வெளிநாட்டுக்குக் கிளம்பிய ஒரு நபர்... அரைகுறையாகத் தான் ஆங்கிலம் பேச வரும்... படிப்பும் சுமார்தான்... வெளிநாட்டுக்குச் சென்று வீடு, வேலை தேடுவதில் இருந்து எல்லாவற்றையும் அவரே செய்ய வேண்டியிருந்தது... பாப்புவை வெறும் ஒரு சாதாரண மனிதராக மட்டுமே பார்க்கும் ஒரு பார்வை... இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டுக்குக் கிளம்புவதற்கு முன்னால் ஸ்ரீஹரிகுருகிராமிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது, அங்கே எல்லா பயங்களையும் பாப்பு அசால்ட்டாகப் போக்கிவிடுகிறார்... அந்த நபர் தனக்கே தெரியாமல் ஒரு தீவிர பாப்பு பக்தராக மாறிவிடுகிறார்.
2000-ம் ஆண்டில் இருந்தே பாப்புவைப் பற்றி என் மனைவி மூலமாகவும், அவளுடைய பிறந்த வீட்டு மனிதர்கள் மூலமாகவும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் ஸ்ரீசுவாமி சமர்த்தரின் பக்தியை மனப்பூர்வமாகச் செய்து வந்தேன். என் மனைவி வினயாவின் கட்டாயத்திற்காக மட்டுமே 2000-ல் பாப்பு புனேவிற்கு வந்திருந்த போது, அவருடைய தரிசனத்திற்குச் சென்றேன். அப்போது அவர் ஒரு சாதாரண மனிதர், அதற்கு மேல் ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது. இருந்தாலும் பாப்புவின் சேவைகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் மனம் மட்டும் அவரை வழிபடத் தயாராக இல்லை.
30 அக்டோபர் 2009 அன்று நான் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காகக் கிளம்பினேன். நான் பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு ஐ.டி.ஐ-யில் வெல்டிங் கோர்ஸ் முடித்திருந்தேன். டாடா மோட்டார்ஸில் 1996 முதல் 2009 வரை வேலை பார்த்தேன். 2009-ல் எனக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்கில் மைக்ரேஷன் பெர்மனென்ட் விசா கிடைத்தது. என்னுடைய விமானம் 31 அக்டோபர் காலையில் இருந்தது. அதனால் என் நண்பன், அதற்கு முந்தைய நாள் இரவே மும்பையில் இருக்கும் அவனுடைய வீட்டில் தங்கிவிடும்படியும், அங்கிருந்து காலையில் நிம்மதியாக ஏர்போர்டிற்குச் செல்லலாம் என்றும் கூறினான். 30-ம் தேதி மாலை மும்பை வந்தடைந்ததும் எனக்கு சித்திவிநாயகர் தரிசனம் செய்ய வேண்டும் என்று நண்பனிடம் சொன்னேன். ஆனால் நாங்கள் போவதற்குள் கோவில் நடை சாத்தப்பட்டுவிட்டது. என் கழுத்தில் என் மனைவி கொடுத்திருந்த பாப்புவின் லாக்கெட்டைப் பார்த்ததும் நண்பனுக்கு நான் பாப்பு பக்தராக இருப்பேனோ என்று தோன்றியது. அவன் என்னிடம், இன்று வியாழக்கிழமை, நீ பாப்புவின் தரிசனத்தைப் பெற்றுக்கொள், நாளைக் காலை சித்திவிநாயகர் கோவிலின் முதல் ஆர்த்தியை முடித்துவிட்டு உன்னை ஏர்போர்ட்டில் விடுகிறேன் என்றான். என்னோடு என் மாமனார் வீட்டாரும் இருந்தார்கள். உடனே நாங்கள் ஸ்ரீஹரிகுருகிராமிற்குச் சென்றோம்.
குருவியின் காலில் கயிற்றைக் கட்டி |
இழுத்து வருவது போல் உந்தன் முன்னால் |
அப்படியே நீ என்னை இழுத்தாய் நிஜமாய் |
என் மேல் உனக்கு அக்கறை இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன் |
அங்கே சென்றதும் தரிசனத்திற்காகப் மிகப்பெரிய கியூ இருந்தது. இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. கியூவில் மெதுவாக முன்னேறிச் சென்ற போது, பாப்பு என்னை நோக்கிப் பார்த்து, நீ போ, நான் இருக்கிறேன் அல்லவா, கவலைப்படாதே. என்று கைகளாலேயே தெளிவாகச் சைகை செய்து தைரியம் கொடுத்தார். நான் கியூவில் முன்னால் செல்லச் செல்ல, பாப்பு என்னைப்பார்த்து அதே சைகையைத் திரும்பத் திரும்பச் செய்வது எனக்குத் தெரிந்தது. பிறகு நான் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டேன். எழுந்து மீண்டும் பாப்புவைப் பார்த்தேன். அந்த நொடியில் எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது, இவரால் மட்டும்தான் எனக்காக ஏதாவது செய்ய முடியும் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. பாப்புவின் அந்தச் சைகை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம், பாப்பு எனக்கு அதையே சொல்வது போல் தெரிந்தது.
தரிசனம் முடிந்து நான் மீண்டும் கொஞ்சம் தூரம் சென்று சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டேன். எழுந்து நின்றால், மீண்டும் பாப்புவின் அதே சைகை! அந்த நொடியில் எனக்கு ஸ்ரீசுவாமி சமர்த்தரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன, பயப்படாதே, நான் உனக்குத் துணையாக இருக்கிறேன். இரண்டு வாக்கியங்களும் ஒரே சிக்னலைத்தான் கொடுத்தன. பாப்புவின் இந்தச் செய்கையால் என் மனதில் எஞ்சியிருந்த கொஞ்சம் நஞ்சம் பயமும் குறைந்தது. காலையில் எழுந்து சித்திவிநாயகர் தரிசனத்தை முடித்துக் கொண்டு நான் ஏர்போட்டிற்கு வந்தேன். சொந்தக்காரர்கள் எல்லாரும் என்னை வழி அனுப்ப வந்திருந்தார்கள்.
இப்போது என் மனதில் இருந்த பயத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன். புதிய நாட்டுக்குச் செல்ல வேண்டும். சிங்கப்பூரில் விமானம் மாற வேண்டும். ஆங்கில மொழி கேட்டால் புரியும், ஆனால் பேசப் பயமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்குப் போய் நான் வேலையும் தேட வேண்டும். அதனால் அங்கே வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைத்தால் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆங்கிலத்தில்தான் பேசியாக வேண்டும். புதிய நாடு, புதிய மனிதர்கள்! அதிலும் என்னை ஆஸ்திரேலியா ஏர்போட்டிற்கு வந்து கூட்டிச் செல்ல வேண்டிய நபரை நான் 5 வருடங்களுக்கு முன்னால் பார்த்தது. அந்த நபரை என்னால் அங்கே அடையாளம் காண முடியுமா? என்ற கேள்வியும் மனதில் இருந்தது. மனைவியையும் குழந்தைகளையும் இரண்டு மாதங்களுக்குள் அங்கே அழைத்துச் செல்வது கட்டாயமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், ஆங்கிலம் பேசவும் புரிந்து கொள்ளவும் பயமாக இருந்தது. இந்தப் பயம் பாப்புவின் அந்த சைகையால் நிச்சயம் குறைந்துபோனது.
31 அக்டோபர் அன்று சிட்னியை வந்தடைந்ததும் விமானத்தில் இருந்து இறங்கும் போது முதலில் பாப்புவின் பெயரையும் சித்திவிநாயகரின் பெயரையும் உச்சரித்தேன். அன்றைய நாளில் இருந்தே நான் பாப்புவின் நிழலில் வந்துவிட்டேன். சிட்னிக்கு வந்த பிறகு ஒரு சாதாரண மனிதருக்கும், சத்குருவின் வழியில் நடக்கும் மனிதருக்கும் என்ன வித்தியாசம் என்பதை ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்தின் மூலமும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு உடனடியாக வேலை கிடைத்தது. என் மனைவியும் குழந்தைகளும் இங்கே வந்தார்கள், அவர்களும் மிக விரைவாக அங்கே பழகிவிட்டார்கள். அங்கே நான் புதியவனாக இருந்த போது என்னைப் பார்க்க வரும் மனிதர்கள் சொல்வார்கள், அடேய், உனக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் வேலை கிடைத்தது? ஏனென்றால் நவம்பர், டிசம்பர் 2015-ல் கிறிஸ்மஸ் லீவு இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிய வேலை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் பாப்புவின் இருப்பு தெரிந்தது, அவருடைய நினைவு வந்தது. பயப்படாதே, நான் உனக்குத் துணையாக இருக்கிறேன், என்று பாப்பு என்னிடம் சொல்வது போலவே இருந்தது. 2009 முதல் 2013 வரை நான் பாப்புவிடம் எதையெல்லாம் கேட்டேனோ, அதையெல்லாம் அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். இன்று என் வாழ்க்கையில் பாப்பு எனக்குக் கொடுக்காத விஷயம் என்று எதுவுமே இல்லை. நான் சந்திக்கும் ஒவ்வொரு பாப்பு பக்தர்களிடமும், என் நண்பர்களிடமும் என் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறேன்.
நீயும் நானும் பாப்பு இணையும் போது இயல்பாக
சகஜமாகவே அத்வைதம் நடந்துவிடும் நமக்குள் தானாக
அசாத்தியமானதை சாத்தியமாக்குவது நீதானே இந்த உலகினில்
உந்தன் அனந்த லீலைகளைப் பார்ப்பதிலேயே மூழ்கிப் போனேன்
அனிருத்தா, உனக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன்
அனிருத்தா, உனக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன்॥
| English |
|---|

Comments
Post a Comment