சொந்த உழைப்போடும் ஈடுபாட்டோடும் செய்யும் சேவைக்கு, நம்பிக்கையான மற்றும் மனப்பூர்வமான பக்தி துணையாக இருந்தால் ஒரு ஆன்மீகவாதிக்கு எவ்வளவு அழகான அனுபவம் கிடைக்க முடியும் என்பதைச் சொல்லும் ஒரு நெஞ்சைத் தொடும் அனுபவம் இது.
ஹரி ஓம். நான் விஜய்சிங் ஷிண்டே, வானோடே உபாசனா மையம். நான் 2003 முதல் மாடர்ன் ஹைஸ்கூல், புனேயில் உபாசனைக்குச் சென்று வந்தேன். என்னுடைய அடுத்த அனுபவத்தைச் சொல்லும் போது நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன், நம்முடைய பாப்பு ஒவ்வொரு முறையும் நம்மோடு இருக்கவே செய்கிறார்.
ஒருமுறை எங்கள் மையத்தின் சார்பாக கோவித்யாபீடம்,கொதிம்பே, கர்ஜத்திற்கு நாங்கள் சேவைக்காகச் செல்ல வேண்டியிருந்தது. கொதிம்பே சேவைக்கான தகவல் எனக்கு வந்த போது, மாலை 5 மணிக்கு நான் என்னுடைய வேலையில் இருந்தேன். மறுநாள் காலையிலேயே கிளம்ப வேண்டியிருந்தது. மாலையில் சிம்ஹகட் ரோட்டிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது என்னுடைய ஸ்கூட்டர் ஸ்கிட் ஆகி என்னுடைய வலது கையில் பிராக்சர் ஆகிவிட்டது. என்னால் கையை அசைக்கக் கூட முடியவில்லை. அந்தச் சூழ்நிலையிலும் காலையிலேயே சீக்கிரம் எழுந்து நாங்கள் கொதிம்பேவிற்குப் புறப்பட்டோம். அங்கே சேவை செய்யும் போது ஒரு இடத்தில் குழி தோண்ட வேண்டியிருந்தது. அதற்காகப் பெரிய பாறாங்கல்லை உடைக்க வேண்டியிருந்தது. இப்போது என் கையைப் பார்த்தால் வீங்கியிருக்கிறது. இந்த நிலையில் நான் எப்படி அந்தக்குழியைத் தோண்டுவது? ஆனால் எனக்கும் சேவை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது, ஏனென்றால் நான் சேவைக்காகத்தான் கொதிம்பேவிற்கே சென்றிருந்தேன். பிறகு நான் பாப்பு பெயரைச் சொல்லிவிட்டு நேரடியாக வேலையைத் தொடங்கினேன். ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு எந்தவொரு வலியும் தெரியவில்லை, பாப்புவே என் மூலமாக அந்தச் சேவை வேலையைச் செய்து முடித்தார். பாப்புவின் அளவிட முடியாத லீலையினால் எனக்கும் சேவைக்கும் நடுவில் என் வலி தடையாக வரவில்லை. நான் அம்பஞன்.
கர்ஜத்திற்குக் காலையிலேயே சீக்கிரம் வந்துவிட்டதால் எங்களை டிபன் சாப்பிட்டுக் கொள்ளச் சொன்னார்கள். நாங்கள் எல்லாரும் டிபன் சாப்பிடச் சென்றோம். நான் வடை சாம்பார் சாப்பிட எடுத்தேன். சாம்பாரில் முருங்கக்காய் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே முருங்கக்காய் சாப்பிட்டால் என் உடம்பில் கட்டிகள் வந்துவிடும். எனக்கு அதன் அலர்ஜி இருந்தது. தலையிலிருந்து கால் நகம் வரை பெரிய பெரிய சிவப்பான தடிப்புகள் வந்துவிடும். என் உடம்பெல்லாம் சிவந்து தகிக்கும். அப்படி நடந்துவிட்டால் டாக்டரிடம் போவதைத் தவிர வேறு வழியே இருக்காது. இன்ஜெக்ஷன் கண்டிப்பாகப் போட வேண்டியிருக்கும். அதன் பிறகு சுமார் அரை மணி அல்லது ஒரு மணிநேரத்தில் அந்தக் கட்டிகள் குறையும். இப்போது அங்கே காலை டிபனுக்கு நான் வடையோடு சாம்பாரில் இரண்டு வாய் சாப்பிட்டேன். அதில் இரண்டு பெரிய முருங்கக்காய்கள் இருந்தன. தெரியாமல் நான் அதையும் சாப்பிட்டுவிட்டேன். உடனே எனக்கு அந்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. தலையிலிருந்து கால் வரை சிவப்பான பித்தக் கட்டிகள் எழும்பத் தொடங்கின.
என்னோடு இருந்த பாப்பு பக்தர்கள் எனக்குத் தைரியம் தந்து, "கொஞ்சமும் பயப்படாதே, எல்லாமே சரியாகிவிடும்" என்றார்கள். நாங்கள் எங்கே வேலை செய்து கொண்டிருந்தோமோ, அங்கே உடனடியாக உதி (புனித பஸ்பம்) கிடைக்கவில்லை. அப்படியானால் இப்போது என்ன செய்வது என்ற கேள்வி என் முன்னால் இருந்தது. பக்கத்தில் மருத்துவமனையும் இல்லை. ஆனால் பாப்பு இருக்கும் போது கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லை. என் நண்பர்கள் என்னிடம், கொதிம்பேவின் இந்த புனிதமான இடத்தின் ஒவ்வொரு துகளிலும் பாப்பு வாழ்கிறார். அதனால் பாப்புவின் பெயரைச் சொல்லி, மனதில் எந்தவொரு சந்தேகமும் இல்லாமல், நீ இங்கிருக்கும் மண்ணை எடுத்து உன்னுடைய உடம்பு முழுவதிலும் நெற்றியிலும் பூசிக்கொள். பாப்புவின் நாமகரணத்தோடும், முக்கியமாக அவர் மேல் இருக்கும் நம்பிக்கையோடும் பூசும் இந்த மண் கூட உதியின் வேலையைச் செய்யும் என்றார்கள். அதேபோல் பாப்புவின் மேல் முழு நம்பிக்கை வைத்து நான் தரையிலிருந்த மண்ணை எடுத்து என்னுடைய தடிப்புகளில் பூசிக் கொண்டேன். அப்புறம் என்ன ஆச்சரியம்! அடுத்த கணமே நான் முற்றிலும் குணமாகிவிட்டேன். என் உடம்பிலிருந்த எல்லா தடிப்புகளும் கட்டிகளும் சில நொடிக் குள்ளேயே மறைந்துவிட்டன. வீங்கியிருந்த என் கை நொடிப்பொழுதில் பழையபடி ஆகிவிட்டது.
நான் பழையபடி குணமாகிவிட்டதைப் பார்த்து எனக்கு ஏற்பட்ட பேரானந்தம், அது என் பாப்புவின் கிருபையால்தான் எனக்குக் கிடைத்தது. பாப்பு ஒவ்வொரு முறையும் நம்மோடு இருக்கவே செய்கிறார் என்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது. அவர் எங்கே இருந்தாலும் அவருடைய பார்வை எப்போதும் நம்மீது இருக்கவே செய்கிறது. இன்று அவருடைய கிருபையால்தான் என் வாழ்க்கை நிம்மதியாகச் சென்று கொண்டிருக்கிறது. இப்பொழுதும் முருங்கக்காயின் ஒரு சிறு துகளைச் சாப்பிட்டாலும் எனக்குப் பித்தம் வந்துவிடும். ஆனால் உதியாக, வெறும் அந்தப் புனிதமான இடத்தின் மண்ணை பாப்புவின் பெயரைச் சொல்லிப் பூசியதால் என் வலி குளிர்ந்துபோனது.
என்னைப் பொறுத்தவரை எனக்குக் கிடைத்த பாப்புவின் நாமஸ்மரணத்தின் இந்த அனுபவம் மிகவும் முக்கியமானது மற்றும் பெரியது.
ஹரி ஓம் ஸ்ரீராம் அம்பக்ஞ நாதஸம்வித்_
| English |
|---|

Comments
Post a Comment