்திரிகையின் ‘துளசிபத்ர' என்ற முக்கிய கட்டுரையில் இருந்து கட்டுரை எண் 1388 மற்றும் 1389.

சத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்பூ துளசிபத்ர - 1388 கட்டுரையில் எழுதுகிறார்,

ஓம் கல்பனாரஹிதாயை நம:

இந்த ஜபத்தை முடித்த பிரம்மவாதினி லோபமுத்ரா, பிரம்மரிஷி அகஸ்தியரிடமிருந்து நவபிரம்மரிஷி சசிபூஷணரின் கழுத்தில் பிரம்மரிஷியைக் குறிப்பிடும் ருத்ராக்ஷ மாலையை அணிவித்தார். அப்போது, பிரம்மரிஷி சசிபூஷணர் இரண்டு கைகளையும் கூப்பி, ஆதிமாதாவின் முன்னிலையில் இருந்த அனைத்து வடிவங்களையும் மனதார வணங்கி, மிகவும் பணிவாக லோபமுத்ராவிடம் ஒரு கேள்வி கேட்டார், "'ஓம் கல்பனாரஹிதாயை நமஹ' என்ற ஸ்ரீலலிதாசஹஸ்ரநாம மந்திரம் என் மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றிய விளக்கத்தை நீ எனக்குச் சொல்வாயா?"

பிரம்மவாதினி லோபமுத்ரா ஒரு சிறிய குழந்தையைப்போல் சசிபூஷணனரை தன் அருகில் அழைத்து, "என் அன்பு மகனே! இந்த நாமத்தின் பொருளை நீயே மற்ற அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்பது என் ஆணை.

ஏனெனில், மற்றவர்களுக்குப் போதிக்கும்போதே மனிதன் மேலும் புத்திசாலியாகிறான்.

ஏனெனில், மற்றவர்களுக்கு உரிய அறிவை வழங்குவதற்காக அந்த உண்மையான குரு தனது அனைத்து முன் அறிவையும், முன் அனுபவங்களையும் சோதிக்க வேண்டும், அதன் மூலம்தான் அவர் ஒரு உண்மையான அறிஞராகிறார்.

இப்போது நீ பிரம்மரிஷியாகிவிட்டாய், 

பிரம்மரிஷியின்  அல்லது பிரம்மவாதினியின் முக்கிய கடமை ஞானம் அல்லது அறிவியலில் கலப்படம் ஏற்படாமல் தடுப்பதும், சாதாரண மனிதர்களுக்குத் தேவையான அறிவை எளிதாகக் கொண்டு செல்வதும்தான்."

பிரம்மரிஷி சசிபூஷணர் சில கணங்கள் தியானத்தில் சென்று, தானே உறுதிப்படுத்திக் கொண்டு, அனைத்து ரிஷிகளையும், ரிஷிகுமாரர்களையும், சிவகணங்களையும் பார்த்துப் பேசத் தொடங்கினார், "சகோதரர்களே! ஆதிமாதாவின் இந்த நாமம் உண்மையில் அவளது ஆற்றலையும், அதிகாரத்தையும், அவளது மன்னிப்பையும், அன்பையும் உண்மையாக அடையாளம் காட்டுகிறது. நாம் மனிதர்கள், நமது வாழ்க்கையின் பெரும்பகுதியை பலவிதமான கற்பனைகளுடன் அல்லது அவற்றின் துணையுடன் வாழ்கிறோம்.

கற்பனை என்றால் என்ன, என்றால் 'எதிர்காலத்தில் என்ன நடக்கும், எது எதிலிருந்து எப்படி நடக்கும், நடந்தும் எனக்குத் தெரியாதது எப்படி நடந்திருக்கும் என்பது பற்றிய அவரவர் திறனுக்கேற்ப செய்யப்பட்ட பல்வேறு எண்ணங்கள் அல்லது தர்க்கங்கள் அல்லது சந்தேகம் அல்லது பயம் ஆகியவைதான் கற்பனை.'

பெரும்பாலும், அவரவர் 'கர்ம பலன் மீதான எதிர்பார்ப்பு' தான் அனைத்து கற்பனைகளின் மூல முதலாக இருக்கிறது.

அதனால்தான் பலன் மீதான ஆசையும் கற்பனையும், தர்க்கங்களும், சந்தேகங்களும், பயமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய உறவு கொண்டவை.

கற்பனை செய்வது முற்றிலும் தவறில்லை. ஆனால், அனுபவம், சிந்தனை, படிப்பு, ஞானம் மற்றும் நெறிமுறைகளின் வரம்பு இல்லாத கற்பனை, மனிதனை எப்போதும் தவறான திசையில் கொண்டு செல்கிறது.

பெரும்பாலும் மனிதர்களுக்கு ஒருவரை ஒருவர் பற்றிய தவறான புரிதல்கள் இதுபோன்ற தவறான கற்பனைகளில் இருந்துதான் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் பலன் மீதான ஆசை இருக்கும்; ஆனால், பலன் ஆசையின் வலையில் எவ்வளவு சிக்கிக் கொள்ள வேண்டும் என்பதை அவன் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், பலன் ஆசையின் வலையில், அதாவது கற்பனையின் உலகில், அவன் சிக்கிக் கொள்ளும்போது, அவனுடைய உழைக்கும் திறன் பலவீனமடைந்து, அவனுடைய செயல் திறன் குறைந்து கொண்டே போகிறது.

அதனால்தான் சனாதன பாரதிய வேத தர்மம் எப்போதும் நிஷ்காம  கர்ம யோகத்திற்கு முன்னுரிமை  அளிக்கிறது.

ஆனால், இதன் பொருள், மனிதன் எதைச் செய்கிறானோ, அதன் நல்ல அல்லது கெட்ட விளைவுகளைப் பற்றி அவன் யோசிக்கவே கூடாது என்பதல்ல.

ஏனெனில், அத்தகைய எண்ணங்கள் கற்பனை அல்ல, மாறாக அத்தகைய எண்ணங்கள் விவேகம் மற்றும் புத்தியின் நிலைத்தன்மை.

ஆனால், அந்த விளைவுகளைப் பற்றி பயப்படுவது அல்லது மகிழ்ச்சியில் பைத்தியமாவதும் இரண்டுமே கற்பனையின் பிள்ளைகள்தான்.

நம் அனைவரின் இந்த ஆதிமாதாதான் தனியாக ஒரு கற்பனை செய்தால், அது சூட்சும, நுண் மற்றும் ஸ்தூல ஆகிய மூன்று நிலைகளிலும் உண்மையில் வெளிப்படும் - இந்த ஆற்றல் வேறு யாருக்கும் இல்லை.

ஸ்ரீஅனிருத்தகுருக்ஷேத்திரத்தில் நவராத்திரியின் போது ஆதிமாதா மஹிஷாசுரமர்த்தினியை தரிசிக்கும் சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பூ

மற்றும் மனிதன் அவளது அருளைப் பெற விரும்பினால், அவளது நெருக்கத்தைப் பெற விரும்பினால், அவளைப் பற்றி கற்பனை செய்வதே கூடாது.

அப்படியானால் அவன் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்வி நமக்கு எழுகிறது. அதன் பதிலும் மிக எளிதானது, அதாவது 1) அவளுடைய நமக்கு பிடித்த வடிவத்தை தியானம் செய்வது. 2) அவளுடைய குணங்களை, அதாவது சரித்திரத்தைப் படிப்பது, மனனம் செய்வது, சிந்தனை செய்வது மற்றும் அவளது குணங்களைப் பாடுவது, மற்றும் 3) நமது அனைத்து பலன் ஆசைகளையும் அவளது பாதங்களில் அர்ப்பணிப்பது.

என் அன்பர்களே! நமது மனம் எந்த நேரத்தில் முற்றிலும் கற்பனை இல்லாததாக மாறுகிறதோ, அந்த நேரத்தில் நாம் அவளுடைய சேலையைப் பிடித்துக் கொள்கிறோம்."

பிரம்மரிஷி சசிபூஷணனர் இவ்வளவு சொல்லிவிட்டு திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. அவரது இமைகள் படபடத்தன, அவரது உடல் முழுவதும் சிலிர்த்துப் போனது.

அதே கணத்தில் சத்குரு பகவான் ஸ்ரீத்ரிவிக்ரமர் அங்கு தோன்றினார், அவர் சசிபூஷணனரத் தன் அணைப்பில் எடுத்துக்கொண்டு தன் மடியில் அமர வைத்து,அவரது நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டு, த்ரிவிக்ரமர் அவனர கண்களைத் திறக்கச் சொன்னார்.

பிரம்மரிஷி சசிபூஷணர் கண்களைத் திறந்தார், ஆனால் அங்கு இருந்த அனைத்து மகரிஷிகள், ரிஷிகள், ரிஷிகுமாரர்கள் மற்றும் சிவகணங்கள் ஆச்சரியத்தால் திகைத்துப் போயினர்.

பாப்பூ துளசிபத்ர - 1389 கட்டுரையில் மேலும் எழுதுகிறார்,

அப்படி என்ன பார்த்தார்கள்? அப்படி என்ன நடந்தது? - இதனால் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள், கண்களைத் திறந்த நவபிரம்மரிஷி சசிபூஷணர்  மட்டும் அமைதியாகவும்,  நிலையாகவும், மிகவும் மகிழ்ச்சியான மனதுடனும் இருந்தார். அவருக்கு இது எதுவும் தெரியவில்லையா?

உண்மையில், மிகவும் அற்புதம் நடந்தது.

பகவான் த்ரிவிக்ரமருக்குப் பின்னால், நவ துர்கை ஸ்கந்த மாதா தன் சிங்கத்தின் மீது அமர்ந்து, மடியில் பால ஸ்கந்தனை வைத்துக்கொண்டு வெளியே வந்து, எல்லோருக்கும் நடுவில் வந்து நின்றாள்.

அதே நேரத்தில் விண்வெளியை முழுவதுமாக வியாபித்திருந்த ஸ்கந்த மாதாவும் அப்படியே நிலையாக இருந்தாள்.

அதுமட்டுமல்லாமல், பகவான் த்ரிவிக்ரமரின் 'சிவநேத்தராத்திலிருந்து' (ராமர், சிவன், ஹனுமந்தர் முகங்களில்) வெளியேறும் மிகவும் அழகான தங்க நிற ஒளியிலும் ஸ்கந்த மாதா காணப்பட்டாள்.

ஆனால், விண்வெளியை வியாபித்திருந்த ஸ்கந்த மாதாவின் சிங்கம் மூத்த மகன் 'வீரபத்ரர்' இருந்தார்.

எல்லோருக்கும் நடுவில் நிலைத்திருந்த ஸ்கந்த மாதாவின் சிங்கம் பலம் வாய்ந்த 'ஸ்ரீகணபதி'யாக இருந்தார்.

மற்றும் த்ரிவிக்ரமரின் சிவநேத்திரிலிருந்து வந்த ஒளியில் உள்ள ஸ்கந்த மாதாவின் சிங்கம் 'ஸ்கந்த கார்த்திகேயன்' ஆக இருந்தார்.

அந்த மூன்று சிங்கங்களும் மிகுந்த அன்புடனும், நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் நவ துர்கைகளின் ஒன்பது நாமங்களை வரிசையாக உச்சரித்துக்கொண்டிருந்தன.

இந்த மூன்று வடிவங்களுக்கும் அனைத்து பிரம்மரிஷிகளும், பிரம்மவாதினிகளும் மண்டியிட்டு உணர்ச்சிப்பூர்வமாக வணங்கினர், தேவரிஷி நாரதர் மற்றும் சிவ-ரிஷி தும்புரு ஸ்ரீலலிதாம்பிகை, அதாவது ஆதிமாதா மஹாதுர்கையின் 'லலிதாசஹஸ்ரநாமம்' ஸ்தோத்திரத்தைப் பாடத் தொடங்கினர்.

சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பூவின் வீட்டில் ஸ்ரீ விநாயகர் பிரதிஷ்டை.

அந்த ஸ்தோத்திரம் முடிந்த உடனேயே ஸ்கந்த மாதாவின் மூன்று வடிவங்களும் ஒரு கணத்தில் ஒன்றிணைந்து ஆதிமாதா ஸ்ரீவித்யையின் வடிவத்தில் ஐக்கியமாயின.

அதே கணத்தில் ஒரு பிரகாசமான வாளும் ஒரு வெள்ளைத் தாமரையும் ஆதிமாதா ஸ்ரீவித்யையின் அபய ஹஸ்தத்திலிருந்து வெளிவந்தன.

உடனே பிரம்மரிஷி 'காத்யாயனர்' எழுந்து பிரம்மானந்தத்துடன் நடனமாடத் தொடங்கினார். அகஸ்தியரின் மகன் 'கத'வின் மகன் பிரம்மரிஷி 'காத்ய' மற்றும் இந்த பிரம்மரிஷி காத்யாவின் மகன் 'காத்யாயனர்'.

இந்த பிரம்மரிஷி காத்யாயனர் ஆதிமாதாவின் பரம்பா பூஜை செய்து 108 ஆண்டுகள் கடுமையான தவம் புரிந்திருந்தார், மேலும் 'பரம்பை பகவதி பார்வதியை தன் வயிற்றில் பெற்றெடுக்க வேண்டும்' என்று விருப்பம் தெரிவித்திருந்தார், அதன் படி பரம்பையின் வரத்தால் காத்யாயனரின் மனைவி 'கிருதி' வயிற்றில் ஆறாவது நவ துர்கை 'காத்யாயனி' பிறந்தாள்.

இந்த காத்யாயனரின் பக்தி எப்போதும் வாத்ஸல்ய பக்தியாகவே இருந்தது, இப்போதும் கூட அவர் 'என் அன்பான மகள் என்னைச் சந்திக்கப் போகிறார்' என்ற ஆனந்த உணர்வுடன், ஒரு பாசமுள்ள தந்தையாக நடனமாடினார்.

அவளது நவ துர்கை வடிவத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார். 'ஆறாவது நவ துர்கை'யாக அவளது பாதங்களில் தலையை வைத்து வணங்குவார், அதன் பிறகு மிகுந்த வாத்ஸல்ய பாசத்துடன் பகவதி நவ துர்கை காத்யாயனியின் நெற்றியில் முத்தமிடுவார்.

பிரம்மரிஷி காத்யாயனர் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் காத்யாயனியின் குழந்தை வடிவத்தை தியானம் செய்து பிதாவாக இருந்த பாசத்தை அனுபவிப்பார்.

மதிய நேரம் நெருங்க நெருங்க, அந்த நேரத்தில் பிரம்மரிஷி காத்யாயனர் காத்யாயனியை 'தன் தாய்' என்று கருதி, மகன் கடமையின்படி அவளுக்கு சேவை மற்றும் பூஜை செய்வார்.


மதியம் கடந்த பிறகு, சூரிய அஸ்தமனம் வரை காத்யாயனர் அவளை 'தன் பாட்டி' என்று கருதி, அவளிடமிருந்து ஒரு சிறிய குழந்தையைப் போல் செல்லம் பெற்றுக்கொள்வார், ஆனால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அவர் அவளை நேராக ஆதிமாதா லலிதாம்பிகை என்று கருதி, அவளது பிரபஞ்ச வடிவத்தை ஆராய்வார்.

அப்படிப்பட்ட இந்த வாத்ஸல்ய பக்தியின் சிகரமான பிரம்மரிஷி காத்யாயனர் அந்த வாளையும் தாமரையையும் வருடியதும், அந்த வாளும் தாமரையும் தானாகவே தன் இரண்டு இடது கைகளில் பிடித்துக்கொண்டு, வலது இரண்டு கைகளில் அபய முத்திரை மற்றும் வரத முத்திரையுடன் இருக்கும் ஆறாவது நவ துர்கை காத்யாயனி அங்கு தோன்றினாள்.

முகத்தில் சந்திரனின் ஒளி இருந்தும், சந்திரனின் கறை இல்லாத இந்த நவ துர்கை காத்யாயனியும் சிம்ம வாஹினியம்தான்.

ஆனால், இவளுடைய சிங்கம் ஒரே நேரத்தில் வீரம் மற்றும் அமைதி ஆகிய இரண்டு உணர்வுகளையும் கொண்டிருந்தது.

பிரம்மவாதினி லோபமுத்ரா தன் கையில் தட்டில் 108 வெண் தாமரைகளை எடுத்துக்கொண்டு, 'ஓம் காத்யாயன்யை நம:' என்ற மந்திரத்தை உச்சரித்து, அவற்றில் 107 தாமரைகளை நவ துர்கை காத்யாயனியின் பாதங்களில் சமர்ப்பித்தார்.

மற்றும் கடைசி 108வது தாமரை பூவை அந்த சிங்கத்தின் தலையில் சமர்ப்பித்தார்.

அதனுடன் அந்த சிம்ம உடலில் பிரம்மரிஷிகள் முதல் சாதாரண பக்தர் வரை ஆதிமாதாவின் ஒவ்வொரு பக்தரும் தோன்றத் தொடங்கினர்.

பிரம்மவாதினி லோபமுத்ரா மிகுந்த வாத்ஸல்ய பாசத்துடன் பேசத் தொடங்கினார், "இந்த ஆறாவது நவ துர்கை 'காத்யாயனி' நவராத்திரியின் சஷ்டி திதியின் பகல் மற்றும் இரவு நாயகி.

மற்றும் இவள் சாம்பவி வித்யையின் பதினோராவது மற்றும் பன்னிரண்டாவது படிகளின் (கட்சங்களின்) அதிபதி.

இந்த காத்யாயனி, பக்த மாதா பார்வதியின் வாத்ஸல்ய பாசத்தின் எளிமையான, அழகான மற்றும் மிக உயர்ந்த வெளிப்பாடு."

Comments