சத்குரு ஸ்ரீ அநிருத்தர், தனது சுந்தரகாண்டம் பற்றிய 24-06-2012 தேதியிட்ட தலையங்கத்தில், அதாவது துளசிபத்ர 854 இல், ‘பிரம்மரிஷி ஷ்யாவாஸ்வ ஆத்ரே ‘ரிஷி உத்தாலகருக்கு’ அளித்த வாக்குறுதியின்படி, ரிக்வேதத்தின் முதல் மண்டலத்தில் உள்ள 18வது சூக்தமான, ‘ஆத்யபிரஹ்மணஸ்பதி சூக்தம்’ என்று, பிரசித்தமானதை பற்றி சுருக்கமாகவும், எளிதில் புரியும் வகையிலும் விளக்கம் அளித்துள்ளார்.
துளசிபத்ர-854
சுனத பினீத பச்சன அதி கஹ கிருபால முசுகாயி ।
ஜேஹி பீதி உத்தரை கபீ கடகு தாத சோ கஹஹு உபாயி ॥334॥
(பொருள்: கடலின் மிகவும் பணிவான வார்த்தைகளைக் கேட்டு, கிருபையுள்ள ஸ்ரீராமர் புன்னகைத்து, "தந்தையே! வானரப் படை கடலைக் கடந்து செல்லும் வழியைக் கூறுங்கள்" என்றார்.)
9 கிராத காலம்
உத்தாலகருக்கு அளித்த வாக்குறுதியின்படி, பிரம்மரிஷி ஷ்யாவாஸ்வ ஆத்ரேய ரிக்வேதத்தின் முதல் மண்டலத்தில் உள்ள 18வது சூக்தமான ‘ஆத்யபிரஹ்மணஸ்பதி ஸ்தோத்திரத்தை’ ஓதவும், விளக்கவும் தொடங்கினார்.
சூக்தம் 18
(1) சோமானம் ஸ்வரணம் க்ருணுஹி பிரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய : ஔஷிஜ:॥
ஞானத்தின் அதிபதியான பிரஹ்மணஸ்பதியே! தாங்கள் ஔஷிஜ கக்ஷீவானை ஒளிமயமானவராக ஆக்கி, அவரை மேலும் மேலும்
உயர்த்தினீர்கள், அதேபோல், உமக்காக ஸ்தோத்திரம்
பாடும் என்னைப்போன்ற அற்ப பக்தனை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுங்கள்.
(2) ய: ரேவான் ய: அமீவஹா வசுவித் புஷ்டிவர்தன: ச: ந: சிஷுக்து ய: துர:॥
பிரஹ்மணஸ்பதியே! நீங்கள் ‘ரேவான்’, அதாவது எந்த ஐஸ்வரியத்தையும் அளிக்கக்கூடியவர். நீங்களே ‘வசுவித்’, அதாவது மிகுந்த தாராள மனப்பான்மை கொண்டவர். மேலும் ‘புஷ்டிவர்தன்’, அதாவது பலத்தை பெருக்குபவர், மற்றும் ‘துர: , அதாவது எந்தக் காரியத்தையும் விரைவாகச் செய்பவர். அதனால்தான், எங்கள் மீது விரைவாக அருள் புரியுங்கள்.
(3) மா ந: ஷஂச: அரருஷ: தூர்தி: ப்ரணங் மர்த்யஸ்ய ரக்ஷ ந: பிரஹ்மணஸ்பதே॥
பிரஹ்மணஸ்பதியே! தீய மற்றும் சூழ்ச்சிக்கார எதிரிகளின் பேச்சும், அவர்களின் தீய செயல்களும் எங்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். எங்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் காப்பாற்றுங்கள்.
(4) ச: க வீர: ந ரிஷ்யதி யம் இந்திர: பிரஹ்மணஸ்பதி: சோம:ஹினோதி மர்த்யம்॥
எந்த மனிதன் மீது பிரஹ்மணஸ்பதியுடன் இந்திரனும் சோமனும் அருள் புரிகிறார்களோ, அந்த பக்தன் ஒருபோதும் அழிவதில்லை அல்லது பலவீனமடைவதில்லை.
(5) த்வம் தம் பிரஹ்மணஸ்பதே சோம:
இந்திர: ச மர்த்யம் தக்ஷிணா பாது அஹம்சஹ॥
பிரஹ்மணஸ்பதியே! தாங்கள் இந்திரன், சோமன் மற்றும் தக்ஷிணா (தக்ஷ பிரஜாபதியின் மகள்) ஆகியோருடன் சேர்த்து, பக்தனை அவனது பாவங்களிலிருந்து காப்பாற்றி, அவனைப் பாதுகாக்க வேண்டும் என்பதே என் பணிவான பிரார்த்தனை.
(6) சதச: பதிம் அத்புதம் பிரியம் இந்த்ரஸ்ய காம்யம் சனிம் மேதாம் அயாசிஷம்॥
பிரஹ்மணஸ்பதியே! நீங்கள் எல்லா சபைகளுக்கும் அதிபதி. அதாவது, எங்கெல்லாம் ஒரு குழு உருவாகிறதோ, அங்கிருக்கும் கூட்டு உணர்வின் அதிபதி நீங்கள் தான். அதனால்தான், ஒரே நேரத்தில் பக்தர் குழுவில்
உள்ள அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடிய அதிக தாராள மனப்பான்மை கொண்டவர் நீங்கள். நீங்கள் கிராதருத்ரருக்கு மிகவும் பிரியமானவர். என் புத்தி, அதாவது என் அறிவு, கூர்மையாக இருக்க வேண்டும் என்று நான் உம்மிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
![]() |
ஸ்ரீஅனிருத்தகுருக்ஷேத்திரத்தில் ஸ்ரீசண்டிகாகுல் மற்றும் ஸ்ரீமூலர்க் விநாயகர் |
(7) யஸ்மாத் ரிதே ந சித்யதி ய: விபஷ்ச்சித: ஜ ந தீனாம் யோகம் இன்வதி॥
யாருடைய உதவியும் ஆதரவும் இல்லாமல் தவம் செய்பவர்களின் தவம், காயத்ரி உபாசகர்களின் யாகங்கள், மற்றும் அறிஞர்களின்
ஞானசாதானா வெற்றி பெற முடியாதோ, அந்த பிரஹ்மணஸ்பதி நம்பிக்கையாளர்களின் அறிவிற்கு தொடர்ந்து உத்வேகம் தருபவர்.
இந்த வரிகள் ‘ஞானசாதனாகாயத்ரி’ என்று அழைக்கப்படுகிறது, இதன் அனுஷ்டானத்தால் மூன்று விஷயங்கள் சித்தமாகின்றன. (அ) சாதகரின் அறிவு கூர்மையாகவும் வலிமையாகவும் ஆகிறது. (ஆ) பொருளைப் புரிந்துகொள்ளும் அவரது சக்தி வளர்ந்து கொண்டே இருக்கிறது. (இ) அவர் எவ்வளவு ஞானிகள் ஆனாலும், அவர் சண்டிகாகுலத்திடம் பணிவுடனும் சரணகதியுடன் இருப்பார்.
(8) ஆத் ரித்னோதி ஹவிஷ்க்ருதிம் ப்ராஞ்சம் க்ருணோதி அத்வரம் ஹோத்ரா தேவேஷு கச்சதி॥
இந்த மஹாபிரஹ்மணஸ்பதி யாகம் செய்பவர்களையும் விவசாயிகளையும் தொடர்ந்து முன்னேற்றுகிறார். இந்த பிரஹ்மணஸ்பதியே எல்லா வகையான யாகங்களையும் வெற்றிகரமாகவும் முழுமையாகவும் ஆக்குகிறார். இந்த பிரஹ்மணஸ்பதியே பரமாத்மாவைப் போற்றும் எங்கள் வாக்கை அர்த்தமுள்ளதாக்குகிறார்.
(9) நராஷஂசம் சுத்ருஷ்டமம் அபஸயம் ச ப்ரதஸ்தமம் திவஃ ந சத்ம-மகஹசம்॥
சூரியனை விடவும் ஒளிமிக்கவரும், மிகுந்த பராமிக்கவரும்
ஆனவரும், எந்தக் காரியத்தையும் எளிதாகச் செய்பவரும், பக்தர்களுக்கு மிகவும் பிரியமானவரும், மனிதர்களால் எப்போதும் முதலில் பூஜிக்கப்படுபவருமான பிரஹ்மணஸ்பதியை நான் கண்டேன், அவருடைய தரிசனத்தால் திருப்தி அடைந்தேன்.
தலையங்கத்தின் முடிவில் சத்குரு ஸ்ரீ அநிருத்த பாப்பூ எழுதுகிறார் -
‘என் அன்பான நம்பிக்கையுள்ள நண்பர்களே, நாம் அஷ்டவிநாயக பூஜையின் போதும் தரிசனத்தின் போதும் கிராதருத்ரபுத்ர பிரஹ்மணஸ்பதி மற்றும் பரமசிவபுத்ர கணபதி ஆகியோரின் ஒருமையை (ஒருவரே) உணர்த்தும் கௌரிபுத்ர வடிவத்தை வணங்குகிறோம்.’
![]() |
சத்குரு ஸ்ரீ அனிருத்தபாப்பூ மாஹி கணேஷோத்ஸவத்தின் போது அஷ்டவிநாயகரை தரிசிக்கும் சமயம் |
Comments
Post a Comment