இங்கே மல்ஹாரராவ் அவர்களின் கிராமத்தில், அதாவது தார்ப்பூரில், மல்ஹாரராவ் அவர்களின் வேலை பகல் வெளிச்சத்திலேயே மும்முரமாக நடந்து கொண்டிருந்தது, மேலும் மாலைக்குள் சரியாக முடிந்தது. அனைத்துப் பொருட்களும் அதாவது பிஸ்டல்கள், சிறிய துப்பாக்கிகள், தோட்டக்கள் (Cartridge) மற்றும் பிற தேவையான பொருட்கள் மாட்டு வண்டிகளில் பூனாவை நோக்கி எப்போதோ புறப்பட்டு விட்டன. ஒவ்வொரு மாட்டு வண்டியின் ஓட்டுனரும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவே இருந்தார்.
இது இப்போதைய விஷயம் அல்ல. 1928 ஆம் ஆண்டிலிருந்து மல்ஹாரராவ் திட்டமிட்டு வேலை செய்து தன்னுடைய ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தார். மறுபுறம், தினமும் மல்ஹாரராவ் அவர்களின் பல்வேறு இடங்களில் இருந்து குறைந்தபட்சம் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் ஏதோ ஒரு பொருளை எடுத்துக்கொண்டு நீண்ட தூரம் வரை சென்று கொண்டிருந்தன. அந்த மாட்டு வண்டிகளைச் சோதித்து-சோதித்து பிரிட்டிஷ் அதிகாரிகள், பிரிட்டிஷ் சார்ஜென்ட், இந்தியச் சிப்பாய்களும் சலித்து போயிருந்தனர். மல்ஹாரராவ் அவர்களின் முத்திரையுள்ள காகிதத்தைப் பார்த்தால் அந்த மாட்டு வண்டிகளை யாரும் திரும்பி கூடப் பார்க்க மாட்டார்கள்.
எல்லாவற்றிலும் மோசமான வேலை என்னவென்றால், மல்ஹாரராவ் அவர்களின் மாட்டு வண்டிகளில் பலமுறை எரிபொருள் கரிக்கட்டைகள், மணல், சிறு மணல், செம்மண், ஜாம்பே கற்கள், சரளைக்கல் (சின்னச் சின்ன துண்டுகளாக உடைக்கப்பட்ட கற்கள்), சாணத்தின் வரட்டி (கோவர்யா) போன்ற பொருட்களும் நிரப்பி அனுப்பப்பட்டன. மேலும் முக்கியமாக அந்தச் சாமான்களுடன் அவ்வப்போது காட்டில் கிடைக்கும் பல்வேறு வகையான பிசின் (டிங்க்) இருக்கும். இவற்றின் வாசனை மற்றும் தூசி, பிரிட்டிஷாரை மட்டுமல்ல, இந்திய அதிகாரிகளுக்கும் மற்றும் சிப்பாய்களுக்கும் கூட தாங்க முடியாததாக இருந்தது. அதனுடன் சில சமயங்களில் மிருகங்களின் பதப்படுத்தப்பட்ட தோலும் இருக்கும். மேலும் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட பல்வேறு வகையான மீன்களும் இருக்கும். உப்பு மீன், பதப்படுத்தப்பட்ட தோல் மற்றும் பிசின் ஆகியவற்றின் வாசனை வந்தவுடனேயே பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்கள் அந்த வண்டிகளில் இருந்து உண்மையில் தூரம் ஓடுவார்கள்.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட சிப்பாய்களுக்கு, ‘சுதந்திரப் போராட்டம் எதற்காக, என்ன’ என்று தெரிந்துகொள்ளும் அறிவுகூட இருக்காது. இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்களாக அல்லது மிகக்
குறைந்த கல்வி கற்றவர்களாக இருப்பார்கள். பிரிட்டிஷார் மீது கோபமாக இருப்பார்கள், ஆனால் வயிற்றுப்பாட்டிற்காகவும் மற்றும் வேடிக்கைக்காகவும் இந்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளைச் சந்தோஷப்படுத்த வேண்டியே இருக்கும். அதற்காக இந்த இந்திய வம்சாவளிச் சிப்பாய்கள் சந்தேகத்திற்குரிய சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தாக்குவதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள்.
மல்ஹாரராவ் அவர்கள் ராமச்சந்திராவுடன் சரியாகப் பேசி அத்தகைய பல இந்தியச் சிப்பாய்களைத் தன்னுடன் கெட்டியாகப் பிணைத்துக் கொண்டார்.
அந்தத் தந்தை-மகனிடம் செல்வம் அளவற்றதாக இருந்தது, மேலும் பாரத மாதாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற பெரிய வைராக்கியமும் இருந்தது. மல்ஹாரராவ் அவர்கள் ராமச்சந்திராவின் வயதுள்ள மற்றும் தங்கள் வயதுள்ள சில விசேஷ நண்பர்களைத் தங்கள் ரகசியப் பணியில் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் மிகவும் வயதானவர்களாக இருந்தனர், அவர்களைப் பார்த்தால் யாரும் அவர்கள் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் உதவியாளர்கள் என்று சந்தேகித்திருக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட வயதான ஆண்கள், சாதாரணமாகத் தோற்றமளிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இந்த வெவ்வேறு இனத்துப் பெண்களைப் பார்த்தால், பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த மாட்டு வண்டிகளின் பக்கம் போகவே மாட்டார்கள். ஏனென்றால் சும்மா ஒரு கிழவர் இறந்துவிட்டால் அல்லது ஒரு உயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை அவமதித்தால், ஒட்டுமொத்த சமூகமும் பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரும்ப முடியும். அத்தகைய நிலைமை ஏற்படாமல் இருக்க, அனைத்துப் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் மீண்டும் மீண்டும் மேலிடத்திலிருந்து எச்சரிக்கை கிடைத்துக் கொண்டிருந்தது. இதனால் மல்ஹாரராவ் மற்றும் ராமச்சந்திரா அவர்களின் வேலை மிகவும் சுமூகமாக நடந்தது.
அதோடு மல்ஹாரராவ் ஒரு பெரிய மதப்பற்றுள்ளவர். அவரைப் பிரிட்டிஷ்
அதிகாரிகள் 'தொடர்ந்து கடவுளை வணங்கும் அதி செல்வந்த ஜமீன்தார்' என்றுதான் அடையாளம் கண்டனர். இந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களுக்குள் பேசும்போது மல்ஹாரராவ் அவர்களை, 'பழக்கமுள்ள கிழவன்' எல்லாப் பாவங்களையும் செய்து சொர்க்கத்திற்குப் போகக் கடவுளை வணங்குகிறான் என்று குறிப்பிடுவார்கள். காரணங்கள் இரண்டு:
1. மல்ஹாரராவ் வெவ்வேறு இடங்களிலுள்ள, மிகச் சிறிய கிராமத்திலுமுள்ள கோவில்களைக்கூடப் புனரமைப்பார். மேலும் தொடர்ந்து ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று நிறைய தானதர்மம் செய்வார். அதே சமயம் பல கோவில்களுக்கு அருகில் அவர் கிணறுகளையும் சிறிய சிறிய தர்மசாலைகளையும் கட்டியிருந்தார்.
2. மறுபுறம் அவர் தவறாமல், ஒவ்வொரு திருவிழாவிலும் நடக்கும் தமாஷா (நாடகம்) மேடையில் தவறாமல் ஆஜராவார். மேலும் அவருடைய வாடா (வீடு) விலும் லாவணி நிகழ்ச்சிகள் நடக்கும். அதுவும் பகிரங்கமாக மற்றும் பலமுறை.
உண்மையில் மல்ஹாரராவ் அவர்களுக்கு அத்தகைய நிகழ்ச்சிகளில் சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை, ஆனால் வேடிக்கையானவர் போல நாடகம் ஆடுவது அவசியமாக இருந்தது. பேராசையுள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தங்களுடன் நட்பு கொள்ள வைக்கவே இத்தகைய விஷயங்கள் அவசியமாயின.
ஜானகீபாய் வெறும் இருபத்தி ஒரு வயதுடையவராக இருந்தார், ஆனால் அந்தக் கால மக்களுக்கு அவளைப் பற்றி ஆச்சரியம் இருந்தது, ஏனென்றால் அவள் வேகமாக (Fluent) இங்கிலீஷ் பேசுவாள். கவர்னரின் மனைவி ஜானகீபாயின் நெருங்கிய தோழியாக இருந்தார். இந்தக் கவர்னரின் மேம்சாஹேப் எந்தவொரு விழாவுக்கும் ஜானகீபாய் இல்லாமல் செல்லவே மாட்டார்.
ஆனால் கிராமம் முழுவதற்கும் நன்றாகத் தெரியும், இந்த மரக் கிடங்கின் எதிரே மல்ஹாரராவ் அவர்கள் புனரமைத்த (உண்மையில் கட்டிய, உருவாக்கிய) 'தார்ப்பூரேஸ்வரர் மகாதேவர்' கோவில் இருந்தது. அதில் சிவலிங்கத்துடன் திரிவிக்கிரமனின் 'ஹரிஹர' வடிவத்தின் சிலையும் இருந்தது.
(கதை தொடர்கிறது)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Comments
Post a Comment