ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம்

எல்லா பக்தர்களின் நன்மைக்காகவும் சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பூ அவர்கள் 2013-ல் தனது பிரவச்னத்தில் ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதத்தின் கருத்தை எல்லோர் முன்னிலும் வைத்தார்.

இதில் ஒவ்வொரு பக்தரும் சண்டிகா குலத்தைச் சேர்ந்த எந்தவொரு (பகவானுடன்) உறுப்பினருடனும் உரையாட முடியும். பக்தரின் மனதில் உள்ள உணர்வுகள், எண்ணங்கள் அல்லது அவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ, அதை அந்த உறுப்பினரிடம் (பகவானிடம்) தெரிவிக்க வேண்டும்.

ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம் என்றால் என்ன?

ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள எந்த ஒரு விஷயத்தையும் இந்த சண்டிகா குலத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினருடனும் பேசலாம். நாம் பேசுவதை தாய் பகவதி நிச்சயம் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்ற முழு நம்பிக்கை நம் மனதில் இருக்க வேண்டும்.

மனதில் பேசப்படுவது கேட்கப்படும். இது ஒரு உரையாடல். நம் மனதில் உள்ள விஷயம் அவர்களிடம் சென்று சேரும்போது, அவர்களுடைய விஷயம் (செய்தி) பிராணமய உரையாடலால், பிராணங்களின் அதிர்வுகளால் (Vibrations) நம் பிராணத்துடன் இணைக்கப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் மனம் மாற வேண்டும் என்று தோன்றும், ஆனால் இது மனிதனுக்குக் கடினம். 'ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம்' (Swastikshema Samvadam) மூலம் நாம் கர்ம சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்தி மனதில் சரியான மாற்றங்களை கொண்டு வர முடியும்.

'ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம்' (Swastikshema Samvadam) என்பது திவ்ய சண்டிகா குலத்துடன் (Divine Chandikakul) நடத்தப்படும் ஒரு உரையாடல் என்று நம் சத்குரு அனிருத்த பாப்பூ பித்ருவசனத்தில்

கூறியுள்ளார், அதை நீங்கள் இந்த காணொளியில் பார்க்கலாம்.

ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம் எப்படி செய்வது?

முதலில் பாப்பூவின் குரலில், பின்வரும் ஜபம் செய்யப்படுகிறது. அப்போது ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம் தொடங்குகிறது.

"சர்வமங்களமாங்கல்யே சிவே சர்வர்த்தசாதிகே| சரண்யே திரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே||"

அதன்பின் குறைந்தபட்சம் 5 நிமிட நேரம் இருக்கும், அந்த நேரத்தில் ஒவ்வொரு பக்தரும் கண்களை மூடி, நாம் நேரடியாக சண்டிகா குலத்தின் முன் அமர்ந்திருக்கிறோம் என்று உணர்ந்து, சண்டிகா குலத்தைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினருடனும் அல்லது அனைவருடனும் சேர்ந்து, அவர் விரும்பியபடி உரையாட வேண்டும். இந்த காலத்திற்குப் பிறகு பாப்பூவின் குரலில் மாத்ருவாத்ஸல்ய உபநிடதத்தின் இந்த ஸ்லோகம் ஒலிக்கப்படும்.

"நமஹ சர்வஷுபம்கரே| நமஹ பிரம்மதிரிபுரசுந்தரி| சரண்யே சண்டிகே துர்கே| பிரசீத பரமேஸ்வரி||"


ஸ்வஸ்திக்ஷேம ஸம்வாதம் எங்கே செய்யலாம்?

சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பூவின் உறுதி மற்றும் உத்தரவாதம் என்னவென்றால், இந்த வகையில் ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம் மூலம் சண்டிகா குலத்துடனோ அல்லது சண்டிகா குலத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினருடனோ செய்யப்பட்ட உரையாடல் எந்த ஒரு பிற ஊடகம் / ஏஜெண்ட் இல்லாமல் எளிதாக நிச்சயம் அவர்களை சென்றடையும். ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட உபாசனா மையத்திலும் இந்த வகையில் ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அந்த ஸம்வாதத்தின்போது அந்த உபாசனா மையம் ஹரிகுருகிராம் தான் என்பது பாப்பூவின் சங்கல்பம். பாப்பூவின் சங்கல்பத்தின்படி ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம் ஸ்ரீ ஹரிகுருகிராம் மற்றும் உபாசனா மையத்தில் செய்யலாம். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்லைன் ஆங்கில உபாசனை யிலும் ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதத்தின் பலனைப் பெறலாம். இந்த உபாசனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கும் மற்றும் இரவு 8.30 மணிக்கும் aniruddha.tv யில் ஒளிபரப்பாகிறது.

பக்தர்களுக்கு 'ஸ்வஸ்திக்க்ஷேம ஸம்வாதம்' மூலம் மிகவும் அழகான மற்றும் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய அனுபவங்கள் கிடைத்துள்ளன.


---------------------------------------------------

Comments