இன்றைய யுகத்தில் ஒவ்வொரு துறையிலும் போட்டி இருந்தே தீரும், இந்தப் போட்டியில் நிலைத்து நிற்க ஒவ்வொருவரும் முயற்சி செய்தே ஆக வேண்டும். ஆனால் நம் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க சத்குருவின் கிருபையும் அவ்வளவு அவசியம் என்பதையே இந்த அனுபவம் சொல்கிறது.
-----------------------------------------------------------------------------
ஹரி ஓம். நான் ரவீந்திரசிங் பென்கலே, சாங்லி உபாசனா மையம். வெங்கடேச சப்தகோடி ஜபம் உற்சவத்தின் போது பாப்புவை பார்த்த மாத்திரத்திலேயே, இவரே என் எல்லாம் என்ற நம்பிக்கை பிறந்தது. நான் முற்றிலும் பாப்பு வயமாகி விட்டேன். 2000 முதல் 2016 வரை பல சுக துக்கங்களைப் பார்த்தேன், பல குழப்பங்களில் இருந்து வெளியே வந்தேன். ஆனால் என் ஒவ்வொரு சுகத்திலும் துக்கத்திலும் என் பாப்பு என்னுடனேயே இருந்தார். அவரால்தான் இன்று என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியது, நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நான் ஒரு மளிகைக் கடை வியாபாரி. இந்த நவீன யுகத்தில் மளிகைக் கடைகளுக்குப் போட்டியாகப் பல மால்கள் உள்ளன, அங்கு தேவையான அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன. இந்தப் போட்டியில் நாம் நிலைத்து நிற்க வேண்டுமானால் பாபாபு சொன்னது போலக் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். நானும் சமூக ஊடகங்களின் உதவியுடன் மாற முயற்சி செய்தேன். ஆனால் சில விஷயங்களால் எனக்குப் பற்றாக்குறை தெரிந்தது. இந்த மால்களின் போட்டியில் நிலைத்து நிற்பது எனக்குக் கடினமாகத் தோன்றியது.
ஆனால் எங்குப் பாப்பு இருக்கிறாரோ அங்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கவே முடியாது. எந்தக் குறையும் தெரியாது. நம் சத்குரு பாப்பு காலத்திற்கும் முற்பட்டவர். நம் 'டாட்' காலத்திற்கும் முற்பட்டவர் என்றால், அவரது குழந்தைகளான நாம் மட்டும் பின் தங்குவது எப்படி? பாப்பு எதைச் செய்தாலும் அது அவரது குழந்தைகளின் நலனுக்காகவே இருக்கும். என் விஷயத்திலும் அப்படியே நடந்தது. பாப்புவே மெல்ல மெல்ல என் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் கதவுகளைத் திறந்தார். அது எப்படி நடந்தது என்பதை நான் இங்கே விவரிக்கிறேன்.
சாங்லியில் எங்களுக்கு நண்பர்கள் குழு ஒன்று உண்டு. ஒருமுறை நாங்கள் ஒன்று சேர்ந்தபோது ஒரு நண்பர் சொன்னார், கர்வே எம்.ஐ.டி.சி-யில் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு பிளாட் வாங்குவோம். ஒவ்வொருவரும் 40,000/- ரூபாய் தர வேண்டும். அந்தச் சமயத்தில் 40,000/- ரூபாய் கூட எனக்குப் பெரிய தொகையாக இருந்தது.
பண வசதி ஆனது, நாங்கள் அனைவரும் சேர்ந்து பணத்தை அவரிடம் கொடுத்தோம். அடுத்து மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2012-ல் பாப்பு கிருபையால் பிளாட் வாங்கும் எங்கள் கனவு நனவானது. பிளாட் வாங்கியாகிவிட்டது, அடுத்து என்ன? 2012
முதல் 2015 வரை நாங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் பாப்பு எங்களுக்காக மெல்ல மெல்ல அனைத்தையும் சரி செய்து கொண்டிருந்தார்.
விஷயம் என்னவென்றால், என் நான்கு நண்பர்களில் ஒரு நண்பருக்கு வியாபாரத்தில் கொஞ்சம் அனுபவம் இருந்தது. அவருக்கு ஸ்டெப்லான் இண்டஸ்ட்ரீஸ் என்ற இரண்டு தொழிற்சாலைகள் இருந்தன. அவரது அனுபவத்தின் அடிப்படையில் அவர் எங்களிடம் ஒரு திட்டத்தை முன்வைத்தார் — நாம் நால்வரும் சேர்ந்து ஒரு தொழிற்சாலை ஆரம்பிப்போம் என்று. இந்தத் திட்டத்திற்கு சுமார் ஒன்றரை முதல் இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டது. ஒவ்வொருவரும் ஐந்து லட்சம் முதலீடு செய்ய முடிவெடுத்தோம். இது கொஞ்சம் சவாலான வேலைதான். ஆனால் பாப்புவை நினைத்துக் கொண்டு நான் இதில் இறங்கினேன். நம்பிக்கை இருந்தால் காரியம் கைகூடும். அதேபோலத் துபாயில் வசிக்கும் எங்கள் நண்பர் ஒருவர், வட்டி இல்லாமல் 40 லட்சம் என்ற பெரிய தொகையை எங்களுக்குத் தந்தார். அவர் எதிர்பாராத விதமாகப் பெரிய தொகையை முதலீடு செய்ததால் அவரை ஸ்லீப்பிங் பார்ட்னர் ஆகச் சேர்த்துக் கொண்டோம்.
பாப்புவால்தான் இந்த வியாபாரம் உருவானது, இன்று எம்.ஐ.டி.சி-யில் ஒன்றரை முதல் இரண்டு கோடி மதிப்பிலான தொழிற்சாலை ஆரம்பமாகியுள்ளது... அதுவும் முழு லாபத்தில்! பாப்புவே இந்தச் செயலினை வெற்றி பெறச் செய்தார். காலத்திற்கு ஏற்ப என்னுள் மாற்றம் ஏற்பட்டு, ஒரு மளிகைக் கடையில் இருந்து இன்று நான் ஒரு பெரிய தொழிற்சாலையின் உரிமையாளர் ஆனேன். நாம் எதையும் செய்வதில்லை, நம்மை வழிநடத்தும் அந்த அனிருத்தன் ஒருவனே நம் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான். என் மகன் பட்டம் பெறுவதற்கு முன்பே அவனுக்கு எங்கள் தொழிற்சாலையிலேயே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது என் விரலில் நடந்த ஒரு சிறிய அனுபவத்தைச் சொல்கிறேன்.
தொழிற்சாலையில் உள்ள பிரஸ் மெஷினில் வேலை செய்யும் போது திடீரென்று என் விரல் அதில் சிக்கிக் கொண்டது. விரலில் எலும்புப் பகுதி அதிகம் என்பதால் எலும்பிற்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் பாப்புவின் கிருபையால் எலும்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. விரலில் 19 தையல்கள் போடப்பட்டன. மருத்துவர் சொன்னார், கடவுள் புண்ணியத்தில் உங்கள் விரல் எலும்பு தப்பித்தது. யோசித்துப் பாருங்கள், 1.25 டன் எடையுள்ள மெஷினில் விரல் சிக்கினால் அதன் நிலை என்னவாகும்? அங்கு வேலை செய்த மற்றவர்களும் என் நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் என் சத்குருவே என் துணையாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவரால்தான் வெறும் 19 தையல்களுடன் உயிர் தப்பினேன். அவர் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதில் எனக்குப் முழு நம்பிக்கை உண்டு. அதற்குப் பிறகு அந்த நிலையிலும் நான் கோலாப்பூர் மருத்துவ முகாமிற்குச் சேவை செய்யச் சென்றேன்.
பெரிய வியாபார அறிவு இல்லாமலும், அதிக முதலீடு இல்லாமலும், அனைத்தும் சீராகி இன்று மளிகைக் கடையில் இருந்து ஒரு தொழிற்சாலை உருவாகியுள்ளது. மகனின்
எதிர்காலக் கவலையும் தீர்ந்தது. விரல் விபத்தில் இருந்தும் தப்பினேன், பாப்புவின் சேவையில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைத்தது. பாப்பு பக்தியும் சேவையுமான என் பயணம் இனிதாகத் தொடர்கிறது. பாப்புவே என் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து, அவ்வப்போது எனக்கு உதவி செய்து என் வாழ்க்கையில் ஒரு அழகான மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
ஹரி ஓம் ஸ்ரீராம் அம்பக்ஞ நாத்ஸம்வித்

Comments
Post a Comment