மல்ஹார்ராவ் பேசிக்கொண்டே ஒரு கணம் நிறுத்தினார். அவரது தொண்டை அடைத்துக் கொண்டது மற்றும் கண்களின் ஓரங்கள் ஈரம் கசிந்திருந்தன. அங்கிருந்த அனைவரின் நிலையும் ஏறக்குறைய அப்படித்தான் ஆகியிருந்தது. அதே அறையில் மல்ஹார்ராவின் இடது கை பக்கம் உள்ள மூலையில் அமர்ந்திருந்த மூன்று பெண்களின் நிலைமை மட்டும் மிகவும் வேறுபட்டதாக இருந்தது.
முதல் பெண் அதாவது இருபத்தியொரு வயது முடிந்து இருபத்திரண்டாவது நடக்கும் ஜானகிபாய் - முதல் தியாகி மங்கள் பாண்டே கூட இருபத்திரண்டு வயதுக்காரன் தான். நானும் இருபத்திரண்டு வயதுக்காரியே. எவ்வளவு அழகாக இருக்கும் இல்லை, குண்டு நெஞ்சில் பாயும்போது! இறைவா! எனக்கும் இப்படியே நடக்கட்டும்.
இரண்டாவது பெண், பட்கே மாஸ்டரின் மனைவி கமலாபாய். இந்த முதிர்ந்த மற்றும் அனுபவமிக்க பெண் அவளுக்கு என்னென்ன செய்ய முடியும் என்ற யோசனையைத் தான் செய்து கொண்டிருந்தாள், ஆனால் தலையை அமைதியாக வைத்துக்கொண்டே.
மூன்றாவது பெண், கோவிந்ததாஜியின் மகள் சௌ. மஞ்சுளாபாய். இவளுடைய புகுந்த வீடும் கிராமத்தில் தான் இருந்தது. இவளுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை இருந்தது மற்றும் அது அவள் மடியிலேயே தூங்கிக் கொண்டிருந்தது. இவளுடைய வயதும் இருபத்திரண்டு தான். இவள் ஆரம்பத்திலிருந்தே கோவிந்ததாஜியின் கைக்குக் கீழே அவரின் எல்லா காரியங்களிலும் கடந்த மூன்று வருடங்களாக உதவி செய்து கொண்டிருந்தாள். அவள் ஜானகிபாயின் உயிர் தோழி. அவளுடைய கணவர் வாசுதேவ் கோவிந்த் ராமசந்திர தார்பூர்கரின் அதே அளவு நெருங்கிய நண்பராக இருந்தார் மற்றும் மும்பை முதல் தார்பூர் வரையிலான மனித Bridge (பாலம்) ஆக இருந்தார். மஞ்சுளாபாயின் மகனின் பெயர் மங்கல் பிரசாத் என்றே இருந்தது - மிகவும் வேண்டுமென்றே வைத்தது. மங்கள் பாண்டேவே தன் வயிற்றில் பிறந்து வந்திருக்கிறார் என்று அவளுக்குத் தோன்றியது.
ஒரு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சூழல் கொஞ்சம் லேசானது. சம்பத்ராவ் கொஞ்சம் தயங்கியபடியே கேள்வி கேட்டார், மல்ஹார்ராவ்! மங்கள் திவாகர் பாண்டே தியாகம் செய்தார், இது சிறந்த விஷயம் தான். ஆனால் நீங்கள் அதை முதல் தியாகம் என்று ஏன் சொல்கிறீர்கள்? அந்த நந்தகுமாரும் தூக்கில் தானே ஏற்றப்பட்டார்?
மல்ஹார்ராவ் சொன்னார், நந்தகுமாரை பிரிட்டிஷ் Officer வஞ்சகத்தைப் பயன்படுத்தி தூக்கில் ஏற்றினார்கள், இது உறுதி; ஆனால் அவர் ஒன்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கிடையாது. அவர் பிரிட்டிஷூக்காக இந்திய மக்களிடமிருந்து Tax வசூல் செய்யும் வேலை செய்து வந்தார் மற்றும் அதில் ஒரு பங்கை அவர் ஊழல்வாதி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அவர்களின் உல்லாசத்திற்காக கொடுத்து வந்தார். ஒருமுறை சந்தர்ப்பவசத்தால் அதாவது பணத் தட்டுப்பாடு இருந்த காரணத்தால் நந்தகுமார், வசூலான Tax-ல் ஒரு பங்கை தனக்கே வைத்துக்கொள்ள ஆரம்பித்தார் மற்றும் அதற்காக அவரைத் தூக்கில் ஏற்றினார்கள்.
இது சுதந்திரப் போரின் தியாகம் இல்லை, ஆனால் பிரிட்டிஷாரின் வன்முறை மற்றும் கொடூர அடக்குமுறையின் உதாரணம். வெறும் கொஞ்சம் பணத்தைத் திருடியதற்காக தூக்கில் தொங்கவிடுவது மற்றும் அதுவும் 70 வயது மனிதரை, இது நிச்சயமாக அநியாயமான விஷயம் தான், ஆனால் தியாகம் இல்லை.
சம்பத்ராவே மீண்டும் ஒரு கேள்வி கேட்டார், மங்கள் பாண்டேவின் தியாகம் நடந்தது, அந்த இடத்தில் சாதாரண ஒரு கல்லாவது வைக்கப்பட்டிருக்கிறதா?
மல்ஹார்ராவ் இறைவனுக்குக் கைகூப்பியபடியே சொன்னார், மங்கள் திவாகர் பாண்டேவின் தியாகத்திற்குப் பிறகு வெறும் ஒரு மாதத்தில், அவனது ஒரு நெருங்கிய நண்பன் தன்சிங் குர்ஜர் அந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட வடிவமுள்ள கல்லைப் புதைத்து, அதன் பக்கத்தில் ஒரு துளசி செடியை நட்டான். (பின்னாளில் சுதந்திரம் கிடைத்த பிறகு இதே இடத்தில் மங்கள் பாண்டேவின் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.)
தன்சிங் குர்ஜர் மீரட்டில் உள்ள பிரிட்டிஷ் முகாமில் கொத்தவால் பதவியில் இருந்தான். அவனது கைக்குக் கீழே 50 வீரர்கள் இருந்தார்கள். மங்கள் பாண்டே தன்சிங் உடன் இறப்பதற்கு முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் விவாதம் செய்திருந்தான், ஆனால் தன்சிங் குர்ஜருக்கு லெப்டினென்ட் பாக் உடனே திரும்பி வர உத்தரவு கொடுத்திருந்தார், அதனால் அவனுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தன்சிங் குர்ஜரிடம் அந்த நேரத்தில் அவனுடன் ஒரே ஒரு வீரர் மட்டுமே இருந்தார் & அதனால் அவன் அமைதியாக இருந்தான், ஆனால் மீரட் முகாமிற்குப் போய்ச் சேர்ந்த சில மணி நேரத்திலேயே அவனுக்கு பராக்பூரில் மங்கள் பாண்டே என்ன செய்தார் என்ற செய்தி தெரிந்தது மற்றும் உள்ளுக்குள் கொதித்தெழுந்த கொத்தவால் தன்சிங் குர்ஜர் ஜோராக வேலையில் இறங்கினான். அவன் ஒரு ஒரு ஆளாக சேர்க்கத் தொடங்கினான் மற்றும் தன்னுடைய ஐம்பது வீரர்கள் மற்றும் பிற குழுக்களின் ஐம்பது வீரர்கள் என்று நூறு பேரின் சிறிய படையைத் தயார் செய்தான். 9 ஏப்ரல் 1857 அன்று மீரட் முகாமில் மங்கள் பாண்டேவின் தூக்கு தண்டனை செய்தி வந்து சேர்ந்தது. முகாமில் இருந்த கிட்டத்தட்ட ஒவ்வொரு வீரனும் கோபமடைந்தான், ஆனால் என்ன பயன்? அந்த இரண்டாயிரம் வீரர்களில் வெறும் நாற்பது பேர் தன்சிங் குழுவில் சேரும் தைரியத்தைக் காட்டினார்கள். மீதிப் பேர் அமைதியாகவே இருந்தார்கள்.
தன்சிங் குர்ஜரின் நூற்று நாற்பது வீரர்களுக்கு தங்களிடம் உள்ள தோட்டாக்களைக் கொடுக்கும் தைரியம் கூட மீதமுள்ள வீரர்களில் வெறும் முப்பது-நாற்பது பேரிடம் மட்டுமே இருந்தது, ஆனால் தன்சிங் குர்ஜரின் தேஜஸ் நிறைந்த பேச்சு மெல்ல மெல்ல மற்றவர்கள் மேல் தாக்கம் ஏற்படுத்தத் தொடங்கியது மற்றும் பிறகு ஓரளவுக்குத் தோட்டாக்கள் சேரத் தொடங்கின மற்றும் அவனது வீரர்களின் எண்ணிக்கையும் 250 வரை சென்று சேர்ந்தது. 21 ஏப்ரல் அன்று ஈஸ்வரி பிரசாத்-க்கும் தூக்கு கொடுக்கப்பட்டது, இந்தச் செய்தி வந்ததும் இன்னும் அதிக வீரர்கள் முன் வரத் தொடங்கினார்கள் மற்றும் சுதந்திரப் போரின் நெருப்பு அருகிலுள்ள மற்ற ஏழு முகாம்களிலும் பரவியது.
தங்களுக்குள் செய்திகள் மற்றும் தகவல்களின் பரிமாற்றம் நடக்கத் தொடங்கியது. ஒவ்வொரு முகாமிற்கும் மற்றும் இடத்திற்கும் அவரவர் இலக்கு நிர்ணயித்துக் கொடுக்கப்பட்டது மற்றும் 10 மே 1857 அன்று கொத்தவால் தன்சிங் குர்ஜரின் தலைமையில் மீரட் முகாமில் பிரிட்டிஷ் Officers இருந்த இடத்தின் மீது பலமான தாக்குதல் நடத்தப்பட்டது.
தன்சிங்கின் எழுச்சிமிக்க பேச்சால் மற்றும் பிரம்மாண்டமான ஈடுபாட்டால் கிட்டத்தட்ட 600 வீரர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து அவசரமாக மீரட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள் மற்றும் அவர்களும் ஆயுதங்களுடன்.
முழு மேற்கு உத்தரப் பிரதேசம், டெல்லி, ஆக்ரா, டேராடூன், பிஜ்னோர், பஞ்சாப், ராஜஸ்தான், ஜான்சி மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து புரட்சிகரமான சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட சாதாரண குடிமக்கள் அரிவாள், கதிர் அறுக்கும் கத்தி, ரம்பம், சுத்தியல், கோடாரி, கம்பு போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மீரட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள் மற்றும் சுதந்திரப் போரில் கலந்துகொண்டார்கள்.
மீரட்டின் அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள சொல்லப்போனால் ஆயிரக்கணக்கான குர்ஜர் இனத்து கிராமவாசிகள் கிடைத்த ஆயுதத்துடன் அங்கே கூடியிருந்தார்கள்.
10 மே இரவு 9 மணிக்கு தன்சிங் மற்றும் அவனது ஒரு படைப்பிரிவு மீரட் முகாமில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளின் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் அவர்கள் அனைவரையும் சிறைபிடித்தது. இரவு இரண்டு மணிக்கு மீரட்டில் உள்ள முக்கிய சிறையை உடைத்து 876 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் மற்றும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதன் பிறகு சிறைக்குத் தீ வைக்கப்பட்டது.
காலைக்குள் இருபத்திரண்டு பிரிட்டிஷ் Officers கொல்லப்பட்டிருந்தார்கள், 80 பிரிட்டிஷ் Soldiers கொல்லப்பட்டிருந்தார்கள் மற்றும் கிட்டத்தட்ட அவ்வளவு பேர் தன்சிங்கின் சிறையில் இருந்தார்கள்.
ஷஹீத் மங்கள் பாண்டே அமர் ரஹே என்ற முழக்கமிட்டுக்கொண்டு, சாதாரண ஆயுதம் ஏந்திய, நாடு முழுவதிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான இந்தியக் குடிமக்கள் மீரட்டில் உள்ள, பிரிட்டிஷாருடன் தொடர்புடைய ஒவ்வொரு கட்டிடம், காகிதங்கள், காவல் நிலையம் மற்றும் இது போன்ற பல விஷயங்களை முழுவதுமாக எரித்து சாம்பலாக்கியிருந்தார்கள்.
அதன் பிறகு அவர்களில் பாதி வீரர்கள் மற்றும் பாதி குடிமக்கள் 12 மே அன்று டெல்லி வரை போய்ச் சேர்ந்தார்கள் மற்றும் கிளர்ச்சி மீரட்டின் அக்கம் பக்கத்து கிராமங்களிலும் கூட பரவியது.
பிரிட்டிஷ் கம்பெனி அரசாங்கம் பலமான எதிர்த்தாக்குதல் நடத்தத் தொடங்கியது. பிரிட்டிஷாரிடம் ராணுவ பலமும் பெரிதாக இருந்தது மற்றும் ஆயுதங்களோ ஏராளமாகவும் இருந்தன மற்றும் அதிக தாக்கம் ஏற்படுத்துவதாகவும் இருந்தன.
இந்தக் கிளர்ச்சித் தீ டெல்லியிலும் பரவி வருவதைப் பார்த்து உத்தரப் பிரதேசம், பஞ்சாப், வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் பாட்னாவிலும் இதே போன்ற விஷயங்கள் நடக்கின்றன என்பதைப் பார்த்து பிரிட்டிஷ் கம்பெனி அரசாங்கம் வெறி கொண்டது. அவர்களுக்குத் தங்கள் ஆட்சி போகும் ஆபத்து தெரியத் தொடங்கியது.
சில இடங்களில் தான் பிரிட்டிஷ் ஜெயித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் பெரும்பாலான இடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களே ஜெயித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரின் வாயிலும் மூன்றே முழக்கங்கள் இருந்தன. 1) ஃபிரங்கி கோ மார் டாலோ. 2) ஷஹீத் மங்கள் பாண்டே அமர் ரஹே. மற்றும் 3) கிராந்திசூர்ய தன்சிங் குர்ஜர் கீ ஜெய் ஹோ. மூன்று மாதங்கள் இந்த மோதல்கள் நடந்து கொண்டே இருந்தன மற்றும் பிரிட்டிஷார் நன்றாகவே அடி வாங்க வேண்டியிருந்தது.
கடைசியில் பிரிட்டிஷார் வஞ்சகத்தைக் கையாண்டு, தன்சிங் அந்த நேரத்தில் இருந்த மீரட்டிற்கு அருகிலுள்ள கிராமத்தின் மீது (பான்ஸ்லி அல்லது ககோல்) பத்து பெரிய பீரங்கிகளால் மிகவும் கொடூரமான தாக்குதல் நடத்தினார்கள் மற்றும் 500 குதிரைப்படை சிப்பாய்கள் கிராமத்திற்குள் புகுந்து வெட்டித்தள்ளத் தொடங்கினார்கள். சொல்லப்போனால் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் வெட்டப்பட்டார்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் தூக்கில் ஏற்றப்பட்டார்கள் மற்றும் அதுவும் ஒவ்வொரு முச்சந்திகளிலும்.
தன்சிங் குர்ஜர் கொத்தவால் இங்கேயே வீரமரணம் அடைந்தான் மற்றும் அதுவும் கிட்டத்தட்ட நூறு பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்றுவிட்டே..
இந்தக் கிராமத்தில் தான் தன்சிங் குர்ஜருக்கு ஜான்சி ராணி லட்சுமிபாயின் பயங்கர ஆதரவு இருந்ததற்கான ஆதாரங்கள் பிரிட்டிஷார் கையில் சிக்கின மற்றும் ஒரே இரவில் பிரிட்டிஷாருக்கு சாதுவான சுபாவம் கொண்ட, ஆதரவற்ற, தனிமையான விதவை ராணி லட்சுமிபாய் பிரம்மாண்டமான ஆபத்தானவளாகத் தோன்றத் தொடங்கினாள்.
(கதை தொடரும்)
.png)



Comments
Post a Comment