என் அஸ்தமா முழுமையாகக் குணமாகிவிட்டது ! - அனிருத்தசிம்ஹ குரே, இந்தூர்

உபாசனா மையத்தில் நடக்கும் ஸ்ரீஸ்வஸ்திக்க்ஷேம் உரையாடலும், அதேபோல் வீட்டிலும் சண்டிகாகுலத்தின் முன்னால் நம்பிக்கையோடு செய்யும் பிரார்த்தனையும் எப்படிப் பலன் தருகிறது என்பதற்கான ஒரு அழகான அனுபவம் இது.

ஹரி ஓம். ஆதிமாதா மஹிஷாஸுரமர்தினி மற்றும் சத்குரு ஸ்ரீஅனிருத்த பாப்புவின் மீது எங்க
ள் குடும்பத்தினர் அனைவருக்கும் அளவற்ற அன்பு இருக்கிறது. பாப்பு எங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் நிச்சயம் சரிசெய்துவிடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இன்று, 2019-ல் எனக்கு 19 வயதாகிறது. சன் 2014-ல் எனக்கு 14 வயதாக இருந்தபோது, நான் மிகவும் பலவீனமாக இருந்தேன். நான் ரொம்ப சீக்கிரமாகவே களைப்படைந்து விடுவேன். அந்த சமயத்தில் என் அம்மாவும் அப்பாவும் என்னை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர் என்னை பரிசோதித்துவிட்டு அஸ்தமாவுக்கான டெஸ்ட் எடுக்கச் சொன்னார். மருத்துவர் சொன்ன டெஸ்டுகளை நாங்கள் எடுத்தோம், அந்த ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் மருத்துவரிடம் சென்றோம்.

ரிப்போர்ட்டைப் பார்த்து மருத்துவருக்கே ஆச்சரியமாக இருந்தது. என் ரிப்போர்ட்டில் அஸ்தமாவின் அறிகுறிகள் மிக அதிகமாகக் காணப்பட்டன. மருத்துவர் எனக்கு அஸ்தமாவுக்கான சிகிச்சையைத் தொடங்கினார். தன் மகனுக்கு அஸ்தமா இருக்கிறதே என்ற கவலையில் என் அம்மாவுக்கு ரொம்பவே பயம் வந்துவிட்டது. என் அம்மாவுக்கு இரவில் எங்கள் வீட்டில் இருக்கும் சண்டிகாகுலம் புகைப்படத்தின் முன்னால் நின்று மனம்விட்டுப் பேசும் (உரையாடும்) பழக்கம் இருந்தது. சில நேரங்களில் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்து கூட, அம்மா தன் மனக்குறைகளை அந்தப் புகைப்படத்தின் முன்னால் நின்று பேசுவாள். உபாசனா மையத்தில் நடக்கும் ஸ்ரீஸ்வஸ்திக்க்ஷேம் உரையாடலிலும் அம்மா ஜெகத்மாதாவிடமும் பாப்புவிடமும் எப்போதும் சொல்வாள், என் மகனுக்கு அஸ்தமா இருக்கிறது, நீங்கள் அவனை சீக்கிரம் குணப்படுத்துங்கள். அஸ்தமா என்ற இந்த நோய் எப்போதும் குணமாகாது என்று அம்மாவிற்குத் தெரிந்தவர்கள் சொல்லியிருந்தார்கள். நான் ஒரு நாளைக்குக் குறைந்தது நான்கு முறையாவது இன்ஹேலர் (அஸ்தமாவிற்காக வாய் வழியாக மருந்தினை ஸ்பிரே செய்துகொள்ளும் சிகிச்சை முறை) பயன்படுத்த வேண்டியிருந்தது. அதோடு சேர்த்து நெபுலைசரும் பயன்படுத்தி வந்தேன்.

என் பெரிய அண்ணன் ரூபேஷ்சிம்ஹ மும்பையில் இருக்கிறான். அவனுடைய போன் வந்த பிறகு, அம்மா அவனிடம் என் ரிப்போர்ட்டைப் பற்றிச் சொன்னாள். ரூபேஷ்சிம்ஹ உடனே அம்மாவிடம் சொன்னான், "நாம் அனிருத்தனை சுசித்தாதாவிடம் கூட்டிட்டுப் போவோம்". அவன் இதைச் சொன்ன பிறகு, நாங்கள் எல்லா ரிப்போர்ட்டுகளையும் எடுத்துக்கொண்டு சுசித்தாதாவைச் சந்திப்பதற்காக மும்பைக்குப் புறப்பட்டோம்.

சுசித்தாதா என் ரிப்போர்ட்டுகளைப் பார்த்துவிட்டு எனக்கு மருந்து கொடுத்து சிகிச்சையைத் தொடங்கினார். எனக்கு ரொம்பவே சிரமமாக இருந்தது. என் அஸ்தமா முழுமையாகக் குணமாகக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்ற நிலை இருந்தது. சில நேரங்களில் எங்களிடம் மருந்திற்குப் பணம் இருக்காது, ஆனால் பாப்புவின் அருளால் மருந்திற்குக் கஷ்டம் என்று எதுவுமே வந்ததில்லை. ஒரு வருடத்திற்குள்ளேயே பாப்புவின் அருளாலும் சுசித்தாதாவின் மருந்தாலும் நான் முழுமையாகக் குணமடைந்தேன். இதற்குப் பிறகு எனக்கு ஒருமுறை காய்ச்சல் வந்தது, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். காய்ச்சல் வந்த காரணத்தால் மருத்துவமனையில் எனக்கு எல்லா டெஸ்டுகளும் செய்யப்பட்டன. ப்புவின் கிருபையாலும் ஆசீர்வாதத்தாலும் என் எல்லா ரிப்போர்ட்டுகளும் நார்மலாக வந்தன, அதில் அஸ்தமாவின் அறிகுறி கொஞ்சம் கூடக் காணப்படவில்லை.

இதை என் சத்குரு பாப்புவால் மட்டும்தான் செய்ய முடியும். முடியாததை சாத்தியமாக்குபவர் பாப்பு மட்டும்தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஜெய் ஜெகதாம்பா ஜெய் துர்கே!

II ஹரி ஓம் II II ஸ்ரீராம் II
II அம்பக்ஞ II II நாதஸம்வித் II

English

Comments