இந்திய விடுதலைப் போராட்டத்தின் அறியப்படாத வரலாற்றின் ஒரு பார்வை - பாகம் 23

 

மல்ஹார்ராவ் தமக்கே தெரியாமல் இரண்டு கைகளையும் கூப்பி, அங்கிருந்த எல்லோருக்கும் கேட்கும் படியான குரலில் ராணி லட்சுமிபாய் மற்றும் பாரத மாதாவிற்கு ஜெயகோஷம் எழுப்பினார்.


கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த இந்த 1857-1858 சுதந்திரப் போராட்டத்தின் புனிதமான நினைவு கூர்தல், அங்கிருந்த ஒவ்வொருவரையும் பலமுறை உலுக்கி எடுத்திருந்தது; அதிர வைத்திருந்தது. முக்கியமாக, இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரத்திற்கு முன்னால் அங்கிருந்த ஒவ்வொருவரும் தலைவணங்கி நின்றனர். கண்களில் இருந்து அடிக்கடி முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, மாறாக ஒவ்வொருவர் மனதிலும் தேசபக்தி உணர்வு இன்னும் தீவிரமாகிக் கொண்டே போனது.


சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு மல்ஹார்ராவ் மீண்டும் பேசத் தொடங்கினார், "இந்த போருக்குப் பிறகு பிரிட்டிஷ் பார்லிமெண்டில் இதே விஷயத்தைப் பற்றி மிகக் கடுமையான விவாதம் நடந்தது. இதைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு கமிட்டியும் நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டியின் அறிக்கையின்படி விக்டோரியா ராணியின் பிரகடனம் (Queens Proclamation) இந்தியாவிற்காகத் தயார் செய்யப்பட்டது.


இந்த ராணியின் பிரகடனத்தில் பல விஷயங்கள் இருந்தாலும், முக்கியமானவை ஐந்து தான். 1) இந்தியாவின் மீதான ஆட்சி, ஈஸ்ட் இந்தியா கம்பெனி அரசிடமிருந்து பிரிட்டிஷ் அரச அதிகாரத்திற்கு, அதாவது பிரிட்டிஷ் பார்லிமெண்ட் மற்றும் ராணியின் கைக்கு மாறியது. 2) இந்தியாவில் அதுவரை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வராத சமஸ்தானங்களுக்கு மரியாதையான நடத்தைகள் கிடைக்கும், பிரிட்டிஷ் தர்பாரில் அவர்களுக்கு அந்தஸ்து வழங்கப்படும். 3) ஆங்கிலேய ஆட்சியுடன் இணைக்கப்பட்ட நாடுகளின் அரச குடும்பத்து நெருங்கிய உறவினர்கள் பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துப்போனால் அவர்களுக்கு மாதந்தோறும் கௌரவமான உதவித்தொகை வழங்கப்படும், அதுவும் நல்ல தொகையாக இருக்கும். அதோடு அவர்கள் தங்களின் கோட்டைகளை விட்டுவிட்டு மற்ற அரண்மனைகளையும் வீடுகளையும் திரும்பப் பெற முடியும். 4) இந்து மதத்தில் தத்து எடுக்கும் மத சடங்கு முறை அங்கீகரிக்கப்பட்டது. தத்து எடுக்கும் மகனுக்கு இந்து மதம் அங்கீகரிக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கும், இது சாதாரண மனிதன் முதல் ராஜாக்கள் வரை எல்லோருக்கும் பொருந்தும். 5) பிரிட்டிஷ் அரசு இந்தியர்களின் மத விஷயங்களில் தலையிடாது மற்றும் இந்தியர்களின் புண்ணியத் தலங்களைப் பாதுகாப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.


இந்த ஐந்து அம்சங்களால் சமஸ்தான அரசர்களிடமும் பொதுமக்களிடமும் ஓரளவிற்குத் திருப்தி ஏற்பட்டது. ஏனென்றால் ஆட்சி நிர்வாகம் ஈஸ்ட் இந்தியா கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைக்கு மாறியதால், பொறுப்பற்ற முறையில் நடந்து வந்த கம்பெனி ஆட்சியின் கொடுமைகளுக்கு ஒரு முடிவு கிடைத்தது. மக்களாட்சி முறையில் நடக்கும் பிரிட்டிஷ் அரசிடமிருந்து கம்பெனி அரசு போன்ற கொடுங்கோல் நடத்தை இருக்காது என்று ஒவ்வொருவரும் நம்பினார்கள்.


அதோடு, மத சடங்குகள் மற்றும் புண்ணியத் தலங்கள் குறித்த வாக்குறுதிகளால், பழைய ஆக்கிரமிப்பாளர்கள் போல கட்டாய மதமாற்றங்கள் நடக்காது என்கிற பலமான நம்பிக்கை மக்களுக்கு வரத் தொடங்கியது. இந்த விஷயம் சாதாரண இந்திய மக்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.


அதே நேரத்தில் பிரிட்டிஷ் அரசு தொடங்கிய பல நவீன சீர்திருத்தங்கள் மெல்ல மெல்ல பெரிய நகரங்களைத் தாண்டி சிறிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவத் தொடங்கின. இதனால் பிரிட்டிஷ் அரசு நல்லது என்கிற எண்ணம் உருவாகத் தொடங்கியது.


ஆனால் ராணியின் பிரகடனம் என்பது ஆங்கிலேயர்களின் ஒரு தந்திரமான காய்நகர்த்தல். அந்த பிரகடனத்தால் சமஸ்தான அரசர்கள் சுதந்திரப் போராட்டத்தில் இறங்குவதைத் தடுப்பதில் பிரிட்டிஷ் அரசு வெற்றி பெற்றது. சமஸ்தான அரசர்களின் பிள்ளைகள் பிரிட்டிஷ் அரசின் பிரத்யேக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அல்லது ஸ்பெஷல் யூரோப்பியன் ஆசிரியர்களிடமும் படிக்கத் தொடங்கினார்கள். பின்னர் மிக இளம் வயதிலேயே இங்கிலாந்திற்கு மேல் படிப்பிற்காகப் போகத் தொடங்கினார்கள். இதனால் மெல்ல மெல்ல அந்த அரசர்கள் தங்களையே பிரிட்டிஷ் வம்சத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதத் தொடங்கினார்கள். அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசின் வைஸ்ராய் மற்றும் கவர்னர்களுக்கு முன்னால் பணிந்து போவதில் எந்தக் கஷ்டமும் தெரியவில்லை.


மகிழ்ச்சியடைந்த அரசர்கள், ஆங்கிலேயர்கள் தங்களுக்குக் கொடுத்திருந்த அந்தச் சிறிய அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் மக்களை இன்னும் அதிகமாகப் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக மாற்றத் தொடங்கினார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களைத் தெரிந்த உடனேயே ஒடுக்கி வந்தார்கள்.


இந்திய மக்களும் இந்தப் பிரகடனத்தால் மத விஷயங்களுடன் அன்றாட வாழ்க்கையிலும் அமைதியை உணரத் தொடங்கினார்கள்; ஆனால் இந்த அமைதிக்கு பின்னால், நல்ல வாக்குறுதிகளை விட ஒரு மிகப்பெரிய பயம் ஒளிந்திருந்தது.


முதலில் கம்பெனி அரசும் பிறகு பிரிட்டிஷ் அரசும் அந்த 1857-58 சுதந்திரப் போரில் பங்கேற்ற ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து, ஊர் கூடும் பொது இடங்களில் தூக்கிலிடுவது அல்லது கழுவிலேற்றும் பயங்கரவாதச் செயலைத் தொடர்ந்து செய்தே வந்தார்கள்.


இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய மாவட்டத்திலும் ஊர்களிலும், நாற்சந்திகளிலும் பலரைத் தூக்கிலிட்டு அவர்களின் சடலங்களை அப்படியே தொங்கவிட்டார்கள். இந்தப்

பயத்தினால் அடுத்த இருபது ஆண்டுகளுக்குச் சாதாரண மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போய் எதையும் செய்யத் துணியவில்லை.


ராவ் சாஹேப் பேஷ்வா மற்றும் தாத்யா தோபே ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பிறகும், பேஷ்வாக்களின் புனேயில் கூடப் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. காரணம் பிரிட்டிஷ் அரசு புனே போன்ற முக்கியமான நகரங்களில் பெரும் படைகளைக் குவித்திருந்தது. மேலும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் பிரிட்டிஷ் ஏஜெண்டுகள் உருவாகியிருந்தார்கள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த பிரிட்டிஷ் ஏஜெண்டுகள் தங்களுக்குக் கிடைக்கும் பணத்திற்காக உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். ஆங்கிலேயர்களை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் எதிராகத் துணிந்து நின்றார்கள்; அதுவும் ஏதோ சமூக அநீதி நடப்பது போன்ற காரணங்களைக் கூறி.


பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய யுனிவர்சிட்டி மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்காக எல்லா ஜாதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையேயும் ஒரு போட்டியே தொடங்கியது. ஏனென்றால் இந்த யுனிவர்சிட்டிகளில் படித்துப் பட்டம் பெற்று வருபவர்களுக்குப் பெரிய பெரிய பதவிகள் கிடைத்தன. அவர்களுக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்துச் சுற்றியிருந்த பலரும் அதே பாதையைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார்கள்.


ஆங்கிலேயர்களின் கருத்துப்படி வெறும் இரண்டு ஆண்டுகளில், அதாவது 1860-க்குள் இந்திய சமஸ்தான அரசர்களும் இந்திய மக்களும் பிரிட்டிஷ் ஆட்சியையும் ஆதிக்கத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள். அப்படி ஒரு அறிக்கை கூட 1860 டிசம்பரில் வைஸ்ராயிடமிருந்து இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் 23 ஜூலை 1856 அன்று ரத்னகிரி மாவட்டத்தின் சிக்லி என்கிற ஒரு சிறிய கிராமத்தில் பாரத மாதாவின் ஒரு வீரப்புதல்வன் பிறந்தே விட்டான் - இவரைத்தான் பின்னாளில் நாம் லோகமான்ய பால கங்காதர திலகர் என்று அழைத்தோம். இந்த மாவீரன் தான் கொங்கணத்திலிருந்து புனேவிற்கு வந்து கல்லூரியில் சேர்ந்தார்."


(கதை தொடரும்)




मराठी >> हिंदी >> English >> ગુજરાતી>> ಕನ್ನಡ>> తెలుగు>> বাংলা>> മലയാളം>>

Comments