கனவில் பாப்பு அளித்த வாக்குறுதி பலித்தது - அசோக் துமால் டோம்பிவிலி

கனவில் பாப்பு அளித்த வாக்குறுதி பலித்தது - அசோக் துமால் டோம்பிவிலி

சத்குருவின் வாக்கு முக்காலத்திற்கும் பொருந்தும், விழிப்பு-உறக்கம் என அனைத்து நிலைகளிலும் அது சத்தியமாகவே இருக்கும். இந்த அனுபவத்தில், பக்தர் ஒருவருக்கு அவரது பிராரப்த கர்மாவால் சில problem நடந்து கொண்டிருக்கும் போது, ஒருமுறை அவருக்கு ஒரு கனவு வருகிறது. கனவில் பாப்பு வந்து, அவருக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறார், பிறகு....

--------------------------------

உன் குணங்களைப் பாடுகிறேன் என்பதற்காக, என்னை நானே குணவான் என்று எப்படிச் சொல்வேன் |

நீயே கடனாகக் கொடுத்தது தானே இது, அதற்கு நான் எப்படி முதலாளி ஆவேன் |

உன் கிருபையால் தான் வீட்டில் அடுப்பு எரிகிறது, உன் கிருபையால் தான் மரத்தில் பூக்கள் மலர்கின்றன |

பாப்புராயா, உன் பார்வை இருப்பதனால் தான் வீட்டிலும் வாசலிலும் குழந்தை விளையாடுகிறது |

நான் யார்? என்று தேடச் சென்ற போது,

பாப்பு, உன்னைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே நான் நானாக இல்லை |

நீ என்னுடையவனாகவும், நான் உன்னுடையவனாகவும் ஆகிவிட்டோம் |

இப்படிப்பட்ட நிலையை எனக்கு மட்டும் அல்ல,

ஒவ்வொரு வியாழக்கிழமையும் வரும் ஒவ்வொரு பக்தருக்கும் நீ இதே நிலையைத் தான் ஏற்படுத்துகிறாய் |

நான் பாப்பு குடும்பத்தில் 1998 ஆம் ஆண்டு வந்தேன். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் போஸ்லே தான் எனக்கு பாப்புவைப் பற்றிய தகவல்களைக் கொடுத்தார். பாப்புவின் கிருபையால் என்னிடம் அனுபவங்களின் பொக்கிஷமே இருக்கிறது. ஆனால், எனக்கு ஏற்பட்ட மிகவும் முக்கியமான ஒரு அனுபவத்தை நான்

உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நான் 1987 ஆம் ஆண்டு பிருஹன்மும்பை போலீஸ் படையில் யாருடைய ஆதரவும் இல்லாமல், சாயி கிருபையால் சேர்ந்தேன். சேர்ந்த போது எனக்கு chest no. 108 கிடைத்தது. அதன் கூட்டுத்தொகை 9 ஆக வருகிறது. நான் பிறந்ததும் 9 ஆவது மாதத்தில் தான். மொத்தத்தில் 9 என்பது என்னுடைய அதிர்ஷ்ட எண்.

2009 ஆம் ஆண்டில் இரண்டு புகார்தாரர்கள் என் மீது பொய்ப் புகார் கொடுத்தனர், மேலும் அவர்கள் மேலிடத்தில் manage செய்ததால் என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். அந்த நேரத்தில் என் மூத்த மகன் 12th science பாஸ் செய்திருந்தான், இளைய மகன் பத்தாம் வகுப்புக்குச் சென்றிருந்தான். இப்படிப்பட்ட முக்கியமான கட்டத்தில் என் வேலை பறிபோயிருந்தது. இங்கே குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், 2004 ஆம் ஆண்டிலிருந்து சில தவறான புரிதல்களால், நான் ஸ்ரீஹரிகுருகிராமத்திற்கும், உபாசனா மையத்திற்கும் செல்வதை நிறுத்தியிருந்தேன்! அந்த காலகட்டத்தில் நான் பாபாபுவின் உபாசனையை வீட்டிலேயே செய்து வந்தேன். என் வேலையை இழக்க நேரிட்டதால், என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாப்பு மீதிருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆனால் எனக்கு பாப்பு மீது முழுமையான நம்பிக்கை இருந்தது. சம்பளம் தான் ஏற்கனவே நின்றுவிட்டதே.

நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றேன். அங்கே சித்தப்பாவிடம் இருந்த ஊர் நிலத்தைப் பிரித்து என்னிடம் வாங்கிக்கொண்டு ஊரிலேயே தங்கிவிட்டேன். 5 மாதங்களுக்குப் பிறகு ஊரில் இருக்கும்போது எனக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பாப்பு வந்தார். அவர் என்னைக் கையால் அருகில் அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நான் தூரத்திலிருந்தே அவருக்கு நமஸ்காரம் செய்தேன். அவர் அருகில் செல்ல எனக்கு தைரியம் வரவில்லை. அதன்பிறகு பாப்பு மீண்டும் என்னை அருகில் அழைத்ததும், நான் அருகில் சென்று உடனே அவருக்கு சாஷ்டாங்கமாகத் தண்டனிட்டேன். அவரது இரண்டு பாதங்களையும் என் கைகளில் ஏந்தி, அந்த பாதங்களில் முத்தமிட்டேன். பிறகு முழங்காலிட்டு நின்று நமஸ்காரம் செய்தபோது, பாப்பு தன் இரண்டு கைகளாலும் என்னைப் பிடித்துக் கட்டித்தழுவி, "குழந்தாய், நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன். உன்னுடைய போலீஸ் வேலையை நான் 9 ஆம் தேதி செய்து முடிக்கிறேன்..." என்றார், அந்த நொடியே நான் விழித்துக்கொண்டேன்.

நான் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தபடியே என் மனைவியிடம் கனவைப் பற்றிச் சொன்னேன். அப்போது அவள், "இன்றைக்கு 27 ஆம் தேதி. எந்த மாசத்தோட 9 ஆம் தேதி?" என்று கேட்டாள். அப்போது நான் அவளிடம், "எனக்குத் தெரியாது. ஆனால் 9 ஆம் தேதியன்று என் பாப்பு வேலையை முடித்துக் கொடுப்பார் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரியும். எனக்கு என் பாப்பு மீது நம்பிக்கை இருக்கிறது, அவர் என் நம்பிக்கையை வீணாக்க மாட்டார்," என்றேன். நான் இந்தக் கனவைப் பற்றி வேறு யாரிடமும் சொல்லாமல், பாப்பு பக்தரான என் நண்பர் சுபாஷ்சிங் ராணேயிடம் மட்டுமே சொல்லியிருந்தேன். கனவு வந்த சரியாக 9 நாட்களுக்குப் பிறகு, காவல் நிலையத்திலிருந்து என் mobile writer கதமிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது. அவர் சொன்னார், "நீங்கள் செய்த appeal-க்கு விசாரணை இருக்கிறது. D.G.

ஆஃபீஸில் 9 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்!" ஃபோனில் இந்தக் வார்த்தைகளைக் கேட்டதுமே என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நான் சத்தமாக கத்தி என் மனைவியிடம் சொன்னேன், "பார், என் பாப்பு கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டார். என்னை 9 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்!" நான் 6 ஆம் தேதி ஊரிலிருந்து மும்பைக்கு வந்தேன். 7 ஆம் தேதி காவல் நிலையத்திற்குச் சென்று கடிதத்தை வாங்கிக்கொண்டு, 9 ஆம் தேதி சரியாக 11 மணிக்கு D.G. ஆஃபீஸுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்த superintendent என்னிடம், "வர்மா சாஹேப் (விசாரணை செய்பவர்) இன்று அரையாண்டு review meeting-ல் busy-ஆக இருப்பதால், இன்று விசாரணை நடக்காது" என்று சொன்னார். நான் விடாப்பிடியாக அவரிடம் கூறினேன், "இன்று சனிக்கிழமை. என் சத்குருவின் உபாசனை நாள்.

என் சத்குரு கனவில் வந்து 9 ஆம் தேதி உன் வேலை நடக்கும் என்று சொல்லியிருக்கிறார், மேலும் இன்று 9 ஆம் தேதி. அதனால் நான் எதுவும் வீட்டுக்குப் போக மாட்டேன். சாஹேப்புக்கு எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை." என்று சொல்லிவிட்டு, நான் அந்த ஆஃபீஸிலேயே காத்துக்கொண்டிருந்தேன்.

சுமார் 4 மணி அளவில், வர்மா சாஹேப் மீட்டிங்கிலிருந்து தனது cabin-க்கு சென்று கொண்டிருந்தபோது, நான் அவருக்கு முன்னே சென்று நமஸ்காரம் செய்தேன். உள்ளே சென்று அவர் தனது உதவியாளரிடம் 'बाहर कौन है, क्यों आया है?' (வெளியே யார், எதற்காக வந்துள்ளார்)"என்று கேட்டதும்,

அதற்கு அந்த உதவியாளர் என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு, நான் காலை 11 மணியிலிருந்தே வெளியே காத்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

அப்போது சாஹேப் தனது உதவியாளரிடம், 'उस का फाईल जिसके पास है उसे फाईल लेकर बुलाओ' (அவருடைய ஃபைல் யாரிடம் உள்ளதோ, ஃபைலை எடுத்து வரசொல்லவும்) என்று சொன்னார். ஆஃபீஸ் superintendent-ம் சாஹேப்பும் 15 நிமிடங்கள் விவாதித்த பிறகு, சாஹேப் என்னை உள்ளே அழைத்தார்.

பிறகு நான் செய்த appeal மீதான விசாரணை நடந்தது, மேலும் பாப்புவின் கிருபையால் என் பறிபோன வேலை அதே 9 ஆம் தேதியன்று எனக்கு மீண்டும் கிடைத்தது. கனவில் பாப்பு அளித்த வாக்குறுதி பலித்தது. பெரிய அன்னை (மோட்டி ஆயீ) மற்றும் அவளது புத்திரன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று பாப்பு அடிக்கடி கூறுவார். விபத்து, வியாதி, பொருளாதாரப் பிரச்சனைகள் என எந்தத் தடைகள் வந்தாலும், அவையெல்லாம் நமது பிராரப்த கர்மாவை அனுபவித்து முடிப்பதற்காகவே வருகின்றன. ஆனால் பெரிய அன்னை மற்றும் அவளது புத்திரன் மீது நம்பிக்கை இருந்தால், நீங்கள் இந்தப் பிராரப்த துன்பங்களிலிருந்து ஈடேறி விடுவீர்கள்! என் விஷயத்தில் இதை நான் முழுமையாக அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன். கர்ம வினைகள் யாருக்கும் தப்பியதில்லை. ஆனால் பாப்புவின் பக்தியால் அது மென்மையாகி விடுகிறது, இதுவே என் அனுபவம்.

பாப்பு நம்முடனே எப்போதும் இருக்கிறார். அதனால்தான் பெரிய அன்னை மற்றும் பாப்பு மீது அன்பு, அன்பு, அன்பு மட்டுமே செலுத்த வேண்டும்.

அவர்கள் மீது முழுமையான சிரத்தையும் நம்பிக்கையும் வைத்து, நமக்குக் கிடைத்த இந்த மனிதப் பிறவியை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.

                   **********************

English



Comments