பரமபூஜ்ய பாப்புவின் சந்நிதானத்திற்கு வந்த பிறகு, எங்களுடைய எல்லா பொறுப்புகளையும் பாப்புவே ஏற்றுக் கொள்கிறார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஒவ்வொரு அடியிலும் ஏற்படுகிறது. அதேபோல, அவர் எப்போதும் நம்முடனேயே இருக்கிறார் என்ற உணர்வும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற அழகான அனுபவங்களால்தான் எங்களைப்போன்ற சாதாரண பக்தர்களின் பாப்பு மீதான நம்பிக்கை வலுவடைகிறது. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நான் அரசு சுகாதார செவிலியர் துறையில் சூப்பர்வைசராக வேலை செய்கிறேன். எனக்குக் கீழே பல நர்ஸ்கள் வேலை செய்கிறார்கள், அவர்கள் வெவ்வேறு கிராமங்களில் பணிபுரிகிறார்கள். என் வேலை அவர்களின் வேலையைக் கண்காணிப்பதுதான். பரோடா தாலுகாவில் கரச்சியா என்றொரு கிராமம் உள்ளது, அது அகமதாபாத்-மும்பை ரயில்வே ட்ராக்கிற்கு அருகில் இருக்கிறது. அது ஒரு பிளாக் ஸ்டேஷன் கூட, அங்கிருந்துதான் ரயில்களுக்கு சிவப்பு பச்சை சிக்னல்கள் கொடுக்கப்படுகின்றன. வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதற்காக அங்கிருந்து ரயில் பாதைகள் பிரிகின்றன. ரயில்களுக்கு ஏற்ப ட்ராக்குகள் மாற்றப்படும். தினமும் சுமார் 60 ரயில்கள் இந்த ட்ராக்கில் பாஸ் ஆகின்றன.
அது ஏப்ரல் மாதத்தின் கொளுத்தும் கோடை காலம். மதியம் ஒரு மணி ஆகியிருந்தது. கச்சரியா கிராமத்தில் டிசென்ட்ரி மற்றும் டிஹைட்ரேஷன் காரணமாக நிறைய பேர் உடம்பு சரியில்லாமல் இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது.
அப்படி ஏதாவது கால் வந்தால் நான் போயாக வேண்டும். என் கணவர் ரிட்டயர்டு என்பதால் தினமும் ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு என்னை ட்ராப் பண்ணவும் பிக்கப் பண்ணவும் வருவார்.
அன்றைய தினமும் இந்தத் தகவல் கிடைத்ததும் நான் உடனே இவரையும் கூட்டிக்கொண்டு கச்சரியா கிராமத்திற்குப் புறப்பட்டேன். ரயில்வே ட்ராக்கைக் கடந்து செல்லும்போது, திடீரென்று இரண்டு ட்ராக்குகளுக்கு நடுவில் எங்கள் ஸ்கூட்டி மாட்டிக்கொண்டது, ஸ்கூட்டியுடன் சேர்ந்து நாங்கள் இருவரும் கீழே விழுந்துவிட்டோம்!
நாங்கள் ஸ்கூட்டிக்கும் ட்ராக்கிற்கும் நடுவில் விசித்திரமாகச் சிக்கிக் கொண்டோம். மதிய நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டமும் இல்லை. நான் முழுமையாக ஸ்கூட்டிக்கு அடியில் மாட்டிக்கொண்டேன், இவருடைய கால்கள் ஸ்கூட்டிக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் அவராலும் எழுந்திருக்க முடியவில்லை.
நாங்கள் உதவிக்காகக் கத்திக்கொண்டிருந்தோம், ஆனால் யாரும் கேட்கவில்லை. அப்போது தூரத்திலிருந்து ஒரு ட்ரெயின் வருவது தெரிந்தது. அதைப் பார்த்து எங்கள் கண்ணைக் கட்டியது! ட்ரெயின் ஹாரன் சத்தத்தைக் கேட்டதும், இப்போது மரணம் நெருங்கிவிட்டது என்று எங்களுக்கு உறுதியாகிவிட்டது. இனி எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் எங்களுக்குத் தோன்றியது.
ட்ரெயின் எங்களை நெருங்கி வந்துவிட்டது, இன்னும் சில செகண்டுகளில் எல்லாம் முடியப்போகிறது, பாப்பு....பாப்பு....பாப்பு என்ற பெயரைத் தவிர எங்கள் மனதில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. அப்போது திடீரென்று ஒரு மனிதர் எங்கிருந்தோ எங்கள் அருகில் வந்தார், அவர் ஒரே இழுவையில் எங்கள் இருவரையும் தூக்கி நிறுத்தினார். நாங்கள் அவசர அவசரமாக ஸ்கூட்டியோடு ட்ராக்கின் மறுபக்கத்திற்குச் சென்றோம், அதே நொடியில் ட்ரெயின் தடதடவென எங்கள் பக்கமாக வேகமாகச் சென்று மறைந்தது! சில செகண்டுகள் வித்தியாசத்தில் எங்கள் உயிர் தப்பியது. எப்படிப்பட்ட ஒரு ஆபத்தான சூழ்நிலையிலிருந்து அந்த சத்குரு தத்துவம் எங்களை பத்திரமாக வெளியே கொண்டு வந்திருக்கிறது என்பதை உணர்ந்தபோது நாங்கள் ஆடிப்போய்விட்டோம்.
எப்படியோ எங்களை நாங்களே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, கை கால்களில் இருந்த தூசியைத் தட்டிவிட்டோம், எங்கு அடிபட்டிருந்ததோ அங்கே கர்சீப்பைக் கட்டினோம். அப்புறம் நாங்கள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து பார்த்தோம், அதுவும் உடனே ஸ்டார்ட் ஆனது. நாங்கள் உடனே அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தோம்.
....அப்போதுதான் எங்களுக்கும் மரணத்திற்கும் நடுவில் நின்ற அந்த மனிதரின் ஞாபகம் வந்தது.
பின்னால் திரும்பி அவரைத் தேடிப் பார்த்தோம், யாரையும் காணவில்லை! அக்கம் பக்கத்தில் மட்டுமில்லை, ரொம்ப தூரம் வரைக்கும் கூட யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து எங்களைக் காப்பாற்ற யார் வந்தார்கள் என்று அப்போதுதான் எங்களுக்கு உறைத்தது. அந்த மனிதர் யாராக இருந்தாலும், எங்களைப் பொறுத்தவரை அவர் எங்கள் பாபாபுதான்!
இன்றும் இந்தச் சம்பவத்தை நினைத்தால் உடம்பு புல்லரிக்கிறது, முன்னால் ட்ரெயின் வந்துகொண்டிருக்கும்போது ஸ்கூட்டிக்கு அடியில் இரண்டு பேர் சிக்கியிருப்பதைப் பார்த்து, கண் இமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டியோடு இருவரையும் காப்பாற்றிய அவர் யார் என்று மனசுக்குள் யோசனை வருகிறது. எங்களுக்குப் புதுவாழ்வு கொடுத்தது எங்கள் பாப்புதான் என்பதில் எங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட இல்லை.
எல்லோரையும் காப்பாற்றும் எங்கள் காக்கும் கடவுளான பாப்புவுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்!!!
| English |
|---|

Comments
Post a Comment