உத்தரேத் ஆத்மனா ஆத்மனம்[उध्दरॆत आत्मना आत्मनम्]

|| ஹரி ஓம் ||

தன்னைத்தானே முன்னேற்றம் காண்பீர்
சிறு வயதிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஏதாவதுசெய்யத்தோன்றும், அதாவது ஏதாவது மாற்றம் தேவை. இந்த வேண்டுமென்ற மாற்றமானது அந்தந்த மனிதருக்குஅவனுடைய எதிர்பாற்ப்புள்ள முன்னேற்றத்தின் பாதையாகும். சிறு பத்து வயது சிறுவனிலிருந்து   70 வயதுள்ள தள்ளாமை நிலையிலும் அவரவர் நிலமையில், நாம் இதைவிட அதிகமாக நல்லது ஏதாவது செய்திருக்க வேண்டும், நமக்கு இதைவிட நல்லநிலை வந்திருக்கக்கூடும் என்று தோண்றிக்கோண்டிருப்பது இயல்பே. மனிதனின் இந்த தன்னுடைய நிலையில் அதிகமாக நல்ல மாற்றம் கொண்டுவர அவனது ஆசையே அவனது முன்னேற்றத்துக்குக் காரணமாக உள்ளது. ஆனால் பல முறை,  முயற்சிப் பாதையே மாறி விடுகிறது , பலமுயற்சி செய்தும் பயனில்லாமல் போவது, தவிர வேண்டாத விஷயத்திற்கு முயற்சி செய்ததாகவும், செய்வதாகவும் ,இவ்வாறு நினைவுக்கு வரும். நம் வாழ்க்கை அமைதியாக், திருப்தியாக,நல்லமாற்றத்துடன் விருவிருப்பான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்ற ஒவ்வொருவரின் ஆசையும் சகஜமே. ஆனால் அப்படி ஆவதே இல்லையே. ஆகையால் வாழ்க்கையில் அடிக்கடி அமைதியின்மை,சமாதானம் இல்லாமை அதோடு சக்தியிழந்து அசந்துபோன அனுபவமே வரும்.
பல கனாக்களை கண்டோம் , பல சங்கல்பம் செய்தோம் , முடிவுகள் எடுத்தோம், ஆனால் அதன்படி அதற்கு தகுந்த முயற்சியுடன் செயல்பட்டோம், ஆனந்தம் அடைந்தோம்  என்று நடப்பதாக தெரிவதில்லை. வாழ்க்கையில் எல்லாவித ஐஸ்வர்யங்களுடன் முன்னேற்றத்துடன், மலர்ந்து , அமைதி, த்ருப்தி சமாதானத்தின் ஆனந்தத்தைத் திருடவே [அனுபவிக்கவே ] ,கீழ்வரும் வாக்கியத்தின் அர்த்தம் புரிந்து கொண்டு  அதன்படி செயல்படுவது அவசியம்.  
          உத்தரேத் ஆத்மனா ஆத்மனம் என்பதற்கு மிக எளிதான மொழியில் தன்னைத்தானே முன்னேற்றம் காண்பீர் என்பது பொருள், விரிவாக பார்த்தால், என்னுடைய வளர்ச்சி அல்லது முன்னேற்றம் நானேதான் செய்து கொள்ளமுடியும். அது ப்ரப்ஞ்சத்தில்[ உலகில்]  இயல்பான விஷயங்களான வாழ்க்கை ஆகட்டும், அல்லது நான் என்ற அகந்தையை பூரணமாக விட்டுவிட்டு பரமேஷ்வரனுடன் ஒன்றிப்போகும் மோக்ஷமடைய ஆன்மீக வாழ்க்கைப் பாதையே ஆகட்டும்,  நான்தான் பாடுபட வேண்டும். நாம் இங்குதான் தவருகிறோம். நாம் நம்முடைய வளர்ச்சிக்கு எதுவரை நம்மை சுற்றியிருக்கும் நிலை, மற்றவனின் உதவி,மந்திர தந்திரம் அல்லது, விதியின் பயனை நம்பி இருந்தால் நம் கோரிக்கை என்றும் நிறைவேறாது. எந்த ஒரு உசிதமான ந்யாயமான,முயற்ச்சிக்குப்பின்னால் தம் வலிமையை தாமே பெற வேண்டும். மற்றவரை நம்பிய வாழ்க்கையும், புஸ்தக படிப்பு மட்டும் என்றும் எந்த விஷயத்தையும் முழுமையாக சாதிக்காது. நமது சித்தம் நமது பாக்கியம் என்பது  போல் தன்னையே நம்பும் ஸ்வாவலம்பி [சுய நம்பகன்] ஆக சித்தமாவது அவசியம். எவர் ஸ்வாவலம்பி இல்லையோ அவன் ஊனமுற்றவனைப் [ physically challenged] போல் ஆவான்,அகையால் இயலாதவனும் ஆகிறான். "ஹெலன் கெல்லர்" போன்ற அங்கத்தில் பல ஊனங்கள் கொண்ட பெண், அவளது தன் நம்பிக்கை [ஸ்வாவலம்பி] கூடிய சுயமான வாழ்க்கைக்கான முயற்சியே உலகத்தையே ஊக்குவிக்கும் உதாரணமாகும். அப்படியிருக்கையில் எல்லாம் நன்றாக இருக்கும் திடகாத்திரமான நமக்கு ஏன் இயலாது?. நீங்கள் சொல்வீர்கள் ஹெலன் கெல்லருக்கு அவள் நிலையிலிருந்து வெளியில் கொண்டுவர அவளுடைய ஆசிரியை இருந்தார்களே?  ஆம் ,சரிதான். அங்க ஊனம் என்ற நிலமை அவளது அடக்கு அளவுகோலாக[Limitation] இருந்தும், முயற்ச்சி செய்ய ஆயத்தம் கொண்ட ,அந்த சிறுமியை ஏதாவது ரூபத்தில் ஆன்மீக சக்தியாக[பரமேஷ்வர சக்தியாக] கடவுள் க்ருபைதான் உதவியிருக்க வேண்டும். அந்த விடாமுயற்சி உள்ள ஊனமுற்ற சிறுமிக்கு ஆன்மீக அன்பே, கடவுள் க்ருபையே அந்த ஆசிரியையின் ரூபத்தில் அவதரித்திருந்தது. இல்லை கடவுள் க்ருபை, பரமேஷ்வரரின் பரிவு, ஆன்மீக அன்பு அங்கு வரவேண்டியதாயிற்று எனலாம்.
       
         முன்னேற்றம், வளர்ச்சி என்றால் உணமையாக என்ன?.பாபத்திலிருந்து [விடுதலை] முக்தி?, அதிக புண்ணியத்தின் ப்ரபாவம்[சேகரிப்பு] ,  ஏழ்மையிலிருந்து பணத்தை நோக்கி நடை, அநியாயத்திலிருந்து  நீதிப்பயணம், அல்லது மனம் தளர்ந்து நொந்து இருத்தலிலிருந்து சாமர்த்தியசாலியுமாவது,  என்று கூறினால் ,அதில் ஒன்றுகூட உண்மையில்லை. வாழ்க்கை வளர்ச்சி ,முன்னேற்றம் என்றால் ஆன்மிகப்பாதை மேற்கொண்டு , அதாவது , சத்தியம், அன்பு வழியில் சென்று ஆனந்தம் அடைய கிடைத்த அதிகாரம்[வாய்பு] ஆகும். ஆனால் சத்தியம் என்றால் என்ன? அன்பு என்றால் என்ன என்று தெளிவாக புரிந்து இருக்க வேண்டும். சத்தியம், வாஸ்தவம் இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். நான் சத்தியமே பேசுபவன் என்று வைத்துக்கோள்வோம். என்னிடம் ஒரு பெண் ஓடி வந்து, என்னை சில முறடர்கள்[குண்டாக்கள்] துறத்தி வருகின்றனர் உங்கள் வீட்டில் ஒளிந்து கொள்கிறேன் என்கிறாள் . அவளை ஒளிந்து கொள்ள சொல்லிவிட்டு, அந்த முறடர்கள் என்னை வந்து  கேட்க , சத்தியம் பேசுபவன் என்று,  அவளை பற்றிய வாஸ்தவத்தை சொல்லியிருந்தால் அது சத்தியமே ஆகாது. அதுவே பலாத்காரமாகும். கணடனத்துக்குறியது. அபவித்ரமான, வெறுக்கத்தக்க சம்பவத்திற்கு காரணமாகிவிடுவேன். அங்கு பெண்ணை காப்பதற்கு சொல்லும் பொய் சத்தியமே ஆகும்.  சத்தியம் என்பது பவித்ரத்தை காப்பதோடு,  பவித்ரத்தை  தயார் செய்கிறது. அது போன்ற சத்தியம்தான் எல்லாவற்றிர்க்கும் மேலானது. தன்னை த்தானே சத்தியம் பேசுவது நல்லது . அதை நாம் யாவரும் செய்வதில்லை.நாம் நம்மிடமே பொய் சொல்லிக்கொள்கிறோம். நம்முடைய நிலை, நம்மை சுற்றியிருக்கும் நிலையை சுட்டிக்காட்டி நம் புத்தியை நொண்டிச்சாக்குக்கு வலுக்கட்டி ஆமோதிக்க வைத்து, இங்கேயே நாம் முன்னேற்ற, வளர்ச்சிஅடையும் ஆற்றலை இழந்து விடுகிறோம். "நோண்டிச்சாக்கு"[ தேவையில்லா காரணம்]  என்னுடைய முழுவழ்க்கையை நாசம் செய்யும் மிகப்பெறிய அஸ்திரமே ஆகும்.
       எவன் தன் குற்றத்தை அறிந்து, அதை பொருட் படுத்தாது அதை திருத்த கஷ்டப்படுகிறானோ அவன்தான் வெற்றியடைந்தவன். பிறகு அவன் கோரிக்கை, பணம், கீர்த்தி,புகழ் அதுவே ஆதிக்த்திற்காகவோ  அல்லது பரமாத்மாவை அடைவதற்காகவே இருக்கட்டும், வாழ்க்கை பயணத்தில் ,  அன்பு இல்லை யெனில் , சத்தியம் நொண்டியாகவிடும். 
அன்பு என்பது , எதிர்ப்பார்ப்பு, லாபம் இல்லாத பரிவு,ஆறுதலேயாகும். இந்த அன்பே உலகத்தில் எல்லாவற்றிலும் வலிமையானதாகும். அன்பின் வலிமையின் முன் உலகில் எந்தவித எதிர் சக்தியான, துன்புருத்தும், ஹிம்சை செய்யும், ஸம்ஹாரம்  செய்யும் சக்திகள் தோல்வியே  அடையும். என்னுடைய உலகம்[ப்ரபஞ்சம்] அதாவது குடும்பம்[க்ரஹஸ்தாஸ்ரமம்], அன்பு, பரிவு காட்ட கற்றுக்கொள்ள எல்லாவற்றிலும் பெரிய, ஆனாலும்  மிக எளிதான காரியப் பள்ளியாகும்.  ஆனால் அங்கும் நமக்கு சிறிது மானபங்கம், அல்லது மனதுக்கு விரோதமான செயல்பாடு ,செயல்களினால், சிலரிடம் இருந்த பந்தம் , பாசம், முறியக்கூடும். இது  வீட்டில் இருக்கையில், வீட்டுக்கு வெளியிலோ கேட்கவே வேண்டாம். அங்கு சின்னச்சின்ன விஷயங்களுக்கு என்னுடைய , சகவாசம், சுற்றுச் சூழலில்  த்வேஷம்,வெறுப்பு , கோபம், ஆக்ரோஷம் மிகுந்திருந்தால் ,அவை என்னுடைய மூச்சோடு[ ஸ்வாஸத்தோடு] என்னுடைய வாழ்க்கையிலேயே நுழைந்து கொண்டிருக்கும். அதன் விஷத்தை நாமே அனுபவிக்கிறோம்.
         மனதார அன்பு காட்ட , அன்பு செலுத்த முயலுங்கள், அதோடு பவித்ரமான பாதையை விடாதீர்கள்.பிறகு உலகமே உமதாகும். காரணம் இந்த பரமாத்மாவின் ராஜ்யத்தில் சுதந்திர குடியரசே உள்ளது. குடியரசில்  எவ்வாரு ஒவ்வொரு குடிமகனும் ஆளுனர் ஆகிறான்,ஆள்பவரையும் தேர்ந்தெடுக்கிறான் , அது போல் ஒவ்வொருவனும் தன் ப்ராரப்தத்தை நடத்திக்கொள்கிறான்.. பரமாத்மா , பரமேஷ்வரன், ஒவ்வொரு  மனிதனுக்கும் கர்ம ஸ்வதந்த்ரயம் அதாவது செயல் செய்ய சுதந்திரம் அளித்திறிக்கிறான். மனிதனின் குடியரசு அவ்வாறு காக்கப்படுகிறது. அதைவிட , பலமுறை அதிகமான மனித உறிமை சுதந்திரம், வாக்களிக்கும் சுதந்திரம், வற்புருத்தும் பேச்சுறிமை சுதந்திரம்  கடவுள் அருளியிருக்கிறார். ஆனால் மனிதனின் குடியரசில் எந்தவிதமான மக்களளொ, ஜனங்களோ, அவர்கள் வாக்குறிமை சுதந்திரத்தின் சரியான உபயோகத்தை பொருத்துதான் அவ்வாரான அரசாங்கமும் அவர்களுக்கு அமைகிறது.
       அதேபோல் எப்படி ஒருவன் அவனது சத்திய நெறி,அன்பு நெறியோ அவ்வாரே ,அவனது விதிப்பயனும் அமையும். இப்போது பாருங்கள், நாம் சரிவர, வாக்களிப்பதில்லை, அவ்வாரே அளித்தாலும், ஒரு குறிக்கோளோ, மதிப்போ இல்லாது, புரியாது தெரியாது  செய்து விடுகிறோம், அதன் விளைவு நாட்டின் நல பல ஆதிக்கம் வேண்டாதவர்கள், தப்பானவர்கள் கையில் சிக்கக்கூடும். அதேபோல் என் வாழ்க்கையில் தவரான கொள்கைகள், நடத்தைகள் , தெளிவாக இல்லாததால் என்னுடைய வாழ்க்கை  கஷ்டமான நிலைக்கு இறையாகிறது.
             ப்ராரப்தம்[விதிப்பயனை]விட, புருஷார்த்தம் மேலானது. அதற்கு ஒத்துணையாக வலிமையளிக்கும் சத்தியம், அன்பு என்ற பரமேஷ்வர தத்துவத்தை விட்டுவிலகினால் இது ஒருபோதும் நடவாது. எந்த குடியரசு நாட்டில், அப்பாடா, நாங்கள் வாக்களித்துவிட்டோம், காரியம் முடிந்தது. எங்கள் ஒவ்வொரு தேவையும் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று  குடிமக்கள் சொல்வதாயின் அந்த நாடு வெரும் சிறிப்பதர்கேற்ற சர்கஸ் ஆகும். அதே போல் "அசேல் மாஜா ஹரி தர் தேயீ காட்ல்யாவரி" என்ற மராத்தி கவிதையின்  பொருள் எனது பகவான் பார்த்துக் கொள்வான், என் அதிர்ஷ்டம் முன் என்ன நடக்கும் என்ற எண்ணம்[தோரணை] என் முழுவாழ்க்கயையும் அவஹேலனத்துக்கு [ஏளனத்திற்கு] பலி ஆக்குகிறது.
        தன் வாழ்க்கையின் கூனல், குறுகல் ஒதுக்கிவிட்டு உணமையான சுயவாழ்க்கைதாரி [ஸ்வாவலம்பி] ஆகவேண்டுமென்றால் உண்மை[சத்தியம்], அன்பு கையாண்டு பரமேஷ்வரரே எனக்கு ஆதாரம் என்ற  திட நம்பிக்கை உடலில்  ஊற வேண்டும். ஆனால் சமூகத்தில் என்ன காண்கிறோம் ? பரமாத்மவை நாம் நம் ஊனுகோலாக ஆக்க முயல்கிறோம். உங்கள் பலஹீனத்தைப் போக்க  பரமாத்மா ,பரமேஷ்வரர் வெரும் ஊனுகோலோ, ஊனமூற்றோர் பயன் படுத்தும் தள்ளுவண்டியோ இல்லை என்று புரிந்து  கொள்ள வேண்டும். சத்தியம் , அன்பு இல்லாது செய்து வந்த அல்லது செய்துவரும் சேவை , செயல், செயல்முறை , பக்தி என்ற நாடகம் அதுவே ஊனமுற்றோர் தள்ளு வண்டியோ, ஊனுகோலோ  போல் ஆகும். அதன் உபயோகம் நமக்கு அதிகமான ஊனத்தையே தரும். ஆகையால் சத்தியம், அன்பின்  வழியில் செய்த பக்தியும் சேவையும் நம்மை பூரணமாக [ஸ்வாவலம்பி] முழுமையாக சுயநம்பிக்கையுடையவன் என்று நமக்கு என்றும் வெற்றியே தரும்.
பகவத் கீதை :" மூகம் கரோதி வாசாலம், பங்கும் லங்கயதே கிரிம்,
               யத்க்ருபா தம் அஹம் வந்தே, பரமானந்த மாதவம்"
               
              பொருள்     
               ஊமை பேசுகிறான், முடவன் மலையேறி தாண்டுகிறான்
               எல்லாம் உனது க்ருபையில், ஹே பரமானந்த மாதவா
               உன்னை ஷரண்புகுந்து  வணங்குகிறேன்."            

|| ஹரி ஓம் ||

Comments