ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தின் (மார்கழி) சுக்ல பக்க்ஷத்தின் இரண்டாவது சனிக்கிழமையில் இருந்து, சிரத்தாவன் அவரவர் வீடுகளில் சத்குரு ஸ்ரீ அனிருத்தரின் பாதுகைகளைப் பூஜித்து 'சச்சிதானந்தோத்ஸவம்' கொண்டாடுகிறார்கள். இதை இரண்டு நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் வரை விருப்பப்படி கொண்டாடுவார்கள்.
'ஸ்ரீபிரேமஸ்வரூபா தவ சரணம் |புருஷார்த்தரூபா தவ சரணம் |
சரணகத த்ரிதாபஹரா | சச்சிதானந்தா தவ சரணம் ||'
'ஆனிக்'- ல் (Aanik) உள்ள அசிந்த்யதானி ஸ்தோத்திரத்தின் இந்த ஒன்பதாவது பத்தியை நாங்கள் தவறாமல் சொல்கிறோம். மனிதனின் வாழ்க்கையிலிருந்து ஆனந்தத்தைப் பறித்து, அவனை வாட்டும் மூன்று விதமான துன்பங்கள் (தாபங்கள்) உள்ளன - ஆத்யாத்மிகம், ஆதிதைவிக மற்றும் ஆதிபௌதிக. சச்சிதானந்த ஸ்வரூபமான சத்குரு தத்துவமே இந்த மூன்று விதமான துன்பங்களில் இருந்து நம்மை விடுவித்து, நம் வாழ்வை ஆனந்தத்தால் நிரப்புகிறது.
அந்த சச்சிதானந்தன் தன் காரியத்தைச் செய்யத் திறமையானவனாகவும், தயாராகவும் இருக்கிறான். ஆனால், அவருடைய காரியம் நம் வாழ்வில் நடக்க வேண்டுமென்றால், நாம்தான் முதலில் அவரை நேசிக்க வேண்டும், அவருடைய கடமைகளை நினைவில் கொண்டு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும், மேலும் சத்குருவின் திருவடிகளில் முழுமையான சரணாகதி பாவனையை ஏற்க வேண்டும்.
நம் வாழ்வில் பிரேம பாவம் (அன்பு) அம்பக்ஞதா பாவம் (நன்றியுணர்வு) மற்றும் சரண்ய பாவம் (சரணாகதி) ஆகிய இந்த மூன்று பாவனைகள் எந்த அளவுக்கு அதிகமாகின்றனவோ, அந்த அளவுக்கு நமது உலகியல் (பிரபஞ்சம்) மற்றும் ஆன்மீகம் (பரிமாற்றம்) ஆனந்தமயமாகும். இதற்காகவே மார்கழி மாதத்தில் 'சிரத்தாவன் பக்தர்கள் சச்சிதானந்தோத்ஸவம்' கொண்டாடு- கிறார்கள்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரே பகவத் கீதையில் 'மாஸானாம் மார்கசீா்ஷோऽஹம்' (மாதங்களில் நான் மார்கழி) என்று கூறியிருக்கிறார். மார்கழி மாதம், தேவயானை மார்க்கத்தின் இறுதி இலக்கை அடைய விரும்பும் சிரத்தாவன்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை காலமாக கருதப்படுகிறது.
இந்த வழியில் சச்சிதானந்தனை நோக்கிய 'பிரேம-பயணம்' இலகுவாக அமைய வேண்டும் என்பதற்காக சிரத்தாவன்கள்
மார்கழி மாதத்தில் சச்சிதானந்தோத்ஸவம் கொண்டாடுகிறார்கள்.
இந்த பயணத்தில் நம் உலகியல் மற்றும் ஆன்மீகம் இரண்டும் ஒரே நேரத்தில் இன்பமாக இருக்க, மனம், பிராணன் மற்றும் பிரக்ஞை ஆகிய மூன்று நிலைகளிலும் ''உசிதத்வ" (தகுந்த நிலை) நிலைத்திருப்பது முக்கியம். சச்சிதானந்தோத்ஸவத்தில் சிரத்தாவன்கள் அனிருத்த-அதர்வ ஸ்தோத்திரம் மற்றும் அனிருத்த அஷ்டோத்தர சத நாமாவளி ஆகியவற்றுடன், தகுந்த நிலையை அடைவதற்காக சத்குரு ஸ்ரீஅனிருத்தரின் பாதுகைகளைப் பூஜிப்பார்கள்.
சச்சிதானந்தோத்ஸவம் கொண்டாடும் சிரத்தாவன்கள் எண்ணம் என்னவென்றால், இந்தப் பூஜையில் உள்ள அதர்வ ஸ்தோத்திரம் நம்மிடையே உள்ள சஞ்சலத்தை (மனக்குழப்பத்தை) நாசம் செய்யட்டும், மேலும் அஷ்டோத்தர சத நாமாவளி நம் உடலில் உள்ள 108 சக்தி மையங்களுக்கு சாமர்த்தியத்தை அளிக்கட்டும்.
சச்சிதானந்தோத்ஸவம் கொண்டாடும் சிரத்தாவன்கள் சத்குருவிடம் இந்த ஆசீர்வாதங்களை வேண்டுகிறார்கள்:
1. நம்முடைய மூன்று நிலைகளிலும் உள்ள அசுத்தி, அபவித்ரம், அனுசிதம் (தகாதது) நீங்க வேண்டும்,
2. நம்மிடையே அன்பு, நன்றியுணர்வு மற்றும் சரணாகதி பாவம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்,
3. நம் மனம், பிராணன், பிரக்ஞை ஆகிய மூன்று நிலைகளைத் துன்புறுத்தும்
சஞ்சலம், தடை மற்றும் திசையற்றத்தன்மை என்னும் மூன்று அசுரர்களின் நாசம் ஏற்பட்டு, மூன்று நிலைகளிலும் தகுந்த நிலை நீடிக்க வேண்டும்.
'வாமபாதேன அச்லம் தக்ஷிணேன கதிகாரகம்' அதாவது, இடது பாதத்தால் தகாததை தடுக்கும் மற்றும் வலது பாதத்தால் தகுந்ததற்கு கதியைத் தரும் என்று யாருடைய பாதங்களின் அமைப்பை வர்ணிக்கப்பட்டதோ, அத்தகைய சத்குரு ஸ்ரீஅனிருத்தரின் பாதுகைகளைப் பூஜித்து, சத்குருவின் அருளால் உலகியல் மற்றும் ஆன்மீகம் ஒரே நேரத்தில் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற
நம்பிக்கையுடன் சிரத்தாவன்கள் சச்சிதானந்தோத்ஸவம் கொண்டாடுகிறார்கள்.
---------------------------------------------
मराठी >> हिंदी >> ગુજરાતી>> ಕನ್ನಡ>> తెలుగు>> বাংলা>> മലയാളം>>
Comments
Post a Comment