
சத்குரு ஸ்ரீ பாப்புவின் கிருபையால் நான் அவரது சந்நிதானத்திற்கு வந்து நிரந்தரமாக அவருடையவனாகிவிட்டேன். இந்தச் சத்குருவின் காரணமில்லாத கருணை என்னை பலமுறை சின்னஞ்சிறு மற்றும் பெரிய ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. சாட்சாத் எமனையே திருப்பி அனுப்பி அவர் என் மனைவிக்கு (மானஸிக்கு) மறுஜென்மம் கொடுத்தார்.
16 நவம்பர் 2000 ஆம் நாள், வியாழக்கிழமை அதாவது பாப்புவின் பிரவசனம் நடக்கும் நாள். மானஸி வீட்டில்தான் இருந்தாள். நான் மாலை 4.45 மணிக்கு ஆபீஸிலிருந்து கிளம்பும்போது வீட்டிற்கு போன் செய்தேன். மானஸியிடம் தாதரில் உள்ள அண்டோனியா டிசில்வா ஹைஸ்கூலுக்கு (பிரவசனம் நடக்கும் இடம்) எத்தனை மணிக்கு வருவாய் என்று கேட்டேன். அவள் 6.00 மணிக்குள் வருகிறேன் என்றாள். நான் மாலை 5.30 மணிக்கு அண்டோனியா டிசில்வா ஹாலுக்கு வந்து வழக்கம் போல் என் வேலையைச் செய்யத் தொடங்கினேன். சுமார் 5.45/6 மணி அளவில் உன்னை உடனே வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள் என்று எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் என்னை வீட்டிற்கு வரச் சொல்கிறார்கள் என்றால் ஏதோ சீரியஸான விஷயமாகத்தான் இருக்கும். அதனால் நான் திரும்பவும் வீட்டிற்கு போன் செய்தேன். போனை அப்பா எடுத்தார். அப்பாவின் குரலைக் கேட்கும்போது அவர் ரொம்பப் பயந்திருப்பதாகத் தெரிந்தது. மானஸியின் உடம்பு ரொம்ப மோசமாகிவிட்டது என்று அவர் என்னிடம் சொன்னார். அவளுடைய வயிறு வீங்குகிறது, உடல் குளிர்ந்து போகிறது. நீ உடனே வீட்டிற்கு வா என்றார். இந்த விஷயத்தை சுசித்தாத்தாவின் காதில் போடுவதற்காக நான் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். ஆனால் அவர் அன்று லேட்டாக வந்தார். அதற்குள் ஸ்ரீ. அஜய் தள்வி மற்றும் நீதா தள்வி என்னை உடனே வீட்டிற்குப் போகச் சொன்னார்கள், மேலும் "நாங்கள் அவரிடம் சொல்கிறோம், ஆனால் நீ கிளம்பு" என்று அவர்கள் கூறினார்கள்.
நான் 7.30 மணிக்கு வீட்டை அடைந்தேன். மானஸியைப் பார்த்தால் அவள் அசைவற்றுப் படுத்திருந்தாள். அவளுடைய வயிறு வீங்கியிருந்தது. உடல் சில்லென்று குளிர்ந்து போயிருந்தது, வயிற்றில் சும்மா விரலை வைத்தால்கூட அவளுக்கு உயிர் போகும் அளவுக்கு வலி ஏற்பட்டது. யார் பேசுவதையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எங்கள் ஃபேமிலி டாக்டர் மேத்தாவும் வந்திருந்தார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. "இவளை நாம் உடனே ஹாஸ்பிடலுக்குக் கொண்டு செல்வோம்" என்று அவர் என்னிடம் சொன்னார். சுசித்தாத்தாவிடமிருந்தும் அவளை உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய், எதற்கும் கவலைப்படாதே என்று தகவல் வந்தது. அவரின் இந்த ஒரு வார்த்தையாலேயே எனக்கு ரொம்ப தைரியம் வந்தது.
எங்கள் ஃபேமிலி டாக்டர் கிரிட்டிகேர் ஹாஸ்பிடலுக்கு போன் செய்து மானஸியைப் பற்றிச் சொன்னார். பாப்புவின் கிருபையால் அந்த நேரத்தில் ஹாஸ்பிடலில் சர்ஜன், அனஸ்தீஷியன், சோனோகிராபி செய்யும் எல்லா டாக்டர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு ஆம்புலன்ஸ் 8.00 மணிக்கு வந்தது. அவளுடைய வலி மிகவும் அதிகமாகிவிட்டதால், மானஸியை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிச் சென்றார்கள். ஆம்புலன்ஸில் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு செல்லும்போது வண்டி சின்னக் குழியில் இறங்கினால்கூட அவளுக்கு உயிர் போகிற அளவுக்கு வலி ஏற்பட்டது. எங்கள் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவளுடைய அந்த நிலைமையைப் பார்த்து என் கண்களிலுமிருந்து கண்ணீர் வந்தது. மனதில் பாப்புவின் தாரக மந்திரமான ஓம் மனঃசாமர்த்யதாதா ஸ்ரீ அனிருத்தாய நம:॥ தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது. இரவு 8.20 மணிக்கு அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தோம். மானஸியின் பிளட் பிரஷர் 80 வரை குறைந்திருந்தது. டாக்டர்கள் சோனோகிராபி செய்துவிட்டு, இது எக்டோபிக் பிரக்னன்ஸி கேஸ் என்று என்னிடம் சொன்னார்கள். மானஸியின் வயிற்றில் சுமார் 2 லிட்டர் இரத்தம் இருக்கிறது. அதனால் நாம் உடனடியாக இவளுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும். அதற்காக 5 பாட்டில் இரத்தம் தேவைப்படுகிறது என்றார்கள். நான் இந்த விஷயத்தை சுசித்தாத்தாவின் காதில் போட்டேன். அவர் எனக்கு மீண்டும் தைரியம் சொன்னார். டாக்டர் அதங்கபிரபதி இந்த ஆபரேஷன் எவ்வளவு சீரியஸானது என்று என்னிடம் சொன்னார். இந்த கேஸில் பேஷன்ட் இறந்துபோக அதிக வாய்ப்பு இருக்கிறது. உடல் முழுவதும் விஷம் பரவிவிடும் என்றார். டாக்டர்கள் என்னை அங்கேயே காத்திருக்கச் சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல், இரத்தம் கிடைக்கும் வரை நம்மால் ஆபரேஷன் செய்ய முடியாது என்றும் டாக்டர்கள் சொன்னார்கள்.
என் தங்கை மலாடில் உள்ள பிளட் பேங்கிற்கு இரத்தம் கொண்டுவருவதற்காகச் சென்றாள். இரத்தம் கிடைத்ததும் கிளம்பும்போது போன் செய், அப்போதுதான் நாங்கள் இங்கே ஆபரேஷனை ஆரம்பிப்போம் என்று டாக்டர்கள் அவளிடம் சொல்லியிருந்தார்கள். சரியாக 10 மணிக்கு என் தங்கை இரத்தம் கிடைத்துவிட்டது என்று போன் செய்தாள். உடனே மானஸியை ஓ.டி.-க்கு மாற்றினார்கள். அப்போது டாக்டர்கள் மானஸியிடம் உனக்கு பாப்பு மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று கேட்டார்கள். அவள் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. அதே கேள்வியை டாக்டர்கள் என்னிடம் கேட்டார்கள், உனக்கு பாப்பு மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று. நான் அவர்களிடம் 100% பாப்புதான் எல்லாவற்றையும் செய்யப்போகிறார் என்று சொன்னேன். இதைக் கேட்டு டாக்டர்கள் என்னிடம், "அப்படியானால் பயப்படாதே, மானஸிக்கு ஒன்றும் ஆகாது" என்றார்கள். டாக்டர்கள் ஓ.டி.-க்குச் சென்றபோது நேரம் 10.14 ஆக இருந்தது.
10.20 மணியளவில் என் தங்கை இரத்தத்தைக் கொண்டுவந்தாள். மூன்று பாட்டில் இரத்தம் மட்டுமே கிடைத்திருந்தது. அதே நேரத்தில் சுசித்தாத்தா டாக்டர் ஜெயேஷ் ஷாவை அனுப்பி வைத்தார். அவரும் எனக்கு தைரியம் சொல்லிவிட்டு ஓ.டி.-க்குள் சென்றார். 11.45 மணியளவில் டாக்டர்கள் வெளியே வந்து ஆபரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். எதுவும் கவலைப்படாதே என்றார்கள். டாக்டர்கள் என்னை ஓ.டி.-க்குள் கூப்பிட்டு மானஸியின் வயிற்றிலிருந்து எடுத்த இரத்தத்தைக் காட்டினார்கள். பெரிய ஊறுகாய் ஜாடி அளவுக்கு இரத்தத்தையும், ஒரு பெரிய தட்டு நிறைய பிளட் கிளாட் (ஜெல்லி மாதிரி கெட்டியாக) இருப்பதையும் காட்டினார்கள். மேலும் எக்டோபிக் பிரக்னன்ஸி கேஸில் டியூப் வெடித்துவிட்டால் இரத்தப்போக்கு ஆரம்பமாகிவிடும் என்று சொன்னார்கள். அதேபோல பிளட் பிரஷரும் குறைந்துவிடும். இந்த கேஸில் வலி எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்றால் இதனால் பிரெய்ன் ஹேமரேஜ் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது, இப்படியான கேஸில் பேஷன்ட் கண்டிப்பாக இறந்துபோவார் என்றார்கள். மானஸியின் டியூப் பர்ஸ்ட் ஆகியிருந்தது.
அன்று பாப்புவின் பிரவசனத்திற்குப் பிறகு, தரிசனத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு பாப்பு வீட்டிற்குக் கிளம்பிப் போய்விட்டார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. அதே நேரத்தில்தான் இங்கே மானஸியை ஓ.டி.-க்குள் கொண்டு சென்றிருந்தார்கள். மானஸியின் பிளட் பிரஷர் 60 வரை குறைந்திருந்த அதே நேரத்தில், அங்கே பாப்பு பிளட் பிரஷரும் குறைந்திருந்தது. மானஸியின் முழு வியாதியையும் அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார்
ஏழு நாட்களுக்குப் பிறகு மானஸியை வீட்டிற்குக் கொண்டு வந்தோம். பிறகு நான் பாப்புவைச் சந்தித்தபோதும் ரொம்பவும் அழுதேன். நான் பாப்புவிடம் "பாப்பு, உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும் இல்லையா" என்று கேட்டேன். அப்போது பாப்பு சிரித்துக்கொண்டே ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொன்னார், வந்தவனை நான் திரும்ப அனுப்பித்தான் ஆகவேண்டும்.
**********
| English |
|---|
Comments
Post a Comment