என் பாப்புவின் அளவற்ற, ஆழமான லீலைகள்! -ஸ்வேதாபவீரா கசேகர், முலுண்ட்

 

இந்த பக்திமிக்க பெண்மணி தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை இங்கே பகிர்ந்துள்ளார். எல்லா அனுபவங்களையும் படிக்கும்போது சத்குரு அனிருத்தரின் அளப்பரிய சக்தியை உணராமல் இருக்க முடியாது. துன்பங்களோ அல்லது பிரச்சினைகளோ எதுவாக இருந்தாலும், யாருடையதாக இருந்தாலும், பக்தர்களின் ஒரே புகலிடம் - சத்குரு அனிருத்தர் தான்!


ஹரி ஓம் ஸ்ரீராம் அம்பக்ஞ. நான் ஸ்வேதாபிரா காசேகர், முலுண்ட் (கிழக்கு) உபாசனா கேந்திரா. நான் Exim Bank இல் Manager ஆக வேலை பார்க்கிறேன். 2002 இல் நான் B.Com. கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த போது தான் முதன்முதலில் பாப்புவின் தரிசனம் பெற்றேன். டிசில்வா பள்ளியில் நடந்த சொற்பொழிவின் கடைசி வியாழக்கிழமை அது. அதன் பிறகு ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடக்கும் பாப்புவின் சொற்பொழிவு பாந்த்ராவில் உள்ள நியூ இங்கிலீஷ் பள்ளியில் நடப்பதாக இருந்தது. வீட்டில் இருந்த கஷ்டங்களால் நான் மிகவும் கவலையில் இருந்தேன். என் சித்தி ஆரம்பத்திலிருந்தே பாப்புவிடம் போய்க்கொண்டிருந்தார், ஆனால் எனக்கு அப்போது அதைப்பற்றி எதுவும் தெரியாது. விஷயம் தெரிந்தபோது, மனதில் பல கவலைகள் இருந்ததால், நாமும் பாப்புவிடம் போய் தான் பார்ப்போமே என்று நினைத்தேன். நான் டிசில்வா பள்ளிக்கு சொற்பொழிவைக் கேட்க முதல்முறை போனபோது, மனதிற்குள் பாப்புவிடம் சொன்னேன், 'இனிமேல் அடுத்த வியாழக்கிழமையில் இருந்து சொற்பொழிவு பாந்த்ராவில் நடக்கும், அதனால் எனக்கு அங்கேயெல்லாம் வர முடியாது.' அதே இரவு என் கனவில் பாப்பு வந்தார், அப்புறம் எப்படி என்று தெரியவில்லை, நான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சொற்பொழிவுக்குப் போக ஆரம்பித்துவிட்டேன்.

B.Com. இல் எனக்கு 77% கிடைத்தது. அதன் பிறகு எனக்கு பேங்கிங் துறையில் வேலை செய்ய ஆசை இருந்தது. பண்டார்கர் காலே சி.எ. நிறுவனத்தில் எனக்கு வங்கி Audit இன் நல்ல அனுபவம் கிடைத்தது. ஆனால் பேங்கிங் துறையின் பல தேர்வுகளை எழுதியும் எனக்குப் பிடித்தமான வேலை கிடைக்கவில்லை. நான் சுசித் தாதாவிடம் என் பிரச்சினையைக் கொண்டு போனேன். அவர் என்னை சில உபாசனைகளைச் செய்யச் சொன்னார். ஒன்றரை வருடம் நான் பண்டார்கர் காலே நிறுவனத்தில் இருந்தேன். அங்கே எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. காலப்போக்கில் எனக்கு என்.கே.ஜி.எஸ்.பி. வங்கியில் வேலை கிடைத்தது. அங்கே நான் பாதி சம்பளத்தில் வேலை செய்தேன். அதன் பிறகு சரஸ்வத் வங்கியில் ஆபீஸர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் நான் மும்பைக்கு வெளியே செல்ல மறுத்துவிட்டேன். கடைசியில் Exim Bank இல் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு, எனக்கு Interview க்காக அழைப்பு வந்தது. நான் மனதார பாப்புவுக்கு நன்றி சொன்னேன், ஏனென்றால் எந்த ஒரு சிபாரிசோ அல்லது அந்த வேலைக்குத் தேவையான தகுதியான படிப்போ இல்லாதபோதும் என்னை அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தார்கள்; அதுவும் வர்த்தமான் விராதிராஜ காலக்கட்டத்தில். விரதம் இருந்து நான் வியாழக்கிழமை Interview க்குப் போனேன். எழுத்துத் தேர்வு ரொம்ப நன்றாக நடந்தது. வங்கியின் படிவத்தை நிரப்பும்போது நான் 'இதர Activities' இல் AADM பற்றி எழுதியிருந்தேன். அது சம்பந்தமாகவே என்னிடம் கேட்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நான் அவர்களிடம் நமது அமைப்பின் பணிகளான Eco-friendly கணேஷ் சிலைகள், தூய்மைப் பணி மற்றும் AADM பற்றிய எல்லா தகவல்களையும் கொடுத்தேன். கோலாப்பூர் மருத்துவ முகாம் பற்றியும் சுருக்கமாக அவர்களிடம் சொன்னேன். அவர்கள் இந்த எல்லா Activities ஐயும் பாராட்டினார்கள், 'இவள் எல்லா துறையிலும் கெட்டிக்காரியாக இருக்கிறாள்' என்று நினைத்து என்னை வேலைக்குத் தேர்ந்தெடுத்தார்கள். என் வர்த்தமான் விரதத்தின் முதல் வருடத்திலேயே பாப்பு எனக்கு Exim Bank இல் வேலை வாய்ப்பை பரிசாகக் கொடுத்தார். என்னைக் கொண்டு செய்ய வைக்கப்பட்ட உபாசனைகளின் பலன் தான் இது என்று நான் நம்புகிறேன்.

இதற்குப் பிறகு வேலையையும் கவனித்துக்கொண்டு நான் மேனேஜ்மென்ட் தேர்வு எழுத முடிவு செய்தேன். ஆனால் பேப்பர் ஒன்றும் அவ்வளவு நன்றாக அமையவில்லை. நான் வெறும் 30 மார்க்குகளுக்குத் தான் சரியாக எழுதியிருந்தேன். அதே காலகட்டத்தில் ஒரு வியாழக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் பிள்ளைகள் பாப்புவின் தரிசனத்திற்காக வந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் நானும் தரிசனம் செய்தேன். பாப்பு அன்றைய சொற்பொழிவில் எல்லா மாணவர்களுக்கும் ஆறுதல் தரும் வார்த்தைகளைக் கூறினார். அதைக் கேட்டு நானும் நிம்மதி அடைந்தேன். ரிசல்ட் வந்தபோது நான் அப்படியே அதிர்ந்து போனேன். 30% பேப்பர் தான் சரியாக எழுதியிருந்தேன், இருந்தாலும் எனக்கு 50% கிடைத்திருந்தது.

என் தேர்வு நடந்து கொண்டிருந்த போதே ஒரு நாள் மாத்ருவாத்சல்ய உபநிஷத் வெளியீட்டு விழா நடந்தது. பாப்பு உபநிஷத்தைப் பற்றிச் சொன்ன தகவல்களைக் கேட்டு, நாம் இந்த பொன்னான விழாவின் சாட்சியாக இருக்கிறோம் என்று பெருமையாக இருந்தது. அன்றைய தினமும் இரவில் வெறும் 50% தான் படிக்க முடிந்தது. மறுநாள் நான் படித்த கேள்விகளே வந்தன, நானும் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இதுதான் என் பாப்புவின் மாயம்! மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் பாப்புவே என்னிடம் வேலையையும் படிப்பையும் இரண்டையும் செய்ய வைத்தார். பாப்புவே என் முழு குடும்பத்தின் பாரத்தையும் தாங்கினார். என் அம்மாவிற்கும் தகுந்த இடத்திற்கு மாறுதல் கிடைத்தது, என் தம்பிக்கும் வேலை கிடைத்தது. பாப்பு எங்களை அவ்வப்போது ரொம்பவே காப்பாற்றினார்.

நான் என் தாத்தாவின் ஒரு அனுபவத்தை எல்லோரிடமும் கண்டிப்பாகச் சொல்ல விரும்புகிறேன். அவர் என் சித்தி வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு 85 வயதாக இருந்தபோது Prostate Cancer இருப்பது கண்டறியப்பட்டது. அவர் முற்றிலும் படுத்த படுக்கையாகவே இருந்தார். ஒரு சனிக்கிழமை என் சித்தி போன் செய்து தாத்தா வலியால் துடிக்கிறார் என்று சொன்னார். நான் உடனே சுசித் தாதாவிடம் ஓடினேன். டாக்டர் சிவானந்தசிங் ஃபைலைப் பார்த்தவுடனேயே சொன்னார், "இது நான்காவது Stage கேன்சர், குணமாவது கஷ்டம்" என்று. பிறகு நான் சுசித் தாதாவிடம் என் ஒரே ஒரு ஆசையைச் சொன்னேன், கடைசி நிமிடத்தில் தாத்தாவுக்கு எந்த வலியும் இருக்கக்கூடாது என்று. தாதா எங்களை தாத்தாவிற்காக ராமரக்ஷா ஸ்தோத்திரம் சொல்லச் சொன்னார். பாப்பு இங்கேயும் என் தாத்தாவைக் கவனித்துக் கொண்டார், மறுநாளே சித்தியிடமிருந்து போன் வந்தது, அண்ணாவின் (தாத்தாவின்) வலிகள் முற்றிலும் நின்றுவிட்டன என்று. அவர் படுக்கையிலேயே கிடந்தாலும், மிகவும் நிம்மதியாக, நன்றாக இருந்தார். சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தாத்தா எந்த ஒரு வலியும் இல்லாமல் இயற்கை எய்தினார்.

அதன் பிறகு ஒருமுறை பாப்பு என் கனவில் வந்தார், நான் பார்த்தபோது அவருடைய முகம் முழுவதும் காயமடைந்து காணப்பட்டது. தாத்தாவின் அத்தனை கர்ம வினைகளையும் பாப்பு தன் மேல் ஏற்றுக்கொண்டார் என்று நான் நினைக்கிறேன். நமக்காக பாப்பு எவ்வளவு துன்பங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது! தாத்தாவின் கடைசி நிமிடத்தில் பாப்பு அவரை ஒரு குழந்தையைப் போலக் பார்த்துக்கொண்டார்.

எனக்கு இன்னொரு அனுபவமும் சொல்ல வேண்டும். அது ஸ்ரீகுருக்ஷேத்ரம் பற்றியது. ஸ்ரீ அனிருத்த குருக்ஷேத்ரத்தில் மோட்டி ஆய்-யிடம் (பெரிய அம்மாவிடம்) செய்யும் பிரார்த்தனை ஒருபோதும் வீண் போகாது. என் அம்மாவிற்கு Spondylitis தொந்தரவு ஆரம்பமாகியிருந்தது. அவரை முலுண்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து Traction தொடங்கப்பட்டது. பிறகு ஒரு மாதம் முழு ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். நான் ரொம்பவே பயந்து போனேன், என் அம்மா இனிமேல் குணமாகவே மாட்டார் என்று நினைத்தேன். நான் குருக்ஷேத்ரத்தில் பெரிய அம்மாவிடமும் திரிவிக்ரமரிடமும் பிரார்த்தனை செய்தேன்.

அப்புறம் வீட்டுக்கு வந்ததும் அங்கே பார்த்த காட்சியைக் கண்டு நான் திகைத்துப் போனேன். வாசலில் மாலை தொங்கவிடப்பட்டிருந்தது. அம்மாவிடம் இதைப் பற்றிக் கேட்டபோது அவர் சொன்னார், "உன் சித்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் புஷ்பசேவை எடுத்திருந்ததால் நான் அவருடன் குருக்ஷேத்ரம் வரை போய்விட்டு வந்தேன், பிரசாதமாகக் கிடைத்த மாலையை நம் வாசலில் மாட்டியிருக்கிறேன்." என் அம்மா குணமாகி நடப்பதைப் பார்த்து நான் வாயடைத்துப் போனேன். நான் பெரிய அம்மாவிடம் பிடிவாதம் பிடித்துப் பிரார்த்தனை செய்கிறேன், உடனே அம்மா நடந்து குருக்ஷேத்ரத்திற்குப் போகிறார்! இதெல்லாம் என் புத்திக்கு எட்டாததாக இருந்தது. பெரிய அம்மாவிற்கும் பாப்புவிற்கும் நம்மீது எவ்வளவு பாசம், கருணை! எனக்குத் தெரியாமலேயே பெரிய அம்மா எனக்கு எவ்வளவு பெரிய பரிசைக் கொடுத்துவிட்டார்.

என் தோழி ஒருத்தி குழந்தை இல்லாததால் மிகவும் விரக்தியில் இருந்தாள். ஒருமுறை அவள் என் Desk இல் பாப்புவின் புகைப்படத்தைப் பார்த்தாள். அப்போது அவளிடம் பாப்புவைப் பற்றிய தகவல்களைச் சொன்னேன், அப்போது விநாயகர் சதுர்த்தி என்பதால் பாப்புவின் வீட்டு கணபதியைப் பற்றியும், பாப்பு சொன்ன சங்கல்ப பாக்கைப் பற்றியும் சொன்னேன். அவள் ஏகப்பட்ட 'சாமி சாமி' என்று கும்பிட்டு வேண்டுதல்கள் செய்திருந்தாள். அப்போது நான் அவளிடம் சொன்னேன், "உனக்கு நம்பிக்கையிருந்தால் நீ பாப்புவின் தரிசனத்திற்கு வா, சங்கல்ப பாக்கு வாங்கி சங்கல்பம் செய்துகொள். பாப்பு நிச்சயம் உனக்கு உதவி செய்வார்." அவள் அதேபோலச் செய்தாள், அதே வருடத்தில் அவளுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. முதன்முதலாக கணேஷ் உற்ஸவத்திற்கு வந்த என் தோழியின் மனவிருப்பமும் பாப்புவின் அருளால் நிறைவேறியது.

எல்லோர் வாழ்க்கையிலும் துன்பங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நம் Dad சரியான வழிகாட்டுதலைக் கொடுத்து ஒவ்வொரு பக்தரையும் அதிலிருந்து மிக எளிதாக வெளியே கொண்டு வந்துவிடுகிறார், இதை நானும் என் குடும்பத்தினரும் முழு நம்பிக்கையுடன் எல்லோருக்கும் சொல்கிறோம்.

நான் அம்பக்ஞ
ஹரி ஓம்
நாத்ஸம்வித்

Comments