வாழ்க்கை என்று சொன்னாலே, சின்னதும் பெரிதுமாக பிரச்சனைகள் வரத்தான் செய்யும், கஷ்டங்களும் கூடவே வந்துவிடும்! ஆனால், எங்கே சத்குரு அனிருத்தரின் ஆசீர்வாதம் இருக்கிறதோ, அங்கே அந்த கஷ்டங்கள் எல்லாம் சுலபமாக விலகிவிடும் என்பது ஒவ்வொரு பக்தரின் நம்பிக்கை. சத்குரு அனிருத்தரின் கருணையால், நானும் என் குடும்பமும் பல கடினமான சூழ்நிலைகளிலிருந்து ஒவ்வொரு கணமும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறோம்.
---------------------------------------
என்னுடைய முதல் அனுபவம் என் கல்வி மற்றும் நர்சிங் பயில்வதும் பற்றியது. 2019-ல், நான் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். என் மார்க் ஷீட்டை எடுத்துக்கொண்டு சுஜித்தாதாவைச் சந்திக்க தத்தநிவாசில் உள்ள ஸ்ரீதத்தா கிளினிக்கிற்குச் சென்றேன். ஸ்ரீகுருக்ஷேத்திரத்தில் மோட்டி ஆயி மஹிஷாசுரமர்தினியை தரிசனம் செய்துவிட்டு, தாதாவின் அனுமதியுடன் 'நர்சிங்' சேர முடிவு செய்தேன். தாதா எனக்கு வழிகாட்டி, "நர்சிங்கிற்காக 100% முயற்சி செய். பாப்பூவின் அருளால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்றார்.
ஒரே மாதத்தில், பி.எம்.சி.யில் நர்சிங் கோர்ஸ்கான விண்ணப்பங்கள் வந்தன. நான் மும்பையில் உள்ள சயான் மருத்துவமனையில் விண்ணப்பித்தேன். பட்டியல் வெளியானபோது, காத்திருப்போர் பட்டியலில் (waiting list) என் பெயர் 64-வது இடத்தில் இருந்தது. நான் தொடர்ந்து பாப்பூவிடம் பிரார்த்தனை செய்துகொண்டும், திரிவிக்ரம் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டும் இருந்தேன். இரண்டே நாட்களில் என்னை நேர்காணலுக்கு அழைத்தார்கள். அப்போது என் எண் 44-க்கு வந்திருந்தது. பாப்பூ நிச்சயம் எனக்கு நர்சிங்கில் இடம் வாங்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
அதன்பிறகு, மற்ற அரசு மருத்துவமனைகளிலும் நர்சிங்கிற்கான விண்ணப்பங்கள் கிடைக்க ஆரம்பித்தன. நான் இரண்டு மருத்துவமனைகளில் விண்ணப்பித்தேன். ஒரே வாரத்தில், ஒன்றில் எனக்கு இரண்டாவது இடமும், மற்றொன்றில் முதல் இடமும் கிடைத்தது. நான் உடனடியாக அங்கேயே 'ஜெய் ஜகதம்ப ஜெய் துர்கே' என்று சொல்லி, பாப்பூவிற்கு 'அம்பக்ஞ' சொன்னேன்.
முதலில் வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடம் இந்த நல்ல செய்தியைச் சொன்னேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு நேர்காணல் சுமுகமாக முடிந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்று நெஞ்சில் ஒரு படபடப்பு இருந்தது. ஆனாலும், எனக்கு எது சரியானதோ அதைத்தான் பாப்பூ செய்வார் என்ற நம்பிக்கை இருந்ததால், எனக்குக் கவலை ஏற்படவில்லை. திரிவிக்ரம் மந்திர ஜபமும் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. நேர்காணல் முடிந்து வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே, நான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எனக்குக் கடிதம் வந்தது. நான் உடனடியாக அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு ஸ்ரீ அனிருத்த குருக்ஷேத்திரம் சென்று, முதலில் மோட்டி ஆயி மஹிஷாசுரமர்தினியை தரிசனம் செய்தேன். அதன்பிறகு சுஜித்தாதாவைச் சந்திக்கச் சென்றேன். எனக்கு நர்சிங் அட்மிஷன் கிடைத்தது தெரிந்ததும் அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்று இந்த அனுபவத்தை எழுதும்போது, நான் நர்சிங் மூன்றாம் ஆண்டில் இருக்கிறேன். மோட்டி ஆயி மற்றும் பாப்பூவின் ஆசீர்வாதத்தினாலும், சுஜித்தாதாவின் சரியான வழிகாட்டுதலினாலும் என் படிப்பு சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இனியும் தாதாவின் வழிகாட்டுதலுடன்தான் என் அடுத்தகட்டப் படிப்பை எட்டுவேன்.
இப்போது என் இரண்டாவது அனுபவம். என்னுடைய இந்த அனுபவம் லாக்டவுன் காலத்தில் நடந்தது. விநாயகர் சதுர்த்திக்காக எனக்கு சில நாட்கள் விடுமுறை இருந்தது. விடுமுறையில் துணிகளை அயர்ன் செய்ய முடிவு செய்தேன். அயர்ன் செய்ய ஆரம்பித்து மெயின் சுவிட்சை அணைக்கப் போனபோது, திடீரென எனக்கு பயங்கரமாக மின்சாரம் தாக்கியது. என் வீட்டில் எலக்ட்ரிக் போர்டுக்குப் பக்கத்திலேயே ஒரு இரும்பு அலமாரியும், பாப்பூவின் ஆசீர்வாதப் புகைப்படமும் இருக்கிறது. நான் அந்த சுவிட்சில் ஒட்டிக்கொண்டேன். என் அம்மா உடனடியாக என் மீது ஒரு மர ஸ்டூலைத் தூக்கி அடித்தார்கள். அதே சமயம், யாரோ என்னைப் பலமாகத் தள்ளியது போன்றும் உணர்ந்தேன். அந்த நொடியிலேயே நான் தூக்கி வீசப்பட்டேன். ஷாக் பயங்கரமாக அடித்தது, ஆனால் நான் மிகவும் நலமாகவே இருந்தேன். எனக்கு ஓன்றும் ஆகவில்லை.
என் அம்மாவுக்கு அந்த மர ஸ்டூலைத் தூக்கி எறியும் புத்தியை பாப்பூதான் கொடுத்தார் என்றும், என்னைத் தள்ளிய கையும் பாப்பூவுடையதுதான் என்றும் நான் நம்புகிறேன்... ஏனென்றால் அங்கே பாப்பூவின் ஆசீர்வாதப் புகைப்படம் இருந்தது!
பாப்பூ எனக்காக ஓடிவந்து என்னைக் ஆபத்திலிருந்து காப்பாற்றினார்.
ஹரி ஓம் ஸ்ரீராம் அம்பக்ஞ
நாத்ஸம்வித்
Comments
Post a Comment