வாழ்க்கைன்னு சொன்னா கஷ்டமும் நஷ்டமும், இன்பமும் துன்பமும் மாறி மாறி வரத்தான் செய்யும். ஆனா பாப்புவின் நிழலில் சரணடைஞ்ச ஒரு பக்தருக்கு இதை பற்றிய பயமே இருக்காது. அந்த பக்தரோட பக்தி கடுகளவு இருந்தாலும், கருணைக்கடலான பாப்புவோட ஆதரவு அவருக்கு மலை மாதிரி துணை நிற்கும். அதனால கஷ்டம் சின்னதோ பெரியதோ, அதிலிருந்து வெளிய வர ஸ்ரீசண்டிகாகுலத்தோட உதவி கண்டிப்பா கிடைக்கும்ங்கிற உறுதியான நம்பிக்கை அந்த பக்தருக்கு இருக்கும்.
மார்ச் 2013-ல இருந்து எனக்கு தலையில் பயங்கர உஷ்ண (உநாளி) ஏற ஆரம்பிச்சது. நிறைய மருந்துகள் சாப்பிட்டும் எந்த மாற்றமும் இல்லை. 2014 வந்த பிறகும் இந்த நிலைமை அப்படியேதான் நீடித்தது. இந்த ஒரு வருஷத்துக்குள்ள குடும்பத்துல ரெண்டு கல்யாண காரியங்கள் நடந்தது. ஆனா பாப்புவோட கிருபையால கல்யாண நாட்கள் மட்டுமாவது நல்லபடியா நடந்தது. ஆனா கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளிள் இருந்து முகம் அப்படியே விகாரமா மாற ஆரம்பிச்சிடும். மே 12-ஆம் தேதி சித்தி பையனோட கல்யாணத்தை முடிச்சுட்டு, கார்வார்ல இருந்து மும்பைக்கு 19-ஆம் தேதி வந்து சேர்ந்தேன். தலையில அந்த உஷ்ணத்தோட பாரம் கூடிக்கிட்டே போச்சு. டாக்டர்கிட்ட போயிட்டு வந்தும் எந்த பலனும் இல்லை. கடைசியில கண்ணோட ஓரத்துல கண் கட்டி (ராஞ்சணவாடி) வருதுன்னு தோணுச்சு. அதுக்கு கருவாடு தடவுனா சரியாயிடும்னு சொல்லுவாங்க, அதனால நானும் காஞ்ச கருவாட்டை அதுல தடவினேன் ஆனா அதுக்கப்புறம் என் கண்ணோட நிலைமை என்ன ஆச்சுன்னு நீங்களே கேட்காதிர்கள், அந்தளவுக்கு மோசமாகிவிட்டது.
இப்போ கண்ணோட சேர்த்து தலையும் பயங்கரமா வலிக்க ஆரம்பித்தது. டாக்டர் பிளட், சுகர் செக் பண்ண சொன்னாங்க, ஆனா நான் போகவில்லை. கண்ணோட நிலைமை இன்னும் மோசமாகிட்டே போனது. கடைசியில கண் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சாவ்லாவோட அப்பாயிண்ட்மென்ட் வாங்கினேன். சாயங்காலம் 7 மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் இருந்தது. அதுவரைக்கும் கண்ணோட வலி கூடிக்கிட்டேதான் இருந்தது. ....சரியா அந்த நேரத்துலதான் என்கிட்ட அன்னைக்குரிய திரிவிக்ரம ஜலம் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்குறது ஞாபகத்துக்கு வந்தது. நான் நேரா ஒரு கிண்ணத்துல அந்த ஜலத்தை எடுத்து, அதில் கொஞ்சம் உதீ (புனித சாம்பல்) கலந்து, பாப்புவோட போட்டோ முன்னாடி நின்னு மனசுக்குள்ளேயே பாப்புவோட கருணையை வேண்டி இப்படி சொன்னேன்,
பாப்பு, போன வியாழக்கிழமை உங்களோட தரிசனம் கிடைக்கல, இந்த வியாழக்கிழமையும் இதே கண்ணோடவா நான் வரணும்? என்னை இந்த கோலத்துல ஸ்ரீஹரிகுருகிராமத்துக்கு வர வைக்காதீங்க ப்ளீஸ். என் கண்ணை நீங்களே ப்ளீஸ் குணப்படுத்துங்க. இப்படி சொல்லிக்கிட்டே அந்த கிண்ணத்துல இருந்த திரிவிக்ரம ஜலத்தை கண்ணில் தடவினேன். மேலும் நடுநடுவில் ஒவ்வொரு சொட்டா கண்ணில் விட்டு கொண்டிருந்தேன். முன்பு கண் நிலைமை எப்படி இருந்தது என்றால் பன்னீர் (ரோஸ் வாட்டர்) விட்டா கூட பயங்கரமா எரியும். ஆனால் அன்று ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த திரிவிக்ரம ஜலம் நிஜமாவே ஒரு கைக்கண்ட மருந்தா (ராமபாணமா) அமைஞ்சது.
கண் முழுமையா தெளிவடைஞ்சு, குணமாகி டாக்டர்கிட்ட போக வேண்டிய அவசியமே இல்லாம போயிடுச்சு. இதே மாதிரியான ஸ்ரீசண்டிகாகுலத்தோட கிருபை எல்லா பக்தர்கள் மேலயும், அவர்களின் சொந்தக்காரகளின் மேல் இருக்கணும். எல்லாருக்கும் சண்டிகாகுலம் மற்றும் பாப்புவோட கிருபை நிழல் கிடைத்து, எல்லாரும் உண்மை, அன்பு, ஆனந்தம்ங்கிற பாதையிலயே நடக்கணும்னு அவங்க பாதங்கள்ல என்னோட பிரார்த்தனை.
| English |
|---|

Comments
Post a Comment